Spoken English

இலகுவழி ஆங்கிலம் – பாகம் 22

DO. DOES, DID, WILL கேள்வி, எதிர்

Do, Does

  1. அவர்கள் சோறு சாப்பிடுகிறவர்கள்
    • They eat rice
  2. அவர்கள் சோறு சாப்பிடுவதில்லை
    • They don’t eat rice
  3. அவர்கள் சோறு சாப்பிடுகிறவர்களா?
    • Do they eat rice?
  4. அவர்கள் ஏன் சோறு சாப்பிடுகிறார்கள்?
    • Why do they eat rice?
  1. நான் அவனுக்கு உதவுகிறனான்
    • I help him
  2. நான் அவனுக்கு உதவுவதில்லை
    • I don’t help him
  3. நான் அவனுக்கு உதவுகிறனானா?
    • Do I help him?
  4. நான் அவனுக்கு எப்படி உதவுகிறனான்?
    • How do l help him?
  1. அவன் ஆங்கிலம் கற்பிக்கிறவன்
    • He teaches English
  2. அவன் ஆங்கிலம் கற்பிப்பதில்லை
    • He does not teach English
  3. அவன் ஆங்கிலம் கற்பிக்கிறானா?
    • Does he teach English?
  4. அவன் எங்கே ஆங்கிலம் கற்பிக்கிறான்?
    • Where does he teach English?
  1. நாங்கள் பத்திரிகை வாசிக்கிறனாங்கள்
    • We read newspaper
  2. நாங்கள் பத்திரிகை வாசிப்பதில்லை
    • We don’t read newspaper
  3. நாங்கள் பத்திரிகை வாசிக்கிறனாங்களா?
    • Do we read newspaper?
  4. நாங்கள் எப்போது பத்திரிகை வாசிக்கிறனாங்கள்?
    • When do we read newspaper?
  1. அவள் பாடுகிறவள்
    • She sing
  2. அவள் பாடுவதில்லை
    • She does not sing
  3. அவள் பாடுகிறவளா?
    • Does she sing?
  4. அவள் எப்படி பாடுகிறவள்?
    • How does she sing?
  1. நான் கடிதம் எழுதுகிறனான்
    • I write letter
  2. நான் கடிதம் எழுதுவதில்லை
    • I don’t write letter
  3. நான் கடிதம் எழுதுறனானா?
    • Do I write letter?

பயிற்சி 1: தமிழில் சொல்லவும்

  1. We don’t eat ice-cream
  2. Do you go to market?
  3. What does he do in the evenings?
  4. She does not sleep well
  5. How often do they visit here?
  6. Why do you go there?

பயிற்சி 2: ஆங்கிலத்தில் சொல்லவும்

  1. நீங்கள் வாகனம் ஓட்டுகிறனீங்களா?
  2. அவர்கள் எப்படி வேலைக்கு போகிறவர்கள்?
  3. அவள் அதை வாசிப்பதில்லை
  4. அவன் ஏன் உனக்கு எதுவும் சொல்லுவதில்லை
  5. நீங்கள் எங்கே மரக்கறி வாங்குகிறனீங்கள்?
  6. நாங்கள் கணினி பாவிப்பதில்லை

