GCE A/L

இருதுயரம் – ஈரங்கநாடகம் – G.C.E A/L

க.பொ.த உயர்தர மாணவர்களுக்கான, “இருதுயரம் – ஈரங்கநாடகம்”

முருகையன் – இருதுயரங்கள்

யாழ்ப்பாண மாவட்டம், தென்மராட்சியில் கல்வயல் கிராமத்தில் தமிழாசிரியர் இராமுப்பிள்ளைக்கும் செல்லம்மாவுக்கும் மூத்த புதல்வனாகப் பிறந்தவர் முருகையன். இவருடன் கூடப் பிறந்தவர் நாடக வல்லுனரும், கவிஞருமான சிவானந்தன். முருகையன் தனது ஆரம்பக் கல்வியை கல்வயல் சைவப்பிரகாச வித்தியாசாலையிலும், இடைநிலைக்கல்வியை சாவகச்சேரி இந்துக் கல்லூரியிலும், யாழ் இந்துக் கல்லூரியிலும் கற்றார். வித்துவான் க.கார்த்திகேசுவிடம் தமிழ் கற்ற முருகையன் உயர்கல்வியை இலங்கைப் பல்கலைக்கழகத்தில் கொழும்பு வளாகத்தில் பயின்று 1956 ஆம் ஆண்டில் விஞ்ஞானப் பட்டதாரியானார். பின்னர் 1961 ஆம் ஆண்டில் இலண்டனில் கலைமாணிப் பட்டத்தையும் பெற்றார். 1985 இல் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் முதுமாணிப் பட்டத்தையும் பெற்றார். யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் இவரது இலக்கியப் பணியைப் பாராட்டி முனைவர் பட்டத்தை வழங்கிக் கௌரவித்தது.

சாவகச்சேரி இந்துக்கல்லூரியில் 1956 இல் விஞ்ஞான ஆசிரியப் பணியைத் தொடங்கிய முருகையன், அரச மொழித் திணைக்களத்தில் மொழிபெயர்ப்பாளராகவும், பாடநூல் வெளியீட்டுத் திணைக்களத்தில் முதன்மைப் பணிப்பாளராகவும், கோப்பாய் ஆசிரியப் பயிற்சிக் கல்லூரியில் விரிவுரையாளராகவும், முல்லைத்தீவு, வவுனியா, யாழ்ப்பாண மாவட்டங்களில்
கல்விப் பணிப்பாளராகவும் பணியாற்றினார். இறுதியாக, 1986 இல் யாழ் பல்கலைக்கழகத்தில் முதுதுணை பதிவாளராகப் பணியாற்றி 1995 ஆம் ஆண்டில் ஓய்வு பெற்றார்.

தேசிய கலை இலக்கியப்பேரவையின் தலைவராயிருந்த இ. முருகையன் அப்பேரவையின் தொடக்க காலத்திலிருந்தே பங்கெடுத்து வந்ததுடன் தேசிய கலை இலக்கியப் பேரவையின் சஞ்சிகையான தாயகம் இதழின் ஆசிரியர் குழுவில் அங்கம் வகித்தார். இலங்கை அரசினால் எழுத்தாளர்களுக்கு வழங்கப்படும் அதிஉயர் விருதான சாகித்திய இரத்தினம் விருது 2007 ஆம் ஆண்டில் முருகையனுக்கு வழங்கப்பட்டது.

இருதுயரம் – ஈரங்கநாடகம் Complete Guide

Related Articles

Leave a Reply

Back to top button

வணக்கம்! Ad Blocker யூஸ் பண்றீங்களா?

தொடர்ந்து கல்வி உலகு இணையத்தளத்தை படிக்க Ad Blocker-ல் Kalviulagu வலைதளத்தை exclude செய்யுங்கள்.