Spoken English

இலகுவழி ஆங்கிலம் – பாகம் 15

கொண்டு வினை வடிவம் – கேள்வி, எதிர்

நிகழ்காலம்

1. அவன் வருகிறான்
He is coming
அவன் வந்துகொண்டில்லை (அல்லது அவன் (இப்ப) வரவில்லை)
He is not coming
அவன் வந்துகொண்டிருக்கிறானா? (இப்பவருகிறானா)
Is he coming?
அவன் எங்கே வந்துகொண்டிருக்கிறான்
Where is he coming?

2. அவர்கள் எழுதுகிறார்கள்
They are writing
அவர்கள் எழுதிக்கொண்டில்லை (இப்ப) எழுதவில்லை)
They are not writing
அவர்கள் எழுதுகிறார்களா?
Are they writing?
அவர்கள் என்ன எழுதுகிறார்கள்
What are they writing?

3. அவள் வாசிக்கிறாள்
She is reading
அவள் வாசித்துக்கொண்டில்லை. (இப்ப) வாசிக்கவில்லை
She is not reading
அவள் வாசித்துக்கொண்டிருக்கிறாளா? (வாசிக்கிறாளா)
Is she reading?
அவள் எப்படி வாசித்துக்கொண்டிருக்கிறாள்
How is she reading?
அவள் என்ன வாசித்துக்கொண்டிருக்கிறாள்
What is she reading?

4. நாங்கள் விளையாடுகிறோம்
We are playing
நாங்கள் விளையாடிக்கொண்டில்லை
We are not playing
நாங்கள் விளையாடுகிறோமா?
Are we playing?
நாங்கள் என்ன விளையாடுகிறோம்
What are we playing?
நாங்கள் எங்கே விளையாடுகிறோம்
Where are we playing?

பயிற்சி 1: தமிழில் சொல்லவும்

1. What are we doing now?
2. When is she writing exam?
3. Are they studying now?
4. He is not eating
5. Where are you working?
6. She is not cooking

பயிற்சி 2 : ஆங்கிலத்தில் சொல்லவும்

1. அவள் எழுதிக்கொண்டிருக்கிறாளா?
2. அவர்கள் எங்கே நித்திரை செய்கிறார்கள்?
3. நாங்கள் இப்போது வேலைசெய்யவில்லை
4. அவன் ஏன் விளையாடிக்கொண்டிருக்கிறான்?
5. அவள் எழுதிக்கொண்டிருக்கிறாளா?
6. அவர்கள் இப்ப மேசையை துப்பரவு செய்யவில்லை

இறந்த காலம்

1. அவள் விளையாடிக்கொண்டிருந்தாள்
She was playing
அவள் விளையாடிக்கொண்டிருக்கவில்லை
She was not playing
அவள் விளையாடிக்கொண்டிருந்தாளா?
Was she playing?
அவள் எங்கே விளையாடிக்கொண்டிருந்தாள்?
Where was she playing?
அவள் எப்ப விளையாடிக்கொண்டிருந்தாள்?
When was she playing?

2. அவர்கள் எழுதிக்கொண்டிருந்தார்கள்
They were writing
அவர்கள் எழுதிக்கொண்டிருக்கவில்லை
They were not writing
அவர்கள் எழுதிக்கொண்டிருந்தார்களா?
were they writing?
அவர்கள் என்ன எழுதிக்கொண்டிருந்தார்கள்?
What were they writing?

3. நாங்கள் படித்துக்கொண்டிருந்தோம்
We were studying
நாங்கள் படித்துக்கொண்டிருக்கவில்லை
We were not studying
நாங்கள் படித்துக்கொண்டிருந்தோமா?
Were we studying?
நாங்கள் எங்கே படித்துக்கொண்டிருந்தோம்?
Where were we studying?
நாங்கள் என்ன படித்துக்கொண்டிருந்தோம்?
What were we studying?

4. அவன் படிப்பித்துக்கொண்டிருந்தான்
He was teaching
அவன் படிப்பித்துக்கொண்டிருக்கவில்லை
He was not teaching
அவன் படிப்பித்துக்கொண்டிருந்தானா?
Was he teaching?
அவன் எப்படி படிப்பித்துக்கொண்டிருந்தான்?
How was he teaching?
அவன் என்ன படிப்பித்துக்கொண்டிருந்தான்?
What was he teaching?

பயிற்சி 3 : தமிழில் சொல்லவும்

1 Where were they playing yesterday?
Was he repairing the bike yesterday?
3 What was he bringing ?
4 They were not studying that
5 How were you reading the newspaper at night?

பயிற்சி 4 : ஆங்கிலத்தில் சொல்லவும்

1 அவன் நேற்று போய்க் கொண்டிருக்கவில்லை
2 நீ என்ன எழுதிக் கொண்டிருந்தாய்?
3 அவர்கள் நேற்று துப்பரவு செய்து கொண்டிருந்தார்களா?
4 அவள் நேற்று அதை பார்த்துக் கொண்டிருக்கவில்லை
5 நீங்கள் எப்படி அதை செய்து கொண்டிருந்தீர்கள்?

எதிர்காலம்

1. அவன் எதிர்பார்த்துக்கொண்டிருப்பான்
He will be expecting
அவன் எதிர்பார்த்துக்கொண்டிருக்க மாட்டான்
He will not be expecting
அவன் எதிர்பார்த்துக்கொண்டிருப்பானா?
Will he be expecting?
அவன் என்ன எதிர்பார்த்துக்கொண்டிருப்பான்?
What will he be expecting?

