Spoken English

இலகுவழி ஆங்கிலம் – பாகம் 2

கேள்வி சொற்கள்
What – என்ன
Where – எங்கே
how – எப்படி
When – எப்போது
Who – யார்
Which – எது, எந்த
கேள்வி சொற்களை கொண்டமைந்த கேள்விகள்
கேள்வி சொற்கள் இல்லாது அமைந்த கேள்விகளுக்கு முன்பாக கேள்வி சொற்களை பயன்படுத்தி பின்வருமாறு கேள்விகளை உருவாக்க முடியும்.
ஒருமை: is         பன்மை: are
எங்கே அந்த ஆசிரியர்?
Where is that teacher?
அவர்கள் எங்கே இருக்கிறார்கள்?
Where are they?
அந்த மருத்துவர் எப்படி?
How is that doctor?
எது சிறியது?
Which is small?
என்னுடைய புத்தகம் எங்கே?
Where is my book?
உங்கள் தொழில் எப்படி?
How is your job?
உன் அக்கா எங்கே?
Where is your sister?
பயிற்சி 7
  1. What is the time?
  2. Where are you?
  3. Who is she?
  4. How is he?
  5. When is your birthday?
பயிற்சி 7 விடை
    1. நேரம் என்ன?
    2. எங்கே நீ இருக்கிறாய்?
    3. அவள் யார்?
    4. அவன் எப்படி?
    5. எப்போது உனது பிறந்தநாள்?
பயிற்சி 8ஆங்கிலத்தில் சொல்லவும்
  1. அவர்கள் யார்?
  2. அவன் இப்ப எங்கே இருக்கிறான்?
  3. திகதி என்ன?
  4. அங்கே என்ன இருக்கிறது?
  5. அந்த நிகழ்ச்சி எப்படி?
விடைகள்
    1. Who are they?
    2. Where is he?
    3. what is the date?
    4. what is there?
    5. How is that program?

இறந்த காலம், நிகழ்காலம், எதிர்காலம்

நிகழ்கால வாக்கியங்களை அமைக்கும் போது am, is, are சொற்களும் இறந்தகால வாக்கியங்களை அமைக்கும் போது was, were ஆகிய சொற்களும் எதிர்கால வாக்கியங்களை அமைக்கும் போது will சொல்லும் கட்டாயம் பயன்படுத்த வேண்டும்.

இதற்கான சில உதாரணங்கள்

நான் வைத்தியசாலையில் இருக்கிறேன்
I am in the Hospital
நான் வைத்தியசாலையில் இருந்தேன்
I was in the Hospital
நான் வைத்தியசாலையில் இருப்பேன்
I will be in the Hospital

அபி என் நண்பன் (இருக்கிறான்)
Abi is my friend
அபி என் நண்பனாக இருந்தான்
Abi was my friend
அபி என் நண்பனாக இருப்பான்
Abi will be my friend

அவர்கள் நியூயோர்க்கில் இருக்கிறார்கள்
They are in Newyork
அவர்கள் நியூயோர்க்கில் இருந்தார்கள்
They were in Newyork
அவர்கள் நியூயோர்க்கில் இருப்பார்கள்
They will be in Newyork

காலங்கள் மூன்றும் – கேள்விகள், எதிர்மறைகள்


நான் வகுப்பில் இருக்கிறேன்
I am in the class
நான் வகுப்பில் இல்லை
I am not in the class
நான் வகுப்பில் இருக்கிறேனா?
Am I in the class?
நான் எங்கே இருக்கிறேன்?
Where am I?
நான் வகுப்பில் இருந்தேன்
I was in the class
நான் வகுப்பில் இருக்கவில்லை
I was not in the class
நான் வகுப்பில் இருந்தேனா?
Was I in the class?
நான் எங்கே இருந்தேன்?
Where was I?
நான் வகுப்பில் இருப்பேன்
I will be in the class
நான் வகுப்பில் இருக்க மாட்டேன்
I will not be in the class
நான் வகுப்பில் இருப்பேனா?
Will I be in the class?
நான் எங்கே இருப்பேன்
Where will I be ?

 
பயிற்சி
  1. அவர்கள் ஜப்பானில் இருக்கிறார்களா?
  2. அவன் நேற்று அங்கே இருந்தானா?
  3. நீங்கள் எங்கே இருப்பீர்கள்?
  4. அவர்கள் வகுப்பில் இல்லை

விடை

  1. Are they in japan?
  2. Was he there yesterday?
  3. Where will you be?
  4. They are not in class

பாகம் 3

பாகம் 3ஐ கற்பதற்கு மேலே உள்ள பாகம் 3 என்பதை அழுத்துக.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

வணக்கம்! Ad Blocker யூஸ் பண்றீங்களா?

தொடர்ந்து கல்வி உலகு இணையத்தளத்தை படிக்க Ad Blocker-ல் Kalviulagu வலைதளத்தை exclude செய்யுங்கள்.