GCE A/L

அறுவகைச் சமயம்

ஆறு + சமயம் = அறுவகைச் சமயம். இந்தியாவில் தோற்றம் பெற்ற மதங்களுள் வேதத்தை ஏற்றுக்கொண்ட வைதீக சமயங்கள் அறுவகைச் சமயங்கள் அல்லது சண்மதங்கள் எனப்படும் அவை

  • காணாபத்தியம்
  • சைவம்
  • வைணவம்
  • சாக்தம்
  • கௌமாரம்
  • சௌரம்

சங்கரரது காலத்தில் இம் மதங்களிடையே போட்டி பொறாமைகள் இருந்தன இவற்றை சீர் செய்து ஒவ்வொரு மதத்திற்குமான ஆகமங்கள் பிராமண நூல்கள் என்பவற்றை வகுத்து இம் மதங்களின் முழுமுதற் கடவுள்களிடையே உறவு முறைகளை நிலை நாட்டி சண்மதங்களை மீள் ஸ்தாபனம் செய்தவர் ஆதி சங்கரர் ஆவார். இம் மதங்கள் இன்று வரை செல்வாக்குடனும் , சிறப்புடனும் விளங்குகின்றது.

அறுவகைச்சமயம் 1 – காணாபத்தியம்

ஓம் என்ற பிரணவப் பொருளின் உருவமாயுள்ள கணபதியை முழுமுதற் கடவுளாக வழிபடுபவர்களை காணாபத்தியர்கள் என்பர். அறுவகை சமயங்களுள் முதன்மையானதாக காணாபத்தியம் விளங்குகின்றது.

காணாபத்தியம் பற்றிய தோற்றம் பற்றிய சிந்தனைகள் வேத உபநிடதங்களிலும், ஆகமங்களிலும் சிறப்பாக காணபடுகின்றன. இதிகாச புராணங்களிலே வினாயகரைப் பற்றிய சிறப்பான கருத்துக்கள் காணபடுகின்றன. இருக்கு வேதத்திலே கணபதி உருத்திர கணங்களுள் ஒன்றாக வைத்து வழிபடப்பட்டுருகிறார்.சுப்ரபேத ஆகமத்திலே கணபதி கோமத்திற்கு முதன்மையளிக்படுகின்றது. மகாபாரதத்திலே பஞ்ச பாண்டவர்கள் சூக்த முனிவரின் வேண்டுகோளுக்கிணங்க விநாயகாசதுர்த்தி விரதம் அனுஸ்டிக்கப்பட்டதாக கூறப்படுகின்றது.சிவபுராணம் கந்தபுராணம் போன்றவற்றிலே சிவனதும் உமையினதும் பிள்ளையாகவும் முருகனது அண்ணனாகவும் குறிப்பிடுகின்றார்.

சைவம்

சைவ சமயம்சிவநெறி என்றெல்லாம் அழைக்கப்படும் நெறி, சிவபெருமானை முழுமுதற்கடவுளாக வணங்கும் சமயமாகும். இன்றைய இந்து சமயத்தின் கிளைநெறிகளில் ஒன்றாக அமைந்துவிளங்கும் சைவம், வைணவத்தைை பின்னால் தள்ளி இந்து சமயத்தின் பெரும்பான்மையான பின்பற்றுநர்களைக் கொண்ட சமயமாகக் காணப்படுகின்றது. இன்றைய உலகில் சுமார் 452.2 மில்லியன் சைவர்கள் காணப்படுவதாக, மேற்கொள்ளப்பட்ட குடித்தொகை மதிப்பீடு ஒன்று சொல்கின்றது.

வைணவம்

வைணவ சமயம் (Vaishnavism) விஷ்ணுவை முழுமுதற் கடவுளாக வழிபடும் சமயமாகும். இச்சமயம் வைணவம் என்றும் வைஷ்ணவம் என்றும் அழைக்கப்படுகிறது. இச்சமயம் இந்து சமயத்தின் ஆறு உட்பிரிவுகளுள் ஒன்றாகும். உலகில் தீமைகள் ஓங்கும் போது விஷ்ணு அவதாரம் எடுத்து அவற்றை அழிப்பார் என்பது வைணவ நம்பிக்கை. வைணவக் கடவுளான விஷ்ணு எண்ணற்ற அவதாரங்கள் எடுத்துள்ளதாகவும் நம்புகிறார்கள். திருமாலின் எண்ணற்ற அவதாரங்களில் குறிப்பிடத்தக்க மச்சம், கூர்மம், வராகம், நரசிம்மம், வாமனன், பரசுராமன், இராமன், பலராமன், கிருஷ்ணன், கல்கி என்ற பத்து அவதாரங்கள் தசவதாரங்கள் என்று அழைக்கப்படுகின்றன. உபநிடதங்களில் வைணவ உபநிடதங்களாகும்.

சாக்தம்

சாக்தம் சக்தியை வழிபடு கடவுளாகக் கொள்ளும் சமயம் ஆகும். சக்தியே தெய்வம், அவரைத் தாயாக வழிபட வேண்டும் என்ற கோட்பாட்டை உடையது.இச்சமயத்தினர் தங்களை சக்தி தாசர்கள் என்றும் அழைத்துக் கொள்வர். செவ்வாடை,குங்குமமும் அணியும் வழக்கம் இவர்களிடம் உண்டு.

சக்தியே முழு முதற் கடவுள் என்றும் அனைத்திலும் உள்ளும் புறமும் கலந்து இருக்கும் சக்தி அனைத்துலகத்தையும் படைத்து,காத்து,தன்னுள் ஒடுக்குகிறாள் என்பது இவர்களின் கருத்து ஆகும்.

கௌமாரம்

கௌமாரம் முருகனை முழு முதற் கடவுளாக கொண்ட சமயமாகும். குமாரனாகிய முருகனே கடவுள். பேரின்ப வடிவினனாக அவனை வழிபட வேண்டும் என்ற சமயக் கோட்பாட்டை உடையது. ஆதிசங்கரர் உருவாக்கிய ஷண்மதங்களில் இதுவும் ஒன்றும்.

சௌரம்

சூரியனை முழு முதற் வழிபடுகடவுளாகக் கொள்வது சௌர சமயமாகும். பேரொளி வடிவினனாக அவனை வழிபட வேண்டும் என்று கூறுவது இச்சம கருத்தாகும். சிலர் நான்முகனான பிரம்மனை வழிபடுவது சௌரம் என்றும் கூறுகின்றனை. காரணம் சௌரம் என்றால் நான்கு என ஒரு பொருள் உண்டு. அனால் சௌரம் என்பது சூரியனைக் குறிக்கும். ஏனெனில் பஞ்சாங்களில் சூரியனின் சஞ்சாரத்தை வைத்துக் கணக்கிடுவதை சௌரமானம் என்றும் சந்திரனின் நிலையை வைத்துக் கணக்கிடுவதை சாந்திரமானம் என்று கூறுவார்கள். நா.கதிரை வேற்பிள்ளை தமிழ் மொழி அகராதியிலும் சௌரம் என்ற வார்த்தைக்கு சூரியன் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

வணக்கம்! Ad Blocker யூஸ் பண்றீங்களா?

தொடர்ந்து கல்வி உலகு இணையத்தளத்தை படிக்க Ad Blocker-ல் Kalviulagu வலைதளத்தை exclude செய்யுங்கள்.