Spoken English

இலகுவழி ஆங்கிலம் – பாகம் 12

AM, IS, ARE, WAS, WERE, WILL BE – ABLE TO

இயலுமாயிருக்கிறது, முடிகிறது (Am, Is, Are – Able to)

1. நான் அங்கே போக இயலும்

I am able to go there

2. அவர்களால் வர இயலும்

They are able to come

3. அவனால் விளையாட இயலும்

He is able to play

4. என்னால் நடக்க இயலும்

I am able to walk

5. அவளால் சாப்பிட இயலும்

She is able to eat

6. அவர்களால் செலவு செய்ய இயலும்

They are able to spend

7. அவளால் வாசிக்க இயலும்

She is able to read

8. அவர்களால் வேலை செய்ய இயலும்

They are able to work

9. என்னால் தூங்க இயலும்

I am able to sleep

10. அவளால் பரீட்சை எழுத இயலும்

She is able to write exam

பயிற்சி 1: தமிழில் சொல்லவும்

1. I am able to study there

2. They are able to write letter

3. She is able to finish this work

4. He is able to work there

5. They are able to believe her

6. We are able to fight with them

7. She is able to cook well

8. They are able to explain that

9. We are able to play here

10. He is able to eat now

பயிற்சி 2: ஆங்கிலத்தில் சொல்லவும்

  1. அவர்களால் அதை கொண்டுவர இயலும்
  2. அவனால் இன்று வவுனியா போக இயலும்
  3. அவளால் இன்று அங்கே சாப்பிட இயலும்
  4. எங்களால் அதை நன்றாக செய்ய இயலும்
  5. என்னால சைக்கிள் ஓட இயலும்
  6. எங்களால் ஒரு கணினி வாங்க இயலும்
  7. அவனால் கிரிக்கெட் விளையாட இயலும்
  8. அந்தக்குழந்தையால் கதைக்க இயலும்
  9. நான் அங்கு வேலைசெய்ய இயலும்
  10. அவர்களால் அதை அனுப்ப இயலும்
 இயலுமாயிருந்தது (Was, Were – Able to)

1. அவர்களால் போக இயலுமாயிருந்தது

They were able to go

2. அவனால் இங்கு தங்க இயலுமாயிருந்தது

He was able to stay here

3. அவளால் பாட்டுப்பாட இயலுமாயிருந்தது

She was able to sing

4. என்னால் கடிதம் எழுத இயலுமாயிருந்தது

I was able to write letter

அவர்களால் வேலைசெய்ய இயலுமாயிருந்தது

They were able to work

5. அவனால் இரவில் படிக்க இயலுமாயிருந்தது

He was able to study at night

7. எங்களால் அறிவிக்க இயலுமாயிருந்தது

We were able to inform

8. அவளால் நன்றாக சமைக்க இயலுமாயிருந்தது

She was able to cook well

9. அவர்களால் இங்கு வர இயலுமாயிருந்தது

She was able to come here

10. என்னால் கொண்டுவர இயலுமாயிருந்தது

I was able to bring

பயிற்சி 3: தமிழில் சொல்லவும்

  1. We were able to play football
  2. I was able to celebrate my birthday party there
  3. She was able to study there
  4. I was able to cut the tree
  5. He was able to send the message
  6. They were able to swim there
  7. We were able to eat in a hotel
  8. She was able to pluck some fruits
  9. I was able to work there

பயிற்சி 4: ஆங்கிலத்தில் சொல்லவும்

  1. அவர்களால் அதை எடுத்துச்செல்ல இயலும்
  2. என்னால் ஒரு கதைப்புத்தகம் வாசிக்க இயலும்
  3. அவளால் அவர்களை கூப்பிட இயலும்
  4. எங்களால் போனவருடம் ஒரு வீடு கட்ட இயலும்
  5. என்னால் முத்திரை சேகரிக்க இயலும்
  6. அவனால் அங்கிருந்து எங்களுடன் கதைக்க இயலும்
  7. அவர்களால் திரும்பவும் அங்கு போக இயலும்
  8. என்னால் கார் ஓட்ட இயலும்
  9. அவர்களால் அதை அனுப்ப இயலும்
  10. அவளால் அங்கு வேலைசெய்ய இயலும்

 இயலுமாயிருக்கும் (Will be – Able to)

  1. நீங்கள் அங்கு போக இயலுமாயிருக்கும்
    • You will be able to go there
  2. அவனால் துப்பரவுசெய்ய இயலுமாயிருக்கும்
    • He will be able to clean
  3. உங்களால் அதை பார்க்க இயலுமாயிருக்கும்
    • You will be able to see that
  4. அவளால் தூங்க இயலுமாயிருக்கும்
    • She will be able to sleep
  5. எங்களால் பயிற்சிசெய்ய இயலுமாயிருக்கும்
    • We will be able to practice
  6. அவளால் அதை செய்ய இயலுமாயிருக்கும்
    • She will be able to do that
  7. எங்களால் அங்கு சாப்பிட இயலுமாயிருக்கும்
    • We will be able to eat there
  8. மீனாவால் சந்திக்க இயலுமாயிருக்கும்
    • Meena will be able to meet
  9. அவனால் படம் வரைய இயலுமாயிருக்கும்
    • He will be able to draw picture
  10. நான் வீட்டுக்குவர இயலுமாயிருக்கும்
    • I will be able to come home
 பயிற்சி 5: தமிழில் சொல்லவும்
  1. You will be able to stay with us
  2. They will be able to buy everything
  3. We will be able to watch TV there
  4. They will be able to teach us.
  5. We will be able to listen to them
  6. I will be able to buy a phone tomorrow
  7. You will be able to send them a letter
  8. He will be able to bring that parcel
  9. She will be able to come here.

