பொது அறிவு

உலக பொது அறிவு தொகுப்பு – 2

தென் அமெரிக்காவின் உயர்ந்த சிகரம் அக் கொன்கா.

வட அமெரிக்காவின் உயர்ந்த சிகரம் மேக்கின்லி மலை.

ஆசியாவின் மிக உயர்ந்த சிகரம் எவரெஸ்ட்.

ரத்தம் நம் உடலில் சுற்றி வர 60 வினாடிகள் தேவை.

நம் ஒவ்வொருவருக்கும் கைரேகைகள் வேறுபடு வது போல நம் நாக்கில் உள்ள ரேகைகளும் ஒவ்வொருவருக்கும் வேறுபடும்.

அதிக உணவு உண்ணும்போது இரைப்பை விரியும். ஆனால் உணவே இல்லாதபோது வயிறு சுருங்காது.

கைகளில் காணப்படும் கைரேகை மனிதனின் ஆயுள் முழுவதும் மாறுவதில்லை .

மனிதனின் சிந்தனை வேகம் மணிக்கு 270 கிலோ மீட்டர் ஆகும்.

பின்புறமாக மரத்தில் ஏறும் விலங்கு கரடி.

இந்தியாவின் உணவுச் சாலை என்று அழைக்கப்படும் மாநிலம் பஞ்சாப்.

இந்தியாவில் முதன் முதலில் அஞ்சல் முறையை அறிமுகப்படுத்தியவர் டல்ஹௌசி பிரபு. இவர் ஆட்சியில் இருந்தபோது 753 தபால் நிலையங்கள் திறக்கப்பட்டது. 1854ல் தந்தியை அறிமுகம் செய் தார். இந்திய தந்தி முறையின் தந்தை எனப் போற்றப்பட்டவர்.

ஆசிய கண்டத்திலுள்ள 5 பெருங்கடலிலும் நீந்தி சாதனையைப் படைத்தவர் இந்தியாவைச் சேர்ந்த புல்லர் சௌத்திரி என்ற பெண்.

இந்தியாவில் முதன் முதலில் விமானம் மூலம் தபால் கொண்டு செல்லப்படும் சேவை 1911ம் ஆண்டு துவக்கப்பட்டது.

பத்திரிகைகளே வெளிவராத நாடு திபெத்

மகாபாரதத்தின் வேறு பெயர் சத்தஹஸ்ரிசம் ஹிதா.

கடல்தங்கம் என்று அழைக் கப்படுவது சுறா மீன்.

உலகின் முதல் கம்ப்யூட்டர் எனியாக்.

இந்திய மரங்களின் அரசி தேக்கு மரம்.

பச்சை நிறமாக உள்ள வாயு குளோரின்.

சிப்பியில் முத்து உண்டாக 15 ஆண்டுகள் ஆகும்.

மிகச்சிறிய சுரப்பி தைராய்டு சுரப்பி.

ஆஸ்திரேலியாவில் காணப்படும் கங்காருவில்120 வகைகள் உள்ளன. இதன் ஆயுள் காலம் 28
ஆண்டுகள்.

சமணர்கள் வாழ்ந்த ஊர் கழுகுமலை.

கோலார் தங்க வயலில் கோலிங்கேஸ்வரர் ஆலயத்தில் 63 அடிகள் உயரமுள்ள நந்தி 108 அடிகள்
உயரமுள்ள சிவலிங்கத்தை நோக்கி அமர்ந்துள்ளது

சவுதி அரேபியாவின் பழைய பெயர் ஹேஜாஸ்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

வணக்கம்! Ad Blocker யூஸ் பண்றீங்களா?

தொடர்ந்து கல்வி உலகு இணையத்தளத்தை படிக்க Ad Blocker-ல் Kalviulagu வலைதளத்தை exclude செய்யுங்கள்.