கடல் நீர் நீல நிறமாக இருப்பதற்கு காரணம் தெரியுமா

வானத்தில் காணும் நீல நிறத்தின் பிரதிபலிப்பே கடலின் நீல நிறத்துக்குக் காரணம். வானவில்லின் ஏழு வண்ணங்களில் ஒவ்வொன்றும் வெவ்வேறு அலைநீளம் (Wavelength) அதிர்வு (Frequency) என்பவற்றைக் கொண்டவை.
ஒளியானது வளிமண்டலத்தில் பயணிக்கும் போது காற்றிலுள்ள அணு மூலக்கூறுகள், நீர்த் துளிகள், பனிமூட்டம், மேகங்கள் போன் றவை ஒளியைச் சிதறடிக்கின்றன. இதற்கு ‘ரேலே சிதறல்’ (Rayleigh Scattering) என்று பெயர்.
அதன்படி, மிகக் குறைந்த அலைநீளம் கொண்ட நீல நிறம் மிக அதிகமாகச் சிதறடிக்கப்படுவதால், வானம் நீல நிறமாகத் தெரிகிறது. அந்த நீலத்தைத்தான் கடலானது கண்ணாடி போல் பிரதிபலிக்கின்றது.
நீல நிறத்தின் அலைநீளம்தான் மிகக் குறைவானது. அது 4.500 ஆங்ஸ்ட்ரோம் அலகு ஆகும். சிவப்பு நிறத்தின் அலைநீளம் தான் மிக அதிகம். அது 6.500 ஆங்ஸ்ட்ரோம் அலகு ஆகும்.
அவ்வாறாயின் ஆறு, ஏரி, குளம் போன்றவற்றில் ஏன் இந்த பிரதிபலிப்பு நிகழ்வதில்லை? என்ற கேள்வி எழலாம். அதிக ஆழம் மிகுந்த நீர்நிலைதான் வானின் நீலத்தைப் பிரதிபலிக்கும்.
அதனால்தான் ஆழம்மிக்க, நிதானமாக ஓடும் நீர்நிலை நீல நிறமாகத் தோன்றுகின்றன. மாறாக, எப்போதும் ஓடிக்கொண்டிருக்கும் நீர்நிலைகளில் இந்த வண்ணப் பிரதிபலிப்புக்கான வாய்ப்பு மிகக் குறைவு.