Spoken English
இலகுவழி ஆங்கிலம் – பாகம் 4

நபர் சம்பந்தப்படாத வசனங்கள்
There is, There are
நபரை குறிக்கும் வசனமாக இல்லை என்றால் “இருக்குது” என்பதை சொல்வதற்கு There is, அல்லது There are பயன்படுத்தப்படும்.
ஒன்றுக்கு மேற்பட்டதை சொல்வதற்கு There are உம் ஒன்று அல்லது எண்ண முடியாதது எனில் There is உம் பயன்படுத்தப்படும்.
- ஒரு தென்னைமரம் இருக்குது
- There is a coconut tree
- தோட்டத்தில் ஒரு மாடு இருக்குது
- There is a cow in the garden
- இன்று ஒரு கூட்டம் இருக்குது
- There is a meeting today
- வீதியில் நிறைய மிருகங்கள் இருக்குது
- There are many animals on the road
- கதவுக்குப் பக்கத்தில் ஒரு பூனை இருக்குது
- There is a cat near the door
- யன்னலுக்கு அடுத்ததாக ஒரு மேசை இருக்குது
- There is a table next to the window
- கேற்றுக்கு பக்கத்தில் ஒரு சைக்கிள் இருக்குது
- There is a bicycle near the gate
- மரத்துக்கு கீழ் ஒரு நாய் இருக்குது
- There is a dog under the tree
- மேசையில் ஒரு பந்து இருக்குது
- There is a ball on the table
- குசினிக்குள் சாப்பாடு இருக்குது
- There is food in the kitchen
- சுவரில் மணிக்கூடு இருக்குது
- There is a wall clock on the wall
- வகுப்பிலை மேசைகள் இருக்குது
- There are tables in the class
- கூடையில் மாம்பழங்கள் இருக்குது
- There are mangoes in the basket
- மேசையில் கணினி இருக்குது
- There is a computer on the table
- அறையில் மின்விசிறி இருக்குது
- There is a fan in the room
- அலுமாரியில் பொம்மைகள் இருக்குது
- There are dolls in the cupboard
- வீதியில் ஒரு மாடு இருக்குது
- There is a cow on the road
- கடையில் நிறைய கார்கள் இருக்குது
- There are many cars in the shop
- மரத்தில் பறவைகள் இருக்குது
- There are birds on the tree
- தோட்டத்தைச் சுற்றி வேலி இருக்குது
- There is a fence around the garden
தமிழிலே சொல்லுங்கள்: KU1
- There is a temple near the house
- There is a dog on the table
- There are trees in the garden
- There is a pencil in the box
- There are shops near the bank
- There are chairs in the class
- There is an apple in the basket
- There are bottles on the table
- There are animals in the forest
KU1 இற்கான விடைகள்
- ஆலயத்திற்கு பக்கத்தில் ஒரு வீடு இருக்குது
- மேசையின் மேல் ஒரு நாய் இருக்குது
- தோட்டத்தின் உள்ளே மரங்கள் இருக்குது
- பொட்டியின் உள்ளே ஒரு பென்சின் இருக்குது
- வங்கிக்கு அருகே கடைகள் இருக்குது
- வகுப்பின் உள்ளே கதிரைகள் இருக்குது
- கூடையின் உள்ளே ஒரு அப்பிள் இருக்குது
- மேசையின் மேலே போத்தல்கள் இருக்குது
- காட்டின் உள்ளே மிருகங்கள் இருக்குது
ஆங்கிலத்தில் சொல்லவும் KU2
- வகுப்பில் இருபது கதிரைகள் இருக்குது
- வானத்தில் நட்சத்திரங்கள் இருக்குது
- கூரைக்கு மேல் ஒரு பறவை இருக்குது
- வீட்டுக்கு பின்னால் ஒரு மரம் இருக்குது
- மரத்துக்கு கீழ் ஒரு பாம்பு இருக்குது
- தபால்கந்தோருக்கு அருகில் ஒரு வீடு இருக்குது
- மரத்தில் குருவிக்கூடு இருக்குது
- மேசைக்கு மேல் புத்தகம் இருக்குது
- சுவரில் படம் இருக்குது
KU2 இற்கான விடைகள்
-
- There are twenty chairs in the class.
- There are stars in the sky.
- There is a bird on the roof.
- There is a tree behind the house.
- There is a snake under the tree.
- There is a house near the post-office.
- There is a nest on the tree.
- There is a book on the table.
- There is a picture on the wall.
இலகுவழி ஆங்கிலம் 4இற்கான மேலதிக பயிற்சிகள்!
இலகுவழி ஆங்கிலம் – பாகம் 5
மேலுள்ள இணைப்புக்களை அழுத்துவதன் ஊடாக குறித்த பகுதிகளுக்க்கு நேரடியாக செல்ல முடியும்!