Did

  1. அவர்கள் எழுதினார்கள்
    • They wrote
  2. அவர்கள் எழுதவில்லை
    • They did not write
  3. அவர்கள் எழுதினார்களா?
    • Did they write?
  4. அவர்கள் என்ன எழுதினார்கள்?
    • What did they write?
  1. அவன் சாப்பிட்டான்
    • He ate
  2. அவன் சாப்பிடவில்லை
    • He did not eat
  3. அவன் சாப்பிட்டானா?
    • Did he eat?
  4. அவன் எங்கே சாப்பிட்டான்?
    • Where did he eat?
  1. நீங்கள் விளக்கினீர்கள்
    • You explained
  2. நீங்கள் விளக்கவில்லை
    • You did not explain
  3. நீங்கள் விளக்கினீர்களா?
    • Did you explain?
  4. நீங்கள் எப்படி விளக்கினீர்கள்?
    • How did you explain?
  1. அவள் சமைத்தாள்
    • She cooked
  2. அவள் சமைக்கவில்லை
    • She did not cook
  3. அவள் சமைத்தாளா?
    • Did she cook?
  4. அவள் என்ன சமைத்தாள்?
    • What did she cook?
  5. அவள் ஏன் சமைத்தாள்?
    • Why did she cook?
  1. அவர்கள் வேலை செய்தார்கள்
    • They worked
  2. அவர்கள் வேலை செய்யவில்லை
    • They did not work
  3. அவர்கள் வேலை செய்தார்களா?
    • Did they work?
  4. அவர்கள் எங்கே வேலை செய்தார்கள்?
    • Where did they work?
  5. அவர்கள் எப்படி வேலை செய்தார்கள்?
    • How did they work?
  1. அவன் அதைச் சுத்தம் செய்தான்
    • He cleaned that
  2. அவன் அதைச் சுத்தம் செய்யவில்லை
    • He did not clean that
  3. அவன் அதைச் சுத்தம் செய்தானா?
    • Did he clean that?
  4. அவன் என்ன சுத்தம் செய்தான்?
    • What did he clean?

பயிற்சி 3: தமிழில் சொல்லவும்

1. How did you write the exam?
2. They did not tell me anything
3. Why did he go there yesterday?
4. Did she give you that book?
5. We did not plan that last year.
6. She did not go to India last week

பயிற்சி 4: ஆங்கிலத்தில் சொல்லவும்

1. அவர்கள் உங்களுக்கு அங்கே என்ன சொன்னார்கள்?
2. அவன் எனக்கு எதுவும் தரவில்லை
3. நான் நேற்று அதைப்பற்றி உங்களுக்குச் சொன்னேனா?
4. அவள் எங்கே அவனைச் சந்தித்தாள்?
5. நீங்கள் அவர்களுக்கு எல்லாவற்றையும் சொன்னீர்களா?
6. அவர்கள் ஏன் இங்கு வந்தார்கள்?

Will

  1. அவர்கள் எழுதுவார்கள்
    • They will write
  2. அவர்கள் எழுதமாட்டார்கள்
    • They will not write
  3. அவர்கள் எழுதுவார்களா?
    • Will they write?
  4. அவர்கள் என்ன எழுதுவார்கள்?
    • What will they write?
  5. அவர்கள் எப்ப எழுதுவார்கள்?
    • When will they write?
  1. அவன் அனுப்புவான்
    • He will send
  2. அவன் அனுப்பமாட்டான்
    • He will not send
  3. அவன் அனுப்புவானா?
    • will he send?
  4. அவன் எப்போது அனுப்புவான்?
    • When will he send?
  1. நீங்கள் சொல்வீர்கள்
    • You will tell
  2. நீங்கள் சொல்ல மாட்டீர்கள்
    • You will not tell
  3. நீங்கள் சொல்லுவீர்களா?
    • Will you tell?
  4. நீங்கள் என்ன சொல்லுவீர்கள்?
    • What will you tell?
  5. நீங்கள் எப்ப சொல்லுவீர்கள்?
    • When will you tell?
  1. அவள் வேலைசெய்வாள்
    • She will work
  2. அவள் வேலைசெய்ய மாட்டாள்
    • She will not work
  3. அவள் வேலைசெய்வாளா?
    • Will she work?
  4. அவள் எப்படி வேலைசெய்வாள்?
    • How will she work?
  1. நாங்கள் விபரிப்போம்
    • We will describe
  2. நாங்கள் விபரிக்க மாட்டோம்
    • We will not describe
  3. நாங்கள் விபரிப்போமா?
    • Will we describe?
  4. நாங்கள் எப்படி விபரிப்போம்?
    • How will we describe?
  5. நாங்கள் எப்ப விபரிப்போம்?
    • When will we describe?
  1. அவர்கள் சுத்தம் செய்வார்கள்
    • They will clean
  2. அவர்கள் சுத்தம் செய்ய மாட்டார்கள்
    • They will not clean
  3. அவர்கள் சுத்தம் செய்வார்களா?
    • Will they clean?
  4. அவர்கள் எப்படி சுத்தம் செய்வார்கள்?
    • How will they clean?
  5. அவர்கள் எப்ப சுத்தம் செய்வார்கள்?
    • When will they clean?

