Spoken English

இலகுவழி ஆங்கிலம் – பாகம் 14

கொண்டு வினைவடிவம் (ING FORM)

நிகழ் காலம்

1. அவன் வருகிறான்
He is coming
அவர்கள் சாப்பிடுகிறார்கள்
They are eating
3. அவன் எழுதுகிறான்
He is writing
4. நாங்கள் கிரிக்கெட் விளையாடுகிறோம்
We are playing cricket
5. அவன் காத்துக்கொண்டிருக்கிறான்
He is waiting
6. அவள் பத்திரிகை வாசிக்கிறாள்
She is reading the newspaper
7. அம்மா தேனீர் தயாரிகிறார்
Mom is preparing tea
8. அவர்கள் பரீட்சை எழுதுகிறார்கள்
They are writing the exam

பயிற்சி 1 : தமிழில் சொல்லவும்.

1. They are reading now
2. He is living here
3. He is studying at 10th grade
4. They are listening to music
5. She is sleeping in the room
6. She is coming there
7. We are studying

பயிற்சி 2 : ஆங்கிலத்தில் சொல்லவும்.

1. அவள் சமையலறையில் இப்போது சமைக்கிறாள்
2. நாங்கள் வீடு கட்டிக்கொண்டிருக்கிறோம்
3. அவன் ஒரு கதை எழுதுகிறான்
4. அவர்கள் அதை விளங்கப்படுத்துகிறார்கள்
5. நீ அந்த வேலையை செய்துகொண்டிருக்கிறாய்

இறந்த காலம்

1. அவர்கள் விளையாடிக்கொண்டிருந்தார்கள்
They were playing
2. அவள் அவனை நம்பிக்கொண்டிருந்தாள்
She was believing him
3. அவன் அங்கே திருடிக்கொண்டிருந்தான்
He was stealing there
4. அவள் படிப்பித்துக்கொண்டிருந்தாள்
She was teaching
5. அவன் சைக்கிள் திருத்திக்கொண்டிருந்தான்
He was repairing the bicycle
6. அவன் அதை பார்த்துக்கொண்டிருந்தான்
He was seeing that
7. அவர்கள் உங்களை கூப்பிட்டுக்கொண்டிருந்தார்கள்
They were calling you
8. நாங்கள் நேற்று விளையாடிக்கொண்டிருந்தோம்
We were playing yesterday

பயிற்சி 3 : தமிழில் சொல்லவும்

1. We were expecting them
2. I was writing an essay
3. They were asking about that
4. We were informing them
5. I was wondering
6. I was talking to him
7. They were doing something

பயிற்சி 4 : ஆங்கிலத்தில் சொல்லவும்.

1. அவள் கேக் தயாரித்துக்கொண்டிருந்தாள்
அவர்கள் எங்களை ஏமாற்றிக்கொண்டிருந்தார்கள்
நாங்கள் அந்தக்கடையில் பொருட்கள் வாங்கிக்கொண்டிருந்தோம்
4. அவன் அவற்றை விற்பனைசெய்துகொண்டிருந்தான்
5. அவள் வீட்டை அலங்கரித்துக்கொண்டிருந்தாள்

எதிர் காலம்

1. நான் TV பார்த்துக்கொண்டிருப்பேன்
I will be watching the TV
2. நாங்கள் விளையாடிக்கொண்டிருப்போம்
We will be playing
3. அவள் சந்தைக்குப் போய்க்கொண்டிருப்பாள்
She will be going to the market
4. அவர்கள் இப்ப வந்துகொண்டிருப்பார்கள்
They will be coming now
5. நாங்கள் மாம்பழம் சாப்பிட்டுக்கொண்டிருப்போம்
We will be eating the mango
நான் உங்களைப்பற்றி யோசித்துக்கொண்டிருப்பேன்
I will be thinking about you
அவர்கள் காத்துக்கொண்டிருப்பார்கள்
They will be waiting
அவன் கதவைத் தட்டிக்கொண்டிருப்பான
He will be knocking the door

பயிற்சி 5 : தமிழில் சொல்லவும்.

1. He will be eating ice-cream
2. He will be staying here
3. She will be studying in the room
4. We will be telling them about that
5. He will be studying there
6. They will be searching that

பயிற்சி 6 : ஆங்கிலத்தில் சொல்லவும்.

1. நாங்கள் நாளை இதை செய்துகொண்டிருப்போம்
2. அவர்கள் அடுத்தமாதம் பரீட்சை எழுதிக்கொண்டிருப்பார்கள்
3. அவள் என்னை திட்டிக்கொண்டிருப்பாள்
4. அவன் அதை ஒழுங்குபடுத்திக்கொண்டிருப்பான்
5. நான் அதை முடித்துக்கொண்டிருப்பேன்
6. நாங்கள் அங்கு வேலை செய்துகொண்டிருப்போம்

Has been, Have been (தற்போதுவரை – ஒரு குறிப்பிட்ட காலத்திலிருந்து (Since) அல்லது ஒரு குறிப்பிட்ட காலமாக (for) )

1. நாங்கள் இரண்டு வருடமாக படிக்கிறோம்
we have been studying for two years
2. அவன் 2002 இலிருந்து இங்கே வசிக்கிறாள்
He has been living here since 2002
3. அவள் மூன்று வருடமாக எங்களுடன் கதைத்துக்கொண்டிருக்கிறாள்
She has been talking to us for three years
4. நான் 2000 ஆம் ஆண்டிலிருந்து வேலைசெய்கிறேன்
I have been working since 2000
5. அவன் ஐந்து வருடமாக முயற்சி செய்கிறான்
He has been trying for five years

பயிற்சி 7 : தமிழில் சொல்லவும்.

