உலக பொது அறிவு தொகுப்பு – 3
செஞ்சிலுவை சங்கம் 3 முறை நோபல் பரிசுகள் பெற்றுள்ளது.
முன்னொரு காலத்தில் இங்கிலாந்தின் தலைநகராக விளங்கியது, வின்ஸட் என்னும் நகரம்.
நல்ல தங்காளுக்கு கோயில் உள்ள ஊர் வத்திராயிருப்பு பக்கமுள்ள அர்ச்சனாபுரம்.
கடவுளின் பெயரைச் சூட்டப்படாத ஒரே கோள் பூமி ஒன்று தான்.
தமிழக அரசின் சின்னம் போலவே தென்னாப்பிரிக்காவின் அரசு சின்னம் அமைந்துள்ளது.
தமிழ் முதல் நாளிதழ்
- முதல் நாளிதழ் தினவர்த்தமானி 1856.
- முதல் வார இதழ் இராசவிருத்தி போதினி 1855. இதே ஆண்டு டிசம்பரில் தினவர்த்தமானி வார இதழ் தொடங்கப்பட்டது.
- முதல் வார இருமுறை இதழ் சுதேசமித்திரன் 1883.
- முதல் வாரம் மும்முறை இதழ் சுதேசமித்திரன் 1897.
- முதல் மாத இதழ் மாச தினசரிதை 1812.
- முதல் மாதம் இரு முறை இதழ் ஜனசிநேகன் 1841.
- முதல் மாதம் மும்முறை இதழ் இராசவிருத்தி போதினி 1833.
- முதல் காலாண்டு இதழ் திருச்சபை இதழ் 1815.
- முதல் அரையாண்டு இதழ் பிரம்மவித்தியா 1894.
ஒருவருடைய சராசரி ஆயுளில் 590 மைல் நீள தலைமுடி வளரும்.
அமெரிக்க ஜனாதிபதிகளில் மருத்துவமனையில் பிறந்த முதல் ஜனாதிபதி ஜிம்மி கார்ட்டர்.
கொசு ஒருமுறை கடிக்கையில் தன்னுடைய எடையைப் போல் ஒன்றரை மடங்கு எடை இரத்தத்தை உறிஞ்சும்.
அனைத்து பனிக் கரடிகளும் இடது கைப் பழக்கம் கொண்டவை.
குழந்தைகள் பூனைகளுக்கு அதிகம் பயப்படுவதை விட கரப்பான் பூச்சிகளுக்கே அதிகம் பயப்படுகின்றனர்.
ஒரு அழகான மலர் மொட்டு அதிக பட்சமாக பத்து நாட்கள் வாடாமல் இருக்கும்.
தமிழ் இதழின் தந்தை எனப்படுபவர் ஜி.சுப்பிரமணி ஐயர் (இந்து பத்திரிகை).
சென்னை திருவல்லிக்கேணி வாலாஜா பள்ளி வாசல் 1759-ல் கட்டப்பட்டது.
சென்னை இசைக் கல்லூரி 1949-ல் தோற்றுவிக்கப்பட்டது.
1739லேயே ஆங்கிலேயரை எதிர்த்துப் போராடிய தமிழக மன்னர் வீரன் அழகு முத்துக்கோன்.
நாதஸ்வரக் கல்லூரி சுவாமி மலையில் 1956ல்ஆரம்பிக்கப்பட்டது.
தற்போது ராஜாஜி மாளிகை முதலில் ஆளுநரின் விருந்தினர் மாளிகையாக இருந்தது.
இராமலிங்க அடிகளார் மருதூரில் (விருத்தாசலம் பிறந்தார்.
மனநோய் மருத்துவமனை சென்னையில் 1794ல் ஏற்படுத்தப்பட்டது.
இந்தியாவில் அதிக நிலக்கரி கிடைக்கும் மாநிலம் தமிழ்நாடு.
இடிதாங்கியைக் கண்டு பிடித்தவர் பெஞ்சமின் பிராங்க்ளின்.
க்யூபின் தவளை மிகச் சிறியது 13 மி.மீட்டர் நீளமிருக்கும்.
தவளைகளில் மிகப்பெரியது கோலியத்தவளை 25 செ.மீ. நீளமுள்ளது.