Spoken English

இலகுவழி ஆங்கிலம் பாகம் 1

நபர்களை குறிக்க பயன்படும் முக்கிய சொற்கள்

I – நான்
My – என்னுடைய
Me – என்னை/ எனக்கு

He – அவன்
His – அவனுடைய
Him – அவனை/ அவனுக்கு

She – அவள்
Her – அவளுடைய
Her – அவளை/ அவளுக்கு

They – அவர்கள்
Their – அவர்களுடைய
Them – அவர்களை/ அவர்களுக்கு

We – நாங்கள்
Our – எங்களுடைய
Us – எங்களை/ எங்களுக்கு

You – நீ, நீங்கள்
Your – உங்களுடைய
You – உங்களை/ உங்களுக்கு

தெரிந்திருக்க வேண்டிய சில சொற் பயன்பாடுகள்

Ball – பந்து
A ball – ஒரு பந்து
The ball – அந்த பந்து

This- இது
This ball – இந்தப் பந்து
That – அது
That ball – அந்த பந்து
These – இவைகள்
These balls – இந்த பந்துக்கள்

Those – அவைகள்

வினைசொற்கள் இல்லாத வசனங்கள் சில

  • நான் ஒரு விவசாயி
    • I am a farmer
  • அவர்கள் கனடாவில் இருக்கிறார்கள்
    • They are in Canada
  • அவர்  ஒரு மீனவர்
    • He is a fisher
  • இது பெரியது
    • This is big
  • அந்த பேனா மேசைக்கு மேலே இருக்கிறது
    • The pen is on the table
  • இது என்னுடைய சட்டை
    • This is my shirt
  • அவன் எனது நண்பன்
    • He is my friend
  • நான் இங்கே இருக்கிறேன்
    • I am here
  • அவர்கள் இங்கே இருக்கிறார்கள்
    • They are here
பயிற்சி 1: தமிழிலே சொல்லுங்கள் 
  1. I am a boy
  2. He is in chennai
  3. We are students
  4. These are phones
  5. She is a tailor
  6. Those are computers

பயிற்சி 1: விடைகள்

  1. நான் ஒரு பையன்
  2. அவன் சென்னையில் இருக்கிறான்.
  3. நாங்கள் மாணவர்கள்
  4. இவைகள் தொலைபேசிகள்
  5. அவள் ஒரு தையல்காரி
  6. அவைகள் கணனிகள்

பயிற்சி 2: ஆங்கிலத்தில் சொல்லுங்கள்

  1. அவள் எனது நண்பி
  2. இது என்னுடைய துவிச்சக்கரவண்டி
  3. அவர்கள் விவசாயிகள்
  4. அவன் மாணவன்
  5. அது ஒரு சிறிய மரம்
  6. அது எனது புத்தகம்
  7. அவன் இந்தியாவிலே இருக்கிறான்

பயிற்சி 2 விடைகள்

  1. She is my friend
  2. This is my bicycle
  3. They are farmers
  4. He is a student
  5. That is small tree
  6. That is my book
  7. He is in India
வினைச்சொற்கள் இல்லாமல் வரும் வசனங்களை எதிர்மறை வசனங்களாக மாற்றலாம். இங்கே உதவி வினைசொற்களாக am, is, are, was, were, will உடன் not பயன்படுத்தப்படுவதனை கவனிக்கவும்.

நான் ஒரு விவசாயி இல்லை.
I am not a farmer

அவர்கள் கனடாவில் இல்லை
They are not in Canada

அவர்  ஒரு மீனவர் இல்லை
He is not a fisher

இது பெரியது இல்லை
This is not big

பேனா மேசைக்கு மேலே இல்லை
pen is not on the table

இது என்னுடைய சட்டை இல்லை
this is not my shirt

அவன் எனது நண்பன் இல்லை
He is not my friend

நான் இங்கே இல்லை
I am not here

பயிற்சி 3: தமிழிலே சொல்லுங்கள்

  1. This is not my umbrella
  2. We are not fools
  3. He is not my relative
  4. That is not her book.
  5. They are not in canada

பயிற்சி 3 விடைகள்

    1. இது என்னுடைய குடை இல்லை
    2. நாங்கள் முட்டாள்கள் இல்லை
    3. அவன் என்னுடைய உறவினர் இல்லை
    4. அது அவளுடைய புத்தகம் இல்லை
    5. அவர்கள் கனடாவில் இல்லை

பயிற்சி 4: ஆங்கிலத்திலே சொல்லுங்கள்

  1. அவள் எனது சகோதரி இல்லை
  2. அவன் மாணவன் இல்லை
  3. அவர்கள் அமெரிக்காவில் இல்லை
  4. இது சோதனைசாவடி இல்லை
  5. இது என்னுடைய சட்டை இல்லை

பயிற்சி 4 விடைகள்

    1. She is not my sister
    2. He is not a student
    3. They are not in America
    4. This is not Checkpoint
    5. This is not my shirt

கேள்விகள்

ஆங்கிலத்தில் கேள்விகள் இரு வகைப்படும்
  1. கேள்வி சொற்கள் இல்லாத கேள்விகள்
  2. கேள்வி சொற்கள் உள்ள கேள்விகள்
வினைச்சொற்கள் இல்லாமல் சாதாரணமான கேள்விகளை உருவாக்குவதற்கு am, is, are, was, were, will ஆகிய உதவி வினைச்சொற்கள் வசனத்திற்கு முன்பாக வரும்.
நான் ஒரு மருத்துவனா?
Am I a doctor?
அவர்கள் அமெரிக்காவில் இருக்கிறார்களா?
Are they in America?
அவன் எனது நண்பனா?
Is he my friend?
அது பெரியதா?
Is that big?
பென்சில் மேடையின் மேலே இருக்கிறதா?
Is the pencil on the table?
பயிற்சி 5: தமிழிலே சொல்லவும்
  1. Is that a bed?
  2. Are they in temple?
  3. Are you a teacher?
  4. Is it your mother?
  5. Is she in Chennai?
விடை
    1. அது கட்டிலா?
    2. அவர்கள் ஆலயத்தில் இருக்கிறார்களா?
    3. நீங்கள் ஆசிரியரா?
    4. இது உங்கள் அம்மாவுடையதா?
    5. அவள் சென்னையில் இருக்கிறாளா?
பயிற்சி 6 :ஆங்கிலத்தில் சொல்லுங்கள்
  1. அந்த கார் உங்களுடையதா?
  2. அது ஒரு நல்ல புத்தகமா?
  3. அவன் ஒரு திருடனா?
  4. அவள் உங்கள் சகோதரியா?
  5. அவர்கள் இங்கே இருக்கிறார்களா?
விடை:
    1. Is that car yours?
    2. Is that a good book?
    3. Is he a thief?
    4. Is she your sister?
    5. Are they here?

பாகம் 2

பாகம் 2ஐ கற்பதற்கு மேலே உள்ள பாகம் 2 என்பதை அழுத்துக.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

வணக்கம்! Ad Blocker யூஸ் பண்றீங்களா?

தொடர்ந்து கல்வி உலகு இணையத்தளத்தை படிக்க Ad Blocker-ல் Kalviulagu வலைதளத்தை exclude செய்யுங்கள்.