1. She has been cooking for three hours
2. They have been collecting stamps since 1996
3. You have been playing here for three months
4. He has been doing that since last week
5. I have been sending letter to her for two years

பயிற்சி 8 : ஆங்கிலத்தில் சொல்லவும்.

1. அவர்கள் இங்கு பல வருடமாக தங்கிக்கொண்டிருக்கிறார்கள்
2. அவர்கள் நேற்றிலிருந்து இங்கு படிக்கிறார்கள்
அவள் இங்கு நீண்டநேரமாக தூங்குகிறாள்
4. அவன் பத்துமணியிலிருந்து ஏதோ எழுதுகிறான்
5. அவன் ஒரு மணிநேரமாக சாப்பிடுகிறான்

Had been இறந்தகாலத்தில் ஒரு குறிப்பிட்ட காலத்திலிருந்து (Since) அல்லது ஒரு குறிப்பிட்ட காலமாக (for)

1. அவர்கள் நேற்று மூன்று மணிநேரமாக படித்துக்கொண்டிருந்தார்கள்
They had been studying yesterday for three hours
2. அவன் போன மாதத்திலிருந்து அதை சொல்லிக்கொண்டிருந்தான்
He had been telling this since last month
3. அவள் பலகாலமாக அந்த அலுவலகத்தில்
வேலைசெய்துகொண்டிருந்தாள் She had been working in that office for long
4. நாங்கள் நான்கு வருடமாக பயிற்சி செய்துகொண்டிருந்தோம்
We had been practicing for four years
5. அவர்கள் அன்றிலிருந்து முயற்சிசெய்துகொண்டிருந்தார்கள்
They had been trying that since that day
6. நான் அங்கு 2004 இலிருந்து வெலைசெய்துகொண்டிருந்தேன்
I had been working there since 2004

பயிற்சி 9 : தமிழில் சொல்லவும்.

1. They had been discussing something for two hours yesterday
2. We had been attending meeting since last week
3. He had been thinking about that for a long time
4. She had been preparing meals for three hours on that day
5. They had been teaching in this school for five years since 2000

பயிற்சி 10 : ஆங்கிலத்தில் சொல்லவும்.

1. அவன் நான்கு மணிநேரமாக காத்துக்கொண்டிருந்தான்
2. அவர்கள் நேற்று எட்டுமணியிலிருந்து எழுதிக்கொண்டிருந்தார்கள்
3. அவன் மூன்று வருடங்களாக அங்கே தங்கிக்கொண்டிருந்தாள்
4. நாங்கள் கடந்த மாதத்திலிருந்து அதில் பங்கு பற்றிக்கொண்டிருந்தோம்
5. நீங்கள் ஒரு வாரமாக அதனை வாசித்துக்கொண்டிருந்தீர்கள்

பயிற்சி 11 : ஆங்கிலத்தில் சொல்லவும்.

1. அவர்கள் பரீட்சைக்கு தயார் செய்து கொண்டிருந்தார்கள்
2. நாங்கள் தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருக்கிறோம்
3. அவன் அவளுக்கு கடிதம் எழுதிக்கொண்டிருப்பான்
4. நீங்கள் ஏதாவது செய்து கொண்டிருப்பீர்கள்
5. நான் உங்களை ஒரு வருடமாக எதிர்பார்த்துக் கொண்டிருந்தேன்
6. அவள் நீண்டநேரமாக உணவுதயாரித்துக் கொண்டிருக்கிறாள்
7. அவள் கணினியில் வேலை செய்து கொண்டிருக்கிறாள்
8. அவள் விளக்குக கொழுத்திக் கொண்டு இருந்தாள்
9. அவர்கள் ஒரு மணியிலிருந்து ரீவீ பார்த்துக்கொண்டிருக்கிறார்கள்
10. அவன் ஏதோ எழுதிக்கொண்டிருக்கிறான்
11. அவன் நாளை கார் ஓட்டிக்கொண்டிருப்பான்
12. நாங்கள் இப்போது அங்கு வந்துகொண்டிருக்கிறோம்
13. அவள் நேற்று அதை வாங்கிக்கொண்டிருந்தாள்
14. நீங்கள் அதை விபரித்துக்கொண்டிருந்தீர்கள்
15. அவர்கள் அந்த நிகழ்ச்சியை ஆரம்பித்துக்கொண்டிருப்பார்கள்
16. நான் அங்கு இரண்டு மணிநேரமாக வேலைசெய்துகொண்டிருந்தேன்
17. அவர்கள் இந்த மேசையை சுத்தம்செய்துகொண்டிருந்தார்கள்
18. நான் கணினியிலே வேலை செய்துகொண்டிருக்கிறேன்.
19. அவர்கள் பல மணி நேரமாக எனக்காக காத்துக்கொண்டிருந்தார்கள்
20. அவன் எனக்கு அதை விளங்கப்படுத்திக்கொண்டிருந்தான்.
21. அவர்கள் காலையிலிருந்து படித்துக்கொண்டிருக்கிறார்கள்
22. அவள் எனக்கு உதவி செய்துகொண்டிருப்பாள்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

வணக்கம்! Ad Blocker யூஸ் பண்றீங்களா?

தொடர்ந்து கல்வி உலகு இணையத்தளத்தை படிக்க Ad Blocker-ல் Kalviulagu வலைதளத்தை exclude செய்யுங்கள்.