Spoken English

இலகுவழி ஆங்கிலம் – பாகம் 16

PAST PARTICIPLE – முடியாத வினை வடிவம்

Gone, Eaten, Written, Played என்பன வினைச்சொற்களின் Past Participle வடிவங்களாகும். இவற்றை இறந்த கால சொற்களாக கருதுவது தவறாகும். இவற்றை மூன்று கால வசனங்களிலும் நாம் பயன்படுத்தலாம்.

நான் சொல்லி யிருக்கிறேன் – I have told – நிகழ்காலம்

அவன் போய் இருந்தான் – He had gone இறந்தகாலம்

அவர்கள் முடித்து விடுவார்கள் – They will have finished – எதிர்காலம்

மேலே சொல்லிபோய்முடித்து என்பவற்றை குறிக்கும் Told, Gone, Finished என்பனவே Past Participle ஆகும். இவற்றுடன் காலங்களை காட்ட நிகழ்காலத்தில் (இருக்கிறான்இருக்கிறாள்இருக்கிறார்கள்) Has, Have உம் இறந்த காலத்தில் (இருந்தான்இருந்தார்கள்இருந்தோம்) Had உம் எதிர்காலத்தில் (விடுவேன்விடுவான்விடுவார்கள்) Will have உம் பயன்படுத்தப்படும்.

குறிப்பு : நிகழ்காலத்தில் இருக்கிறான்இருக்கிறாள்இருக்கிறார்கள் என்பதை பொதுவாக விட்டான்விட்டாள்விட்டார்கள் என்றே குறிப்பிடுகிறோம்.

அவன் சொல்லியிருக்கிறான் – அவன் சொல்லிவிட்டான் – He has told அவர்கள் போயிருக்கிறார்கள் – அவர்கள் போய்விட்டார்கள் – They have gone.

இவ்விரண்டு அமைப்புக்களும் வெவ்வேறு சந்தர்ப்பத்தில்பயன்படுத்தினாலும் ஆங்கிலத்தில் ஒரே அமைப்பே பயன்படுத்தப்படும்.

 நிகழ் காலம்

1. அவன் தூங்கிவிட்டான்

He has slept

2. அவள் ஏற்கனவே அறிவித்துவிட்டாள்

She has already informed

3. நான் என் கைப்பையை தொலைத்துவிட்டேன்

I have lost my handbag

4. அவர்கள் நுழைந்துவிட்டார்கள்

They have entered

5. அவள் தன்படிப்பை முடித்துவிட்டாள்

She has finished her studies

6. நாங்கள் அதைச் செலுத்திவிட்டோம்

We have paid that

7. அவர்கள் அங்கு போய் இருக்கிறார்கள்

They have gone there

8. அவன் இங்கு வந்து இருக்கிறான்

He has come here

9. அவர்கள் பரீட்சை எழுதிவிட்டார்கள்

They have written the exam

10. அவள் உணவு சமைத்துவிட்டாள்

She has cooked food

11. நான் அதைச் செய்துவிட்டேன்

I have done that

12. நாங்கள் இன்று விளையாடியிருக்கிறோம்

We have played today

13. நான் அவர்களை அழைத்து இருக்கிறேன்

I have invited them

14. அவள் அவனுக்குச் சொல்லிவிட்டாள்

She has told him

பயிற்சி1: தமிழில் சொல்லவும்

1. We have solved that problem

2. She has passed the exam

3. I have eaten the banana

4. He has driven this vehicle

5. The thief has escaped

6. I have finished the work

7. They have cleaned that

பயிற்சி 2 : ஆங்கிலத்தில் சொல்லவும்

1. அவர்கள் அவனை அனுமதித்துவிட்டார்கள் (allowed)

2. அவன் இறந்துவிட்டான் (died)

3. அவள் அதை எனக்கு சொல்லிவிட்டாள் (told)

4. அவர்கள் இங்கே தங்கியிருக்கிறார்கள் (stayed)

5. நாங்கள் ஏதோ செய்துவிட்டோம் (done)

6. நான் அதை எழுதிவிட்டேன் (written)

7. அவன் அதை தந்துவிட்டான் (given)

8. அவள் அதை அனுப்பிவிட்டாள் (sent)

 

இறந்த காலம்

1. அவன் அதை புரிந்து இருந்தான் (புரிந்திருந்தான்)

He had understood that

2. அவள் அங்கே போய் இருந்தாள் போயிருந்தாள்)

She had gone there

3. நாங்கள் அங்கே சாப்பிட்டு இருந்தோம் (சாப்பிட்டிருந்தோம்)

We had eaten there

4. அவள் உங்களுக்கு கடிதம் எழுதி இருந்தாள் (எழுதியிருந்தாள்)

She had written letter to you

5. நாங்கள் அதை எடுத்து இருந்தோம் (எடுத்திருந்தோம்)

We had taken that

6. அவர்கள் அங்கிருந்து போய் இருந்தார்கள் (போயிருந்தார்கள்)

They had left from there

7. நாங்கள் அவர்களை நம்பி இருந்தோம் (நம்பியிருந்தோம்)

We had believed them

8. அவன் பணம் அனுப்பி இருந்தான். (அனுப்பியிருந்தான்)

He had sent money

9. அவள் என் புத்தகத்தை பாவித்து இருந்தாள் (பாவித்திருந்தாள்)

She had used my book

10. நாங்கள் புத்தகம் வாங்கி இருந்தோம் (வாங்கியிருந்தோம்)

We had bought book

11. அவர்கள் வகுப்புக்கு போய் இருந்தார்கள் (போயிருந்தார்கள்)

They had gone to class

12. அவள் அந்த புத்தகம் வாசித்து இருந்தாள் (வாசித்திருந்தாள்)

She had read that book

13. அவன் எல்லாவற்றையும் திட்டமிட்டு இருந்தான் (திட்டமிட்டிருந்தான்)

He had planned everything

14. அவர்கள் ஏதோ எழுதி இருந்தார்கள் (எழுதியிருந்தார்கள்)

They had written something

15. நீங்கள் அதை சொல்லி இருந்தீர்கள் (சொல்லியிருந்தீர்கள்)

You had told that

16. நாங்கள் அதை அனுப்பி இருந்தோம் (அனுப்பியிருந்தோம்)

We had sent that

17. அவள் படிப்பித்து இருந்தாள் (படிப்பித்திருந்தாள்)

She had taught

18. நான் நேற்று ஆரம்பித்து இருந்தேன் (ஆரம்பித்திருந்தேன்)

I had started yesterday

பயிற்சி 3 : தமிழில் சொல்லவும்

1. They had punished me

2. She had bought this jewellery

3. He had paid the money for that

4. Thad finished all the work

5. They had come last month

6. We had informed them

பயிற்சி 4 : ஆங்கிலத்தில் சொல்லவும்

1. அவள் எனக்குச் சொல்லியிருந்தாள்

2. அவர்கள் கடிதம் எழுதியிருந்தார்கள்

3. அவன் இன்று வகுப்புக்கு வந்திருந்தான்

4. நீங்கள் அதில் பங்குபற்றியிருந்தீர்கள்

5. நாங்கள் அவர்களுக்கு அதை அறிவித்திருந்தோம்

6. அவள் கடந்த வருடம் பரீட்சை எழுதியிருந்தாள்

எதிர் காலம்

1. அவள் நாளை இங்கு வந்துவிடுவாள்

She will have come tomorrow

2. அவன் அடுத்தவாரம் எழுதிவிடுவான்

He will have written next week

3. அவன் நாளை அவளை பார்த்து விடுவான்

He will have seen her tomorrow

4. அவர்கள் இன்று உடன்பட்டு விடுவார்கள்

They will have agreed today

5. அவள் அதை முடித்து விடுவாள்

She will have finished

6. நான் அடுத்த வருடம் போய் விடுவேன்

I will have gone next year

7. அவர்கள் அடுத்த வருடம் எழுதி விடுவார்கள்

They will have written next year

8. அவர்கள் பெற்று விடுவார்கள்

They will have received

9. நான் பரீட்சையில் சித்தியடைந்து விடுவேன்

I will have passed the exam

10. அவர்கள் போட்டியில் வென்று விடுவார்கள்

They will have won the match

11. அவன் அதை வரைந்து விடுவான்

He will have drawn that

12. நாங்கள் அடுத்த வாரம் அனுப்பி விடுவோம்

We will have sent next week

13. அவன் அதை உடைத்து விடுவான்

He will have broken that

14. நான் நாளை சுத்தப்படுத்தி விடுவேன்

I will have cleaned tomorrow

15. நீ அதை சாப்பிட்டு விடுவாய்

You will have eaten that

பயிற்சி 5 : தமிழில் சொல்லவும்

1. They will have taken it tomorrow

2. You will have informed next week

3. She will have published that next year

4. He will have met her next year

5. They will have joined in a job next week

 