 பயிற்சி 6 : ஆங்கிலத்தில் சொல்லவும்

  1. எங்களால் அதில் கலந்துகொள்ள இயலுமாயிருக்கும்
  2. என்னால் நாளைக்கு இதை முடிக்க இயலுமாயிருக்கும்
  3. அவர்களால் நன்றாக விளையாட இயலுமாயிருக்கும்
  4. உங்களால் அதை கொண்டுவர இயலுமாயிருக்கும்
  5. என்னால் அடுத்தவருடம் வெளிநாடு போக இயலுமாயிருக்கும்
  6. அவளால் பரீட்சை எழுத இயலுமாயிருக்கும்
  7. அவளால் அங்கு நாளைக்கு சமைக்க இயலுமாயிருக்கும்
  8. என்னால் உடுப்புக்களை தோய்க்க இயலுமாயிருக்கும்
  9. அவளால் அதை எடுக்க இயலுமாயிருக்கும்.
  10. நான் அங்கு வேலைசெய்ய இயலுமாயிருக்கும்

முடிந்தது (Could)

  1. என்னால் நன்றாக கார் ஓட்ட முடிந்தது
    • I could drive the car well
  2. அவளால் என்னுடன் கதைக்க முடிந்தது
    • She could speak to me
  3. என்னால் அவருக்கு உதவ முடிந்தது
    • I could help him
  4. அவளால் ஓய்வெடுக்க முடிந்தது
    • She could take rest
  5. அவர்களால் அங்கு நடனமாட முடிந்தது
    • They could dance there
  6. என்னால் இன்று அதை செய்ய முடிந்தது
    • I could do that today
  7. அவளால் அதை பூர்த்திசெய்ய முடிந்தது
    • She could complete that
  8. எங்களால் ரேடியோ கேட்க முடிந்தது
    • We could listen to the radio
  9. அவர்களால் ஒரு கணினி வாங்க முடிந்தது
    • They could buy a computer
  10. அவளால் புத்தகத்தை வாசிக்க முடிந்தது
    • She could read the book

பயிற்சி 7: தமிழில் சொல்லவும்

  1. They could study that subject
  2. I could speak to him
  3. He could participate in that program
  4. We could go there on time
  5. We could build a house
  6. She could do that again
  7. I could explain that clearly
  8. She could introduce them to us
பயிற்சி 8: ஆங்கிலத்தில் சொல்லவும்
  1. அவளால் அதை எங்களுக்கு விளக்க முடிந்தது
  2. என்னால் அந்த நாடகத்தை பார்க்க முடிந்தது
  3. அவளால் எங்களுக்கு ஒரு கடிதம் எழுத முடிந்தது
  4. என்னால் ஒரு ரீவீ வாங்க முடிந்தது
  5. அவளால் அங்கு ஒருமாதம் தங்க முடிந்தது
  6. அவர்களால் இங்கு வசிக்க முடிந்தது
  7. என்னால் அங்கு நேற்று நன்கு தூங்க முடிந்தது
  8. அவளால் இன்று நன்றாக சமைக்க முடிந்தது
  9. அவனால் அவளை சந்திக்க முடிந்தது
  10. நான் நேற்று பரீட்சை எழுத முடிந்தது

 பயிற்சி 9: ஆங்கிலத்தில் சொல்லவும்

  1. அவனால் நாளை வேலைசெய்ய முடியும்
  2. என்னால் அதற்கு விண்ணப்பிக்க முடியும்
  3. அவளால் நேற்று ஒரு கதை எழுத முடியும்
  4. அவர்களால் அங்கு நீந்த முடியும்
  5. அவளால் அடுத்த வருடம் வெளிநாடு போக முடியும்.
  6. அவனால் இங்கு வாழ முடியும்
  7. அவனால் படம் வரைய முடியும்
  8. அவர்களால் நாளை இங்கு வர முடியும்
  9. சேகர் நேற்று அவளை அறிமுகப்படுத்த முடியும்
  10. அவனால் அங்கு கிரிக்கெட் விளையாட முடியும்
  11. நான் என்னுடைய கணினியில் வேலைசெய்ய முடியும்
  12. அவன் இந்த வேலையை கையாள முடியும்
  13. அவர்களால் அந்த பிரச்சினையை தீர்க்க முடியும்
  14. அவளால் நீண்ட தூரம் பிரயாணம் செய்ய முடியும்
  15. அவனால் பாடசாலை நிகழ்வில் பங்குபற்ற முடியும்

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

வணக்கம்! Ad Blocker யூஸ் பண்றீங்களா?

தொடர்ந்து கல்வி உலகு இணையத்தளத்தை படிக்க Ad Blocker-ல் Kalviulagu வலைதளத்தை exclude செய்யுங்கள்.