Spoken English

இலகுவழி ஆங்கிலம் – பாகம் 17

முடியாத வினை வடிவம் – கேள்வி, எதிர்

நிகழ்காலம்

1. அவர்கள் போய்விட்டார்கள்
They have gone
அவர்கள் இன்னும் போகவில்லை
They have not gone
அவர்கள் போய்விட்டார்களா?
Have they gone?
அவர்கள் எங்கே போய்விட்டார்கள்
Where have they gone?

2. அவன் பணம் செலுத்தி விட்டான்
He has paid
அவன் பணம் செலுத்தவில்லை
He has not paid
அவன் பணம் செலுத்தி விட்டானா?
Has he paid?
அவன் எவ்வளவு செலுத்தி விட்டான்?
How much has he paid?

3. நீ அதை தொலைத்து விட்டாய்
You have lost that
நீ அதை இன்னும் தொலைக்கவில்லை
You have not lost that
நீ அதை தொலைத்து விட்டாயா?
Have you lost that?
நீ அதை எங்கே தொலைத்து விட்டாய்?
Where have you lost that?

4. அவள் முடித்து விட்டாள்
She has finished
அவள் இன்னும் முடிக்க வில்லை
She has not finished.
அவள் முடித்து விட்டாளா?
Has she finished?

5. அவர்கள் எழுதி விட்டார்கள்
They have written
அவர்கள் இன்னும் எழுத வில்லை
They have not written
அவர்கள் எழுதி விட்டார்களா?
Have they written?
அவர்கள் என்ன எழுதி விட்டார்கள்?
What have they written?

பயிற்சி 1: தமிழில் சொல்லவும்

1. Have they taken breakfast?
2. Where have you sent him?
3. Has he brought the vehicle?
4. They have not informed us.
5. Where has she kept the pen?
6. Have they written the letter?
7. We have not done that.
8. She has not started
9. Have you informed them?
10. Where have you seen them?

பயிற்சி 2:ஆங்கிலத்தில் சொல்லவும்

1. அவன் பரீட்சையில் சித்தியடைந்து விட்டானா?
2. அவர்கள் சொல்லிவிட்டார்களா?
3. அவன் எப்படி அங்கே போய்விட்டான்?
4. நாங்கள் இன்னும் ஆரம்பிக்கவில்லை
5. அவள் அதை தந்துவிட்டாளா?
6. அவர்கள் இன்னும் இங்கு வரவில்லை
7. அவன் எப்படி அதை எழுதிவிட்டான்?
8. நீங்கள் எப்போது அதை பார்த்துவிட்டீர்கள்?

இறந்த காலம்

1. அவர்கள் சொல்லியிருந்தார்கள்
They had told
அவர்கள் சொல்லியிருக்கவில்லை
They had not told
அவர்கள் சொல்லியிருந்தார்களா?
Had they told?
அவர்கள் என்ன சொல்லியிருந்தார்கள்?
What had they told?

2. நீங்கள் விளக்கியிருந்தீர்கள்
You had explained
நீங்கள் விளக்கியிருக்கவில்லை
You had not explained
நீங்கள் விளக்கியிருந்தீர்களா?
Had you explained?
நீங்கள் எப்படி விளக்கியிருந்தீர்கள்?
How had you explained?

3. அவன் எழுதியிருந்தான்
He had written
அவன் எழுதியிருக்கவில்லை
He had not written
அவன் எழுதியிருந்தானா?
Had he written?
அவன் ஏன் எழுதியிருந்தான்?
Why had he written?

4. அவர்கள் திட்டமிட்டிருந்தார்கள்
They had planned
அவர்கள் திட்டமிட்டிருக்கவில்லை
They had not planned
அவர்கள் திட்டமிட்டிருந்தார்களா?
Had they planned?

5. அவள் சமைத்திருந்தாள்
She had cooked
அவள் சமைத்திருக்கவில்லை
She had not cooked
அவள் சமைத்திருந்தாளா?
Had she cooked?
அவள் எப்படிச் சமைத்திருந்தாள்?
How had she cooked?

பயிற்சி 3: தமிழில் சொல்லவும்

1. What had they informed to you?
2. Had you already told them?
3. We had not given them anything
4. How had they gone there?
5. Where had she studied?
6. Had he worked anywhere else?
7. They had not taken that.
8. When had they sent the money?

பயிற்சி 4: ஆங்கிலத்தில் சொல்லவும்

1. அவன் ஏதாவது எழுதியிருந்தானா?
2. அவர்கள் எப்படி திட்டமிட்டிருந்தார்கள்?
3. நான் அந்த புத்தகத்தை வாங்கியிருக்கவில்லை
4. அவள் எங்கே அதை வாங்கியிருந்தாள்?
5. நீங்கள் அதை வாசித்திருந்தீர்களா?
6. அவன் எப்படி அதை பார்த்திருந்தான்?
7. அவர்கள் அங்கே வந்திருக்கவில்லை
8. நாங்கள் எப்போது இதை கேட்டிருந்தோம்?

