Spoken English

இலகுவழி ஆங்கிலம் – பாகம் 6

இருக்குது, இருந்தது, இருக்கும்

(நபர் சம்பந்தப்படாத வசனங்கள்)

  • மரத்துக்குக் கீழே பாம்பு இருந்தது
    • There was a snake under the tree
  • அடுத்த வருடம் பாடசாலை இருக்கும்
    • There will be school next year
  • நாளைக்கு சண்டை இருக்கும்
    • There will be a fight tomorrow
  • இன்று கருத்தரங்கு இருக்கும்
    • There will be a seminar today
  • நேற்று ஒரு கூட்டம் இருந்தது
    • There was a meeting yesterday
  • நாளைக்கு லீவு இருக்கும்
    • There will be holiday tomorrow
  • அந்த அறையில் மேசை இருந்தது
    • There was a table in that room
  • அந்த கிணற்றுள் மீன் இருந்தது
    • There was fish in that well
  • அடுத்தவாரம் வேலைநிறுத்தம் இருக்கும்
    • There will be strike next week
  • பஸ் நிறுத்தத்தில் பஸ் இருந்தது
    • There was a bus at the bus stop
  • நாளைக்கு ஒரு விருந்து இருக்கும்
    • There will be a party tomorrow
பயிற்சி 3: தமிழில் சொல்லவும்
  1. There was a TV on the table
  2. There will be a class tomorrow
  3. There was a drama on TV
  4. There were some problems
  5. There will be a work tomorrow
  6. There will be an exam next week
  7. There was a canteen in the office
  8. There were fruits in the basket
  9. There will be some students
பயிற்சி 4 : ஆங்கிலத்தில் சொல்லவும்
  1. வீட்டுக்குப்பக்கத்தில் ஒரு கடை இருந்தது
  2. மேசைக்கு மேல் ஒரு வானொலி இருந்தது
  3. நாளைக்கு ஒரு போட்டி இருக்கும்
  4. சீனிப்போத்தலில் சில எறும்புகள் இருந்தன
  5. அந்தச் சந்தியில் பல கடைகள் இருந்தன
  6. அடுத்த வாரம் ஒரு போட்டி இருக்கும்
  7. நாளைக்கு ஒரு விசேட நிகழ்ச்சி இருக்கும்
  8. அந்த நேரத்தில் ஒரு பஸ் இருந்தது
  9. அங்கே ஒரு விபத்து இருந்தது 
இது தொடர்பான மேலதிக பயிற்சிகளை செய்ய கீழே உள்ள பயிற்சி எனும் பொத்தானை அழுத்துக!
 

இருக்குது – கேள்விகள் – 1

நபர் சம்பந்தப்பட்ட வசனங்கள்

கேள்விகளில் வரும்போது Has ஆனது Does Have ஆக மாற்றப்பட்டு Does வசனத்தின் முன்பாக வரும். Have ஆனது Do Have ஆக மாற்றப்பட்டு கேள்விகளில் DO வசனத்தின் முன்பாக வரும். அதேபோல் Had ஆனது Did Have ஆக மாற்றப்பட்டு கேள்விகளில் Did வசனத்தின் முன்பாக வரும்.

  • Has = Does + have
  • Have = Do + have
  • Had = Did + have
  1. அவர்களுக்கு வகுப்பு இருந்தது
    • They had class
  2. அவர்களுக்கு வகுப்பு இருந்ததா?
    • Did they have class?
  1. எங்களிடம் புது வீடு இருக்கிறது
    • We have new house
  2. எங்களிடம் புது வீடு இருக்கிறதா?
    • Do we have new house?
  1. அவனுக்கு காய்ச்சல் இருந்தது
    • He had fever
  2. அவனுக்கு காய்ச்சல் இருந்ததா?
    • Did he have fever?
  1. அவனுக்கு நாளை வேலை இருக்கும்
    • He will have work tomorrow
  2. அவனுக்கு நாளை வேலை இருக்குமா?
    • Will he have work tomorrow?

இலகுவழி ஆங்கிலம் – பாகம் 6 இற்கான மேலதிக பயிற்சிகள்!

இலகுவழி ஆங்கிலம் – பாகம் 7

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

வணக்கம்! Ad Blocker யூஸ் பண்றீங்களா?

தொடர்ந்து கல்வி உலகு இணையத்தளத்தை படிக்க Ad Blocker-ல் Kalviulagu வலைதளத்தை exclude செய்யுங்கள்.