உடனடி கோப்பி கண்டுபிடிக்கப்பட்ட கதை!
கோப்பி, தேநீர், போன்ற சூடான பானங்களை அருந்தும் பழக்கம் நம்மில் பெரும்பாலானவரிடம் நாள்தோறும் காணப்படுகின்றது.
தென் அமெரிக்காவில் பிறேசில், ஆபிரிக்காவில் கானா தெற்கு மற்றும் தென் கிழக்காசியாவில் இந்தியா, இலங்கை, மலேசியா போன்ற நாடுகள் கோப்பி உற்பத்தியில் முன்னணி வகிக்கும் நாடுகளாகும்.
உலகின் முன்னணி கோப்பி உற்பத்தி நாடுகளில் ஒன்றாகிய பிரேசில் கோப்பி தேவைக்கு அதிகமாக விளைகின்றபோது, அதனை என்ன செய்வது? என்று யோசித்தது. பதப்படுத்தித் தேவைப்படும் காலத்தில் பயன்படுத்தக்கூடிய, கரையக்கூடிய கோப்பியை முதன்முதலாக தயாரிக்கத் திட்டமிட்டது.
இதன் விளைவாகவே, திரவக் கோப்பி உருவானது. இதன்பின் 1938 இல் ஸ்விஸ் நிறுவனமாகிய ‘நெஸ்லே’ நிறுவனத்தின் தூளாக்கப்பட்ட ‘இன்ஸ்டன்ட்’ எனும் உடனடிக் கோப்பியைக் கண்டுபிடித்தனர்.
1965 இல் திரவக் கோப்பியை உறைய வைத்து, பின் உலர வைக்கும் ஃப்ரீஸ், ட்ரைட் கோப்பித் தூள் முறையும் அறிமுகமானது. இன்று நம் கண்ணெதிரே கோப்பிக் கொட்டையை அரைத்து, அதிலேயே பாலைக் கொதிக்கச் செய்து, கலவைச் சுவையாகத் தரும் இயந்திரங்கள் இன்று பல வந்துவிட்டன.
‘கோப்பி ஹவுஸ் (Coffee house) கலாச்சாரம் பிரித்தானியாவில் 1650-லேயே தொடங்கிவிட்டது. இன்று உலக மக்களிடையே தேநீரைப் போன்று கோப்பியும் முதலிடத்தை வகிக்கின்றது.