Uncategorized
செயற்கை ஐஸ் கண்டுபிடிக்கப்பட்ட கதை!

ஜேக்கப் பெர்கின்ஸ் என்ற அமெரிக்கர் 1834 இல் ஐஸ் கட்டிகளை உருவாக்கும் கருவியைக் கண்டுபிடித்தார். அதன்மூலம் செயற்கையாக ஐஸ்கட்டிகளை உருவாக்கினார். பின்னர் ஐஸ் கட்டி உற்பத்தியை நிறுத்தி விட்டார்.
ஆனால், 40 ஆண்டுகளுக்குப் பின்ன ர் 1873 இல் ஜேம்ஸ் ஹெரிஸன் என்ற அவுஸ்திரேலியர் ஐஸ் தயாரிப்பு இயந்திரத்தை உருவாக்கினார். அதன்பின் மீண்டும் செயற்கை ஐஸ் உருவானது.
மீன் போன்ற உணவுகளை நீண்டநேரம் கெடாமல் பேணவும் வேறு பல விடயங்களுக்காகவும் இது பயன்பட்டது.
நாளடைவில் அதில் இனிப்பும் வேறு சில பொருட்களும் சேர்க்கப்பட்டது. இதனால், குழந்தைகள் முதல் பெரியோர் வரை சுவைத்து உண்ணும் ஐஸ்கிறீம் உருவானது.