Spoken English
இலகுவழி ஆங்கிலம் – பாகம் 5

இருக்குது – மூன்று காலங்கள்
நபர் சம்பந்தப்பட்ட வசனங்களில் “இருக்குது” என்பதனை குறிக்க Has அல்லது Have உம் “இருந்தது” என்பதை குறிக்க Had உம் “இருக்கும்” என்பதை குறிக்க Will Have உம் பயன்படும்.
-
-
- இருக்குது – Has, Have
- இருந்தது – Had
- இருக்கும் – Will Have
-
- அவர்களுக்கு ஒரு வகுப்பு இருந்தது
- They had a class
- எங்களிடம் ஒரு புது வீடு இருக்கும்
- We will have a new house
- அவனுக்கு காய்ச்சல் இருந்தது
- He had fever
- அவர்களுக்கு நாளை வேலை இருக்கும்
- They will have work tomorrow
- உங்களுக்கு நாளை பரீட்சை இருக்கும்
- You will have exam tomorrow
- அவளிடம் ஒரு கணினி இருந்தது
- She had a computer
- எங்களிடம் அந்தப் புத்தகம் இருக்கும்
- We will have that book
- அவர்களிடம் நாலு மாடு இருந்தது
- They had four cows
- எனக்கு வேலை இருந்தது
- I had work
- அவனுக்கு பரீட்சை இருக்கும்
- He will have exam
நபர் சம்பந்தப்படாத வசனம்
வசனமானது நபர் சம்பந்தப்பட்டு இல்லாத போது “இருக்குது” என்பதனை குறிக்க There is அல்லது There are வும், “இருந்தது” என்பதை குறிக்க There was அல்லது There were வும், “இருக்கும்” என்பதை குறிக்க There will be யும் பயன்படும்
- இருக்குது – There is
- இருந்தது – There was, There were
- இருக்கும் – There will be
- வீதியில் ஒரு மாடு இருந்தது
- There was a cow on the road
- மரத்தில் பறவைகள் இருந்தன
- There were birds on the tree
- கடையில் பொருட்கள் இருந்தன
- There were things in the shop
- நேற்று ஒரு வகுப்பு இருந்தது
- There was a class yesterday
- நாளைக்கு பரீட்சை இருக்கும்
- There will be an exam tomorrow
- நாளைக்குஒரு படம் இருக்கும்
- There will be a movie tomorrow
- கடையில் பொருட்கள் இருக்குது
- There are things in that shop
- மரத்தில் குருவிக்கூடு இருந்தது
- There was a nest on the tree
HAS, HAVE, THERE IS, THERE ARE
இருக்குது, இருந்தது, இருக்கும் (நபர் சம்பந்தப்பட்ட
வசனங்கள்)
- அவளிடம் இரண்டு குடை இருந்தது
- She had two umbrellas
- அவனிடம் ஒரு தோட்டம் இருக்கும்
- He will have a garden
- அவனிடம் மருந்து இருந்தது
- He had medicine
- அவளிடம் சாறிகள் இருக்கும்
- She will have sarees
- என்னிடம் ஒரு நாய் இருந்தது
- Thad a dog
- எங்களிடம் ஒரு படம் இருந்தது
- We had a picture
- எங்களுக்கு ஒரு கருத்தரங்கு இருக்கும்
- We will have a seminar
- அவனிடம் அந்தத் திறப்பு இருந்தது
- He had that key
- அவர்களிடம் நாலு கலண்டர்கள் இருந்தது
- They had four calendars
- குழந்தையிடம் ஒரு பந்து இருக்கும்
- The child will have a ball
- எனக்கு நாளை நிகழ்ச்சி இருக்கும்
- I will have a program tomorrow
- அவர்களிடம் உழவு இயந்திரம் இருந்தது
- They had a tractor
பயிற்சி 1: தமிழில் சொல்லவும்
- We had some water
- He will have a car
- She had two pens
- We had a program yesterday
- You will have a meeting
- They will have a computer
- He had a motorbike
- We had some fruits
- She will have ice-water
- She had a new book
பயிற்சி 2 : ஆங்கிலத்தில் சொல்லவும்
- அவர்களிடம் முத்திரை இருந்தது
- என்னிடம் ஒரு கார் இருக்கும்
- அவர்களிடம் ஒரு பெட்டி இருந்தது
- எங்களுக்கு பரீட்சை இருக்கும்
- அவனுக்கு ஒரு வகுப்பு இருக்குது
- அவளிடம் ஒரு பொம்மை இருந்தது
- என்னிடம் ஒரு கணினி இருக்கும்
- அவனிடம் ஐம்பது ரூபா இருந்தது
- அவர்களுக்கு பிரச்சினை இருக்கும்
இலகுவழி ஆங்கிலம் – பாகம் 6