ஷேக்ஸ்பியரின் பொன்மொழிகள்
பிறப்பால் சிறப்புப் பெறுவதைவிட வாழ்ந்து காட்டிச் சிறப்புப் பெறுபவர்களே வரலாறாகிறார்கள்.
நல்லது என்றோ, கெட்டது என்றோ எதுவும் கிடையாது. தமது எண்ணமே அதை அவ்வாறு தோற்றமளிக்கச் செய்கிறது.
ஒருவனுடைய வாய்ப் பேச்சைக் காட்டிலும் அவனது மௌனம் அதிகமான எண்ணங்களைப் பிரதிபலிக்கும்.
வறுமையே ஆயினும் மனதில் போதுமென்ற திருப்தி உண்டாகுமானால், அதுவே உயரிய செல்வமாகும்.
மூடன் தன்னை அறிவாளி என்று நினைத்துக் கொள்கிறான். ஆனால், அறிவாளியோ தன்னை முட்டாள் என்று அறிவான்.
காலத்தில் தாமதம் வேண்டாம். தாமதங்களால் அபாயகரமான முடிவும் ஏற்படும்.
மது உனது மூளையைச் செயல் இழக்கச் செய்து, உன்னையும் முட்டாளாக்கி விடுகிறது.
உன்னை நம்பியவனுக்கு ஊழியம் செய். நேர்மையானவனை நேசி. குறைவாகப் பேசி-நிறைவாக செவிப் புலன்களுக்கு வேலை கொடு. நியாயத் தீர்ப்பை எதிர்கொள்.
கற்பனை மொத்தத்தில் பிழைப்பைக் கொடுக்கும் சுகமான கனவு.
பிடிவாதக்காரர்களுக்கு அவர்கள் அடையும் இன்னல்களே பாடங்களாகும்.