Spoken English

இலகுவழி ஆங்கிலம் பாகம் 8

நபர் சம்பந்தப்படாத வசனங்கள்

சாதாரண கேள்விகள் 

  1. வீதியில் ஒரு மாடு இருந்தது 
    • There was a cow on the road
  2. வீதியில் ஒரு மாடு இருந்ததா?
    • Was there a cow on the road?
  1. மரத்தில் பறவைகள் இருக்கின்றன.
    • There are birds on the tree
  2. மரத்தில் பறவைகள் இருக்கின்றனவா?
    • Are there birds on the tree?
  1. நாளை ஒரு வகுப்பு இருக்கும் 
    • There will be a class tomorrow
  2. நாளை ஒரு வகுப்பு இருக்குமா?
    • Will there be a class tomorrow?
  1. இன்று ஒரு பரீட்சை இருக்கிறது
    • There is an exam today
  2. இன்று ஒரு பரீட்சை இருக்கிறதா?
    • Is there an exam today?
  1. நேற்று ஒரு படம் இருந்தது 
    • There was a movie yesterday
  2. நேற்று ஒரு படம் இருந்ததா?
    • Was there a movie yesterday?
  1. மரத்தில் ஒரு குருவிக்கூடு இருந்தது 
    • There was a nest on the tree
  2. மரத்தில் ஒரு குருவிக்கூடு இருந்ததா?
    • Was there a nest on the tree?
  1. பெட்டியில் பென்சில்கள் இருக்குது
    • There are pencils in that box
  2. பெட்டியில் பென்சில்கள் இருக்குதா?
    • Are there pencils in that box 
  1. மரத்துக்குக் கீழேபாம்பு இருந்தது
    • There was a snake under the tree
  2. மரத்துக்குக் கீழே பாம்பு இருந்ததா?
    • Was there a snake under the tree?
  1. நாளைக்கு சண்டை இருக்கும்
    • There will be a fight tomorrow
  2. நாளைக்கு சண்டை இருக்குமா?
    • Will there be a fight tomorrow
  1. இன்று ஒரு கருத்தரங்கு இருக்குது
    • There is a seminar today
  2. இன்று ஒரு கருத்தரங்கு இருக்குதா?
    • Is there a seminar today?
  1. நேற்று ஒரு கூட்டம் இருந்தது
    • There was a meeting yesterday
  2. நேற்று ஒரு கூட்டம் இருந்ததா?
    • Was there a meeting yesterday? 
  1. நாளைக்கு ஒரு லீவு இருக்கும்
    • There will be a holiday tomorrow
  2. நாளைக்கு ஒரு லீவு இருக்குமா?
    • Will there be a holiday tomorrow?
  1. அந்த அறையில் மேசை இருக்குது
    • There is a table in that room
  2. அந்த அறையில்மேசை இருக்குதா?
    • Is there a table in that room?
  1. அந்த கிணற்றுள் மீன் இருந்தது
    • There was fish in that well
  2. அந்த கிணற்றுள்மீன் இருந்ததா?
    • Was there fish in that well?

பயிற்சி 3 : தமிழில் எழுதுக

  1. Was there a tree near the house?
  2. Is there a special class tomorrow?
  3. Will there be a drama tomorrow?
  4. Were there people in the bank?
  5. Will there be work tomorrow?
  6. Are there guests in your house?
  7. Was there any new note book?
  8. Will there be any program?

விடைகள்

  1. வீட்டுக்கு பக்கத்தில் மரம் இருந்ததா?
  2. நாளை சிறப்பு வகுப்பு இருக்கிறதா?
  3. நாளை நாடகம் இருக்குமா?
  4. வங்கியில் மக்கள் இருந்தார்களா?
  5. நாளை வேலை இருக்குமா?
  6. வீட்டில் விருந்தினர்கள் இருக்கிறார்களா?
  7. ஏதாவது புதிய கொப்பி இருந்ததா?
  8. ஏதாவது நிகழ்வு இருக்குமா?

பயிற்சி 4 : ஆங்கிலத்தில் எழுதுக

  1. வீட்டுக்குப்பக்கத்தில் கடை இருக்குதா?
  2. நாளைக்கு போட்டி இருக்குமா?
  3. நேற்று ஒரு விபத்து இருந்ததா?
  4. வகுப்பில் நாற்பது மேசைள் இருக்கிறதா?
  5. இந்த நேரம் பஸ் இருக்குமா?
  6. அந்த சந்தியில் பல கடைகள் இருந்ததா?
  7. சீனிப்போத்தலுள் எறும்பு இருக்குமா?
  8. மேசையில் வானொலி இருக்குதா?

விடைகள்

  1. Is there shop near the house?
  2. Will there be a match tomorrow
  3. Was there an accident yesterday?
  4. Are there forty tables in the class?
  5. Will there be bus this time?
  6. Were there many shops at the junction?
  7. Will there be ants in the sugar bottle?
  8. Is there a radio on the table?

எதிர்மறைகள் மற்றும் கேள்விச்சொற்களுடன் கேள்விகள்

  1. நாளைக்கு விருந்து இருக்கும்
    • There will be a party tomorrow
  2. நாளைக்கு விருந்து இருக்காது
    • There will not be a party tomorrow
  3. நாளைக்கு விருந்து இருக்குமா?
    • Will there be a party tomorrow
  4. நாளைக்கு ஏன் விருந்து இருக்கும்?
    • Why will there be a party tomorrow
  1. இன்று வேலை நிறுத்தம் இருக்குது
      • There is the strike today
  2. இன்று எந்த வேலை நிறுத்தமும் இல்லை
    • There is no strike today
  3. இன்று எங்கே வேலைநிறுத்தம் இருக்குது
    • Where is (there) the strike today
  1. மரத்தில் ஒரு பறவை இருந்தது
    • There was a bird on the tree
  2. மரத்தில் பறவை இருக்கவில்லை
    • There was no bird on the tree
  3. மரத்தில் ஒரு பறவை இருந்ததா?
    • Was there a bird on the tree?
  4. மரத்தில் எப்படி ஒரு பறவை இருந்தது?
    • How was there a bird on the tree?
  1. வீதியில் ஒரு மாடு இருந்தது
    • There was a cow on the road
  2. வீதியில் மாடு இருக்கவில்லை
    • There was no cow on the road
  3. வீதியில் ஒரு மாடு இருந்ததா?
    • Was there a cow on the road?
  4. வீதியில் எப்படி ஒரு மாடு இருந்தது?
    • How was there a cow on the road?
  1. இன்று வகுப்பு இருக்குது
    • There is a class today
  2. இன்று வகுப்பு இல்லை
    • There is no class today
  3. இன்று வகுப்பு இருக்குதா?
    • Is there a class today?
  4. இன்று ஏன் வகுப்பு இருக்குது?
    • Why is there a class today?
  1. நாளைக்குப் பரீட்சை இருக்கும்
    • There will be an exam tomorrow
  2. நாளைக்குப் பரீட்சை இருக்காது
    • There will not be an exam tomorrow
  3. நாளைக்குப் பரீட்சை இருக்குமா?
    • Will there be an exam tomorrow?
  4. நாளைக்கு ஏன் பரீட்சை இருக்கும்?
    • Why will there be an exam tomorrow?
  1. மரத்தில் குருவிக்கூடு இருந்தது
    • There was a nest on the tree
  2. மரத்தில் குருவிக்கூடு இருக்கவில்லை
    • There was no nest on the tree
  3. மரத்தில் குருவிக்கூடு இருந்ததா?
    • Was there nest on the tree?
  4. மரத்தில் எப்படி குருவிக்கூடு இருந்தது?
    • How was there nest on the tree?
  1. பெட்டியில் பென்சில்கள் இருக்குது
    • There are pencils in that box
  2. பெட்டியில் பென்சில்கள் இல்லை
    • There are no pencils in that box
  3. பெட்டியில் பென்சில்கள் இருக்குதா?
    • Are there pencils in that box?
  4. பெட்டியில் எப்படி பென்சில்கள் இருக்குது?
    • How are (there) pencils in that box?

 

இலகுவழி ஆங்கிலம் – பாகம் 9

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

வணக்கம்! Ad Blocker யூஸ் பண்றீங்களா?

தொடர்ந்து கல்வி உலகு இணையத்தளத்தை படிக்க Ad Blocker-ல் Kalviulagu வலைதளத்தை exclude செய்யுங்கள்.