பயிற்சி 6 : ஆங்கிலத்தில் சொல்லவும்

1. அவள் அடுத்தவருடம் பரீட்சை எழுதி விடுவாள்

2. அவர்கள் நாளை அங்கு போய்ச் சேர்ந்து விடுவார்கள்

3. நாங்கள் அடுத்தவாரம் அதை ஆரம்பித்து விடுவோம்

4. அவள் இரண்டுமாதங்களில் அந்த பயிற்சியை தொடங்கி விடுவாள்

5. நான் நாளை அங்கிருந்து போய் விடுவேன்

 

இறந்த காலத்தில் எதிர் காலம் (கற்பனை வசனம்)

(Would have)

1. அவர்கள் நேற்று அதைச் செய்திருக்கலாம் (ஆனால் செய்யவில்லை)

They would have done that yesterday

2. நாங்கள் சென்றவாரம் அங்கு வந்திருப்போம் (ஆனால் வரவில்லை)

We would have come there last week

3. அவள் பலதடவை அங்கு போயிருப்பாள் (ஆனால் போகவில்லை)

She would have gone there several times

4. நாங்கள் போனவருடம் பரீட்சை எழுதியிருப்போம் (ஆனால் எழுதவில்லை)

We would have written the exam last year

 

பயிற்சி 7 : தமிழில் சொல்லவும்

1. They would have come there

2. He would have informed that

3. We would have written the letter

4. They would have told you

5. She would have given the money

பயிற்சி 8: ஆங்கிலத்தில் சொல்லவும்

1. அவன் அதைச் சொல்லியிருப்பான் (ஆனால் சொல்லவில்லை)

2. நீங்கள் எதையாவது எடுத்திருப்பீர்கள் (ஆனால் எடுக்கவில்லை)

3. அவள் அவர்களைச் சந்தித்திருப்பாள் (ஆனால் சந்திக்கவில்லை)

4. நான் அந்த கணினியை வாங்கியிருப்பேன் (ஆனால் வாங்கவில்லை)

5. அவன் அவர்களை அழைத்திருப்பான் (ஆனால் அழைக்கவில்லை)

 

பயிற்சி 9 : ஆங்கிலத்தில் சொல்லவும்

1. அவர்கள் அலுவலகத்துக்குப் போய்விட்டார்கள்

2. நாங்கள் அதைப்பற்றி அறிவித்திருந்தோம்

3. நான் அங்கு வந்திருக்கிறேன்

4. அவன் அதைப்பற்றிச் சொல்லிவிட்டான்

5. அவர்கள் நேற்று எங்கோ போயிருந்தார்கள்

6. அவள் அதை கண்டுபிடித்துவிட்டாள்

7. நாங்கள் அவர்களைச் சந்தித்திருந்தோம்

8. அவர்கள் எங்களைத்திட்டியிருந்தார்கள்

9. நீங்கள் இந்த தகவல்களைக் கேட்டிருக்கிறீர்கள்

10. அவள் அதை அறிவித்திருக்கிறாள்

11. நீங்கள் அவளை எங்கே சந்தித்திருக்கிறீர்கள்

12. நீங்கள் அந்த பிரச்சினையைக்கையாண்டிருந்தீர்கள்

13. அவன் இந்த வேலையை முடித்துவிட்டான்

14. அவர்கள் நாளை அங்கு போய்விடுவார்கள்

15. அவன் அன்று அவளைப்பற்றி நினைத்திருந்தான்

16. அவள் நேற்று ஒரு பாட்டுப் பாடியிருந்தாள்

17. நாங்கள் அவர்களுக்கு அதை சொல்லிவிடுவோம்

18. நீங்கள் நாளை பரீட்சை எழுதிவிடுவீர்கள்

19. அவன் அந்த முகவரியைத்தந்திருப்பான் (ஆனால் தரவில்லை)

20. அவன் அதை கேட்டிருக்கிறான்

21. அவர்கள் அதை உங்களுக்கு தந்திருந்தார்கள்

22. நான் அதை ஆரம்பித்துவிட்டேன்

23. நீங்கள் அதை இங்கு பார்த்திருக்கிறீர்கள்

24. நாங்கள் அதை ஏற்கனவே செய்திருந்தோம்

25. அவன் அதை முடித்து விட்டான்

26. நீ அதில் நடித்திருந்தாய்

27. அவர்கள் திரும்பி விட்டார்கள்

28. நாங்கள் நாளை போய் விடுவோம்

29. அவன் ஏதோ சொல்லிவிட்டான்

30. நீங்கள் எதையோ பார்த்து விட்டீர்கள்

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

வணக்கம்! Ad Blocker யூஸ் பண்றீங்களா?

தொடர்ந்து கல்வி உலகு இணையத்தளத்தை படிக்க Ad Blocker-ல் Kalviulagu வலைதளத்தை exclude செய்யுங்கள்.