பயிற்சி 5: தமிழில் சொல்லவும்

1. When will they send the parcel?
2. We will not inform them
3. Will you come here again?
4. How will they know that?
5. They will not tell you everything
6. Will they play cricket?

பயிற்சி 6: ஆங்கிலத்தில் சொல்லவும்

1. அவன் நாளை இங்கு வருவானா?
2. அவர்கள் எப்படி கடிதத்தை அஞ்சல் செய்வார்கள்?
3. அவன் அடுத்தவருடம் பரீட்சை எழுத மாட்டான்
4. நீங்கள் அவர்களுக்கு ஏதாவது சொல்வீர்களா?
5. அவர்கள் எப்படி அங்கே சாப்பிடுவார்கள்?
6. அவள் வேலைசெய்ய மாட்டாள்

பயிற்சி 7: ஆங்கிலத்தில் சொல்லவும்

1. நீங்கள் நேற்று எங்கே போனீர்கள்?
2. அவன் எப்படி அதை உங்களுக்கு தருவான்?
3. அவர்கள் ஐஸ்கிரீம் சாப்பிடுவதில்லை
4. நான் அடுத்தவருடம் அங்கே போகமாட்டேன்
5. அவள் எனக்கு எதுவும் சொல்லவில்லை
6. நீ எப்படி அதை பெற்றாய்?
7. அவர்கள் ஏதாவது உனக்கு தந்தார்களா?
8. அவன் நாளை வருவானா?
9. அவன் எங்கே அதை படித்தான்?
10. நீங்கள் பகலில் என்ன செய்கிறீர்கள்?
11. அவர்கள் எங்கே அதை வாங்கினார்கள்?
12. நீ நேற்று கடிதம் எழுதினாயா?
13. அவள் நேற்று எதுவும் சமைக்கவில்லை
14. நீங்கள் நாளை எங்கே போவீர்கள்?
15. அவன் என்னை எதுவும் கேட்கமாட்டான்
16. அவர்கள் இரவில் படிப்பதில்லை
17. அவள் பத்துமணிக்கு நித்திரைசெய்வாள்
18. நாங்கள் அடுத்தவருடம் வீடு கட்டுவோம்
19. நான் நேற்று நூலகத்தில் ஒரு புத்தகம் எடுத்தேன் (இரவல்வாங்கினேன்)
20. நீ எப்போது அவர்களை சந்தித்தாய்?
21. அவர்கள் எங்களை அனுமதிப்பார்களா?
22. அவன் அதை பிடிக்கமாட்டான்
23. நீங்கள் அதற்கு பணம் செலுத்தினீர்களா?
24. அவர்கள் எப்படி இங்கே விளையாடுவார்கள்?
25. அவள் என்னை அழைக்கவில்லை
26. அவன் நேற்று அதை எங்கே தொலைத்தான்?
27. நீங்கள் ஏன் எங்களுக்கு அறிவிக்கவில்லை ?
28. நான் நாளை அவனை பார்க்கமாட்டேன்
29. அவர்கள் அதை எங்கே எடுத்தார்கள்?
30. நீ அந்தப் புத்தகத்தை எங்கே வைப்பாய்?
31. அவன் அதை சொல்ல மாட்டான்
32. நாங்கள் கடந்த வருடம் பரீட்சை எழுதவில்லை

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

வணக்கம்! Ad Blocker யூஸ் பண்றீங்களா?

தொடர்ந்து கல்வி உலகு இணையத்தளத்தை படிக்க Ad Blocker-ல் Kalviulagu வலைதளத்தை exclude செய்யுங்கள்.