2. அவர்கள் சொல்லிக்கொண்டிருப்பார்கள்
They will be telling
அவர்கள் சொல்லிக்கொண்டிருக்க மாட்டார்கள்
They will not be telling
அவர்கள் சொல்லிக்கொண்டிருப்பார்களா?
Will they be telling?
அவர்கள் என்ன சொல்லிக்கொண்டிருப்பார்கள்?
What will they be telling?

3. நான் வந்து கொண்டிருப்பேன்
I will be coming
நான் வந்து கொண்டிருக்க மாட்டேன்
I will not be coming
நான் வந்து கொண்டிருப்பேனா?
Will I be coming?
நான் எங்கே வந்து கொண்டிருப்பேன்?
Where will I be coming?

4. அவள் காத்துக்கொண்டிருப்பாள்
She will be waiting
அவள் காத்துக்கொண்டிருக்க மாட்டாள்
She will not be waiting
அவள் காத்துக்கொண்டிருப்பாளா?
Will she be waiting?
அவள் எப்போது காத்துக்கொண்டிருப்பாள்?
When will she be waiting?

பயிற்சி 5 : தமிழில் சொல்லவும்

1. What will they be eating there?
2. He will not be writing the exam
3. Will she be telling that?
4. We will not be doing that
5. How will he be teaching us?
6. When will she be explaining?

பயிற்சி 6 : ஆங்கிலத்தில் சொல்லவும்

1 அவர்கள் என்ன வாங்கிக்கொண்டிருப்பார்கள்?
2 அவள் ஏன் அதை செய்துகொண்டிருப்பாள்?
3 அவன் அதை அனுப்பிக்கொண்டிருக்க மாட்டான்
4 நாங்கள் படித்துக்கொண்டிருப்போமா?
* அவள் எப்போது அதை முடித்துக்கொண்டிருப்பாள்?
6 நீங்கள் எங்கே அதை ஒழுங்குபடுத்திக்கொண்டிருப்பீர்கள்?

Has been, Have been, Had been

1. அவன் இரண்டு வருடமாக படித்துக்கொண்டிருக்கிறான்
He has been studying for two years
அவன் இரண்டு வருடமாக படித்துக்கொண்டில்லை
He has not been studying for two years
அவன் இரண்டு வருடமாக படித்துக்கொண்டிருக்கிறானா?
Has he been studying for two years?
அவன் இரண்டு வருடமாக என்ன படித்துக்கொண்டிருக்கிறான்?
What has he been studying for two years?

2. அவர்கள் 2002 இலிருந்து இங்கே வசிக்கிறார்கள்
They have been living here since 2002
அவர்கள் 2002 இலிருந்து இங்கே வசிக்கவில்லை
They have not been living here since 2002
அவர்கள் 2002 இலிருந்து இங்கே வசிக்கிறார்களா?
Have they been living here since 2002?
அவர்கள் எப்படி 2002 இலிருந்து இங்கே வசிக்கிறார்கள்?
How have they been living here since 2002?

3. அவள் மூன்று வருடமாக அதை முயற்சித்துக்கொண்டிருந்தாள்
She had been trying that for three years
அவள் மூன்று வருடமாக அதை முயற்சித்துக்கொண்டிருக்கவில்லை
She had not been trying that for three years
அவள் மூன்று வருடமாக அதை முயற்சித்துக்கொண்டிருந்தாளா?
Had she been trying that for three years?

4. நாங்கள் இதை இரண்டு நாட்களாக செய்கிறோம்
We have been doing this for two days
நாங்கள் இதை இரண்டு நாட்களாக செய்யவில்லை
We have not been doing this for two days
நாங்கள் இதை இரண்டு நாட்களாக செய்கிறோமா?
Have we been doing this for two days?
நாங்கள் எங்கே இதை இரண்டு நாட்களாக செய்கிறோம்?
Where have we been doing this for two days?

பயிற்சி 7: தமிழில் சொல்லவும்

1. Where has he been teaching for three years?
2. Had he been trying that for two weeks?
3. How have they been working in that company for 10 years?
4. Had she been taking the medicine for that week?
5. We have not been cooking for two weeks

பயிற்சி 8: ஆங்கிலத்தில் சொல்லவும்

1 அவர்கள் ஐந்து மணிநேரமாக எங்களுக்காக காத்துக்கொண்டிருக்கிறார்களா?
2. நான் இரண்டுவருடமாக அங்கேதங்கினேன்.
3. நீங்கள் நீண்ட நேரமாக இதை எழுதுகிறீர்களா?
4. அவன் எப்படி கடந்த மாதத்திலிருந்து இங்கே வேலை செய்கிறான்?
5. நீங்கள் காலையிலிருந்து என்ன செய்கிறீர்கள்?
6. அவன் எவ்வளவு காலம் அங்கேதங்கினான்?
7. நீங்கள் காலையிலிருந்து படித்துக்கொண்டிருக்கிறீர்களா?
8. அவர்கள் கடந்த வருடத்திலிருந்து அதை சொல்லிக்கொண்டிருந்தார்களா?

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

வணக்கம்! Ad Blocker யூஸ் பண்றீங்களா?

தொடர்ந்து கல்வி உலகு இணையத்தளத்தை படிக்க Ad Blocker-ல் Kalviulagu வலைதளத்தை exclude செய்யுங்கள்.