Spoken English
இலