இலகுவழி ஆங்கிலம் – பாகம் 3
THERE IS, THERE ARE, HAS, HAVE
இருக்குது – 1
ஆங்கிலத்தில் “இருக்குது“ என முடிவடையும் வசனங்களை பிரதானமாக இரு பிரிவிற்குள் உள்ளடக்கலாம்.
- நபர் சம்பந்தப்பட்டது
- நபர் சம்பந்தப்படாதது
வசனம் நபர் சம்பந்தப்பட்டதாக இருந்தால் “இருக்குது” என்பதை குறிப்பதற்கு Has, Have யினை பயன்படுத்த வேண்டும். நபர் சம்பந்தப்பட்டு இல்லாத வசனம் எனின் “இருக்குது” என்பதை குறிப்பதற்கு There is, There are ஆகிய சொற்களை பயன்படுத்தி வசனத்தை அமைக்கலாம்.
நபர் சம்பந்தப்பட்ட வசனத்தை அமைக்கும் போது I, We, You, They ஆகிய சொற்களில் ஆரம்பிக்கும் வசன்ங்களுக்கு Have உம் He, She, It ஆகிய சொற்களில் ஆரம்பிக்கும் போது Has உம் பயன்படுத்தப்படும் என்பதை நினைவில் வைத்து கொள்ளுங்கள்.
உதாரணமாக “அவனிடம் ஒரு தொப்பி இருக்கிறது“ எனும் வசனத்தில் “அவன்” எனும் நபரை குறிக்கும் சொல் இருப்பதால் “இருக்குது” என்பதை குறிப்பதற்கு Has பயன்படும். அதாவது He have a cup
நாளை வகுப்பு இருக்கிறது எனும் வசனத்தில் நபர் சம்பந்தப்படாமல் இருப்பதால் “இருக்குது” என்பதை குறிக்க There is என்பது பயன்படும்.
அதாவது There is class tomorrow
நபர் சம்பந்தப்படும் வசனங்கள் (Have, Has)
நபர்களுடன் சம்பந்தப்பட்ட வசன்ங்களில் உள்ள “இருக்குது” என்பதனை குறிப்பதற்காய் Has / Have பயன்படுத்தப்படும்
- அவளிடம் ஒரு பை இருக்குது
- She has a Bag
- அவனுக்கு நாளை ஒரு கூட்டம் இருக்குது
- He has a meeting tomorrow
- எனக்கு காய்ச்சல் இருக்குது
- I have fever
- என்னிடம் ஒரு மணிக்கூடு இருக்குது
- I have a watch
- அவர்களிடம் ஒரு வீடு இருக்குது
- They have a house
- எங்களிடம் புத்தகங்கள் இருக்குது
- We have Books
- என்னிடம் ஒரு போத்தல் இருக்குது
- I have a bottle
- அவனிடம் முத்திரைகள் இருக்குது
- He has stamps
- எனக்கு இப்ப வேலை இருக்குது
- I have work now
- அவளிடம் ஒரு நாய் இருக்குது
- She has a dog
- அவனிடம் ஒரு கைப்பை இருக்குது
- He has a handbag
- எங்களுக்கு நாளை வகுப்பு இருக்குது
- We have class tomorrow
- அவனிடம் ஒரு படம் இருக்குது
- He has a picture
- அவனிடம் குடை இருக்குது
- He has an umbrella
- அவளிடம் மருந்து இருக்குது
- She has medicine
- அவர்களிடம் ஐந்து புத்தகம் இருக்குது
- They have five books
- எங்களிடம் ஒரு தோட்டம் இருக்குது
- We have a garden
- அவளிடம் அழகான சேலை இருக்குது
- She has a beautiful saree
- என்னிடம் ஒரு மாடு இருக்குது
- I have a cow
- அவர்களிடம் ஒரு மீன்தொட்டி இருக்குது
- We have a fish tank
பயிற்சி 1: தமிழில் சொல்லவும்
- She has a car
- They have some cats
- He has a Class today
- We have petrol
- She has a pen
- They have some phones
- I have an apple
- We have a Home
- I have work now
- He has some problems
1இற்கான விடைகள்
- அவளிடம் ஒரு கார் இருக்குது
- அவர்களிடம் சில பூனைகள் இருக்குது
- அவனுக்கு இன்று ஒரு வகுப்பு இருக்குது
- எங்களிடம் பெட்ரோல் இருக்குது
- அவளிடம் ஒரு பேனா இருக்குது
- அவர்களிடம் சில தொலைபேசிகள் இருக்குது
- என்னிடம் ஒரு ஆப்பிள் இருக்குது
- எங்களிடம் ஒரு வீடு இருக்குது
- எனக்கு இப்போது வேலை இருக்குது
- அவனுக்கு சில பிரச்சினைகள் இருக்குது.
பயிற்சி 2: ஆங்கிலத்தில் சொல்லவும்
- அவனிடம் அழகான பந்து இருக்குது
- எங்களிடம் ஒரு போத்தல் இருக்குது
- அவளிடம் ஒரு மணிக்கூடு இருக்குது
- உங்களிடம் நாலு கலண்டர்கள் இருக்குது
- எனக்கு இன்று ஒரு நிகழ்ச்சி இருக்குது
- அவனிடம் ஒரு தொலைக்காட்சி இருக்குது
- அவளிடம் இரண்டு பென்சில் இருக்குது
- எங்களிடம் பெரிய கதிரை இருக்குது
- ராஜாவிடம் பழைய புத்தகம் இருக்குது
- அந்த நாயிடம் ஒரு பந்து இருக்குது
2இற்கான விடைகள்
- He has a beautiful ball
- We have a bottle
- She has an hourglass
- You have four calendars
- I have a show today
- He has a TV
- She has two pencils
- We have a big chair
- Rajah has an old book
- That dog has a ball
பாகம் 4
பாகம் 4ஐ கற்பதற்கு மேலே உள்ள பாகம் 4 என்பதை அழுத்துக.