Will

1. அவன் நாளை போய் விடுவான்
He will have gone tomorrow
அவன் நாளை போய்விடமாட்டான்
He will not have gone tomorrow
அவன் நாளை போய் விடுவானா?
Will he have gone tomorrow?
அவன் எப்படி நாளை போய் விடுவான்?
How will he have gone tomorrow?

2. அவள் அடுத்த மாதம் பரீட்சை எழுதிவிடுவாள்
She will have written the exam next month
அவள் அடுத்தமாதம் பரீட்சை எழுதிவிடமாட்டாள்
She will not have written the exam next month
அவள் அடுத்த மாதம் பரீட்சை எழுதிவிடுவாளா?
Will she have written the exam next month?
அவள் அடுத்த மாதம் எங்கே பரீட்சை எழுதிவிடுவாள்?
Where will she have written the exam next month?

3. அவள் 10 மணிக்கு இங்கே வந்து விடுவாள்
She will have come here at 100’clock
அவள் 10 மணிக்கு இங்கே வந்து விடமாட்டாள்
She will not have come here at 100’clock
அவள் 10 மணிக்கு இங்கே வந்து விடுவாளா?
Will she have come here at 100’clock?
அவள் 10 மணிக்கு எப்படி இங்கே வந்துவிடுவாள்?
How will she have come here at 10 O’clock?

4. நாங்கள் நாளை அதை வாங்கிவிடுவோம்
We will have bought that tomorrow
நாங்கள் நாளை அதை வாங்கிவிடமாட்டோம்
We will not have bought that tomorrow
நாங்கள் நாளை அதை வாங்கிவிடுவோமா?
Will we have bought that tomorrow?

பயிற்சி 5: தமிழில் சொல்லவும்

1. They will not have given you money
2. hill you have written the letter next week?
3. What will you have planned tomorrow?
4. Will we have finished it next month?
5. Will she have got it in two days
6. Where will they have gone in the evening?
7. How will he have done it tomorrow

பயிற்சி 6 : ஆங்கிலத்தில் சொல்லவும்

1. அவன் நாளைக்கு எழுதிவிடுவானா?
2. அவர்கள் அடுத்தவாரம் அதை முடித்து விடுவார்களா?
3. அவள் நாளைக்கு காலையில் எப்படி சமைத்து விடுவாள்?
4. நீங்கள் பத்து நாட்களில் அதை பெற்று விடுவீர்களா?
5. அவன் நாளை அதை தந்து விடுவானா?
6. அவர்கள் எப்படி அடுத்தவாரம் இங்கு வந்து விடுவார்கள்?
7. நீங்கள் அடுத்தமாதம் அதை வாங்கி விடுவீர்களா?
8. அவர்கள் அடுத்தவருடம் வெளிநாடு போய் qவிடுவவர்களா?
9. அவள் நாளை அதை ஆரம்பித்து விடுவாளா?
10. அவன் எனக்கு அதை தந்து விடமாட்டான்

Going to – எதிர்காலத்தைக் குறிக்கும் சொல்

1. நான் குளிக்கப் போகிறேன்
I am going to take bath
2. அவள் சாப்பிடப் போகிறாள்
She is going to eat
3. நாங்கள் படத்தை பெருப்பிக்கப்போகிறோம்
We are going to enlarge the picture
4. அவர்கள் கலந்துரையாடப் போகிறார்களா?
Are they going to discuss?
5. அவன் எங்கே ஓய்வெடுக்கப்போகிறான்
Where is he going to take rest

Want to – வேணும், போகிறேன், விருப்பம்,…..

1. நான் இப்ப போக விரும்புகிறன்
I want to go now
2. அவன் விளையாட விரும்புகிறானா?
Does he want to play?
3. அவர்களுக்கு ஒரு பேனை வேணும்
They want a pen
4. அவள் எங்களுடன் வர விரும்புகிறாள்
She wants to come with us
5. அவன் பரீட்சை எழுத விரும்புகிறான்
He wants to write exam

Yet இன்னும் (பொதுவாக முடியாத வினைவடிவ எதிர்மறை வசனங்களில்)

1. அவர்கள் இன்னுமே வரவில்லை
They have not come yet
2. நாங்கள் இன்னுமே சாப்பிடவில்லை
We have not eaten yet
3. நான் இன்னுமே கொடுக்கவில்லை
I have not given yet
4. அவள் இன்னுமே நித்திரை கொள்ளவில்லை
She has not slept yet
5. அவன் இன்னுமே எழுதவில்லை
He has not written yet

Still – இன்னமும் (நிகழ்கால/கொண்டு வினைவடிவ வசனங்களில்)

1. நாங்கள் இன்னமும் எழுகிறோம்
We are still writing
2. அவன் இன்னமும் படிக்கிறான்
He is still studying
3. அவள் இன்னமும் சமைக்கிறாள்
She is still cooking
4. அவர்கள் இன்னமும் விளையாடுகிறார்கள்
They are still playing
5. அவன் இன்னமும் வேலைசெய்கிறான்
He is still working

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

வணக்கம்! Ad Blocker யூஸ் பண்றீங்களா?

தொடர்ந்து கல்வி உலகு இணையத்தளத்தை படிக்க Ad Blocker-ல் Kalviulagu வலைதளத்தை exclude செய்யுங்கள்.