பொது அறிவுப் புதையல் 2500
வானமும் கடலும் நீல நிறத்தில் இருப்ப தற்கான காரணத்தை வெளியிட்ட இந்திய விஞ்ஞானி சர்.சி.வி.ராமன்
இந்தியாவின் தேசியப் பழம் மாம்பழம்.
தமிழகத்தில் இந்துக்களுக்கு அடுத்து அதிக எண்ணிக்கையில் இருக்கும் மதத்தினர் கிறிஸ்துவர்கள்.
இந்திய விமானப் படையின் முதல் பெண் மார்ஷல் பத்மாவதி பந்தோ
பாத்தியாயா (1.10.2003-ல்) பதவி ஏற்றார்.
மதுரையை ஆட்சி செய்த முதல் நாயக்கமன்னர் விஸ்வ நாத நாயக்கர் (கி.பி.1529 – 1564)
குழந்தைகள் இறப்பு விகிதம் குறைவாக உள்ள மாவட்டம் ஈரோடு.
விண்வெளியில் 1044 நாட்கள் இருந்த ஒரே மனிதர் வாலேரி போலியோ கோவ் (ரஷ்யா). இவர் 1988ல் 607 நாட்கள் 1995ல் 437 நாட்கள் இருந்தார்
இந்தியாவின் முதல் அணுகுண்டு சோதனை ராஜஸ்தான் பாலைவனத்தில் 1974-ம் ஆண்டுமே மாதம் நடத்தப்பட்டது.
தமிழ்நாட்டிலிருந்து முதன் முதலில்
* முதல் குடியரசுத் தலைவர் – டாக்டர் எஸ்.ராதா கிருஷ்ணன்.
* முதல் பாரத ரத்னா விருது பெற்றவர்கள் இராஜாஜி – சர்.சி.வி.ராமன் – எஸ்.ராதாகிருஷ்ண ன்.
* முதல் பெண் நீதிபதி – பத்மினி ஜேசுதுரை.
* முதல் பெண் ஆளுநர் – பாத்திமா பீவி (1997)
* முதல் பெண் முதலமைச்சர் – ஜானகி ராமச்சந்திரன்.
* முதல் பெண் மருத்துவர் – டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி.
* முதல் அமைச்சர் (சுதந்திரத்திற்கு முன்) A.சுப்பராயலு செட்டியார்.
* முதல் அமைச்சர் (சுதந்திரத்திற்குப் பின்) – ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார்.
* சென்னை மாநகராட்சியின் முதல் மேயர் – ராஜா சர். முத்தையா செட்டியார்.
* சென்னை மாநகராட்சியின் பெண் மேயர் – தாரா செரியன்.
* சென்னை மாநகராட்சியின் முதல் தலைவர் – சர்.பி.டி.தியாகராயர்.
* சென்னை மாநகர முதல் பெண் கமிஷனர் – லத்திகா சரண்.
* இந்திய தேசிய காங்கிரசின் முதல் தமிழ் நாட்டு தலைவர் சுதந்திரத்திற்கு முன் – விஜய ராகவாச்சாரி.
* இந்திய தேசிய காங்கிரசின் முதல் தமிழ்நாட்டு தலைவர் சுதந்திரத்திற்குப் பின் – கே.காமராஜ்.
* தமிழகத்தின் முதல் நாளிதழ் – மெட்ராஸ் மெயில்.
* தமிழகத்தின் முதல் தமிழ் நாளிதழ் – சுதேச மித்திரன்.
* முதல் வானொலி நிலையம் (1930) – சென்னை .
* முதன் முதலில் போடப்பட்ட முதல் ரயில்வே லைன் – ராயபுரம் மற்றும் அரக்கோணம்.
* முதல் ஊமைத் திரைப்படம் – கீசகவதம்.
* முதல் பேசும் படம் – காளிதாஸ்.
* முதல் வங்கி – மெட்ராஸ் வங்கி.
* முதல் தமிழ் நாவல் – பிரதாப முதலி சரித்திரம்.
இந்தியாவில் ஆளுநராகப் பதவி ஏற்ற பெண்மணி சரோஜினி நாயுடு (உத்தரப்பிரதேசம்
இந்தியாவில் முதல் அமைச்சராகப் பொறுப்பேற்ற முதல் பெண்மணி சுசேதா கிருபளானி (உத்திரப் பிரதேசம்).
முதல் பெண்மணிகள்
* இந்தியாவில் முக்கியமான பொறுப்புகளை வகித்த முதல் பெண்மணி பிரதமர் இந்திரா காந்தி
* முதல் பெண் ஷெரீப் கிளப்வாலா ஜாதவ்.
* முதல் பெண் விஞ்ஞானி அமலா போஸ்.
* முதல் பெண் நீதிபதி அன்னாசாண்டி,
* முதல் பெண் வெளிநாட்டுத் தூதர் விஜயலட்சுமி பண்டிட்.
இன்று நாம் அனைவரும் பயன்படுத்தும் பால்பாயின்ட்பேனாவை 1883ம் ஆண்டு கண்டு பிடித்தவர் ஜான் ஜெ.லவுட். இவர் அமெரிக்க நாட்டைச் சேர்ந்தவர்.
சோழப் பேரரசுக்கு வித்திட்டவன் விஜயபாலன். முத்தரையரைப் போரில் வென்று தஞ்சையைக் கைப்பற்றியதால் தன் வெற்றியின் சின்னமாக நிசும்ப சூதினி என்ற காளி கோயிலைக் கட்டினான்.
1962ம் ஆண்டு முதல் 1967ம் ஆண்டு வரை இந்தியாவின் ஜனாதிபதியாகப் பதவி வகித்தவர் டாக்டர் ராதாகிருஷ்ணன். இவருக்குச் சம்பளம் மாதம் 10 ஆயிரம் ரூபாய். ஆனால் டாக்டர் ராதாகிருஷ்ணன் அவர்கள் 2 ஆயிரத்து 500 ரூபாய் மட்டுமே சம்பளமாகப் பெற்றுக்கொண்டார்.
உணவே இல்லாமல் ஏழு நாட்கள் வரை உயிர்வாழக் கூடிய உயிரினம் எலி.
உலக வங்கியின் கிளை அமைத்த முதல் இந்திய நகரம் சென்னை .
சளி என்பது நோயல்ல. உடல் உறுப்புகள் நச்சுப் பொருட்களால் பாதிக்கப்படும்போது அதைத்தடுக்க உதவுகிறது.
1919ம் ஆண்டில் இந்தியாவை உலுக்கிய ஜாலியன் வாலாபாக் படுகொலையின்போது 389 பேர் மாண்டனர். சுமார் 1200 பேர்கள் படுகாயமடைந்தனர்.
சமவெளியைவிட மலைப் பகுதியில் டென்னிஸ்பந்து உயரமாக மேலெழும்புகிறது. சமவெளிப் பகுதியை விட மலைப் பகுதிகளில் புவி ஈர்ப்பு விசை குறைவாக இருப்பதே இதற்குக் காரணம்.
முதன் முதலில் இங்கிலாந்து நாடு வெளியிட்ட தபால் தலையின் பெயர் பென்னி பிளாங்க்.
டால்பின்கள் கண்ணைத் திறந்து கொண்டே தூங்குகின்றன.
பறக்கும் பூச்சியினத்தில் மிக நீண்ட தூரம் பயணம் செய்யும் இனம் வண்ண த்துப் பூச்சி. இது நான்காயிரம் கி.மீ. தூரம் வரை பயணம் செய்யும்.
ரென என்னும் குருவி ஒரு நாளில் சுமார் 1200 தடவை தன் குஞ்சுகளுக்கு இரையைக் கொண்டு வந்து கொடுக்கின்றன.
ரபின் என்னும் குருவி ஒரு நாளைக்கு சுமார் 14 அடி நீளத்திற்குச் சமமான மண் புழுக்களை உண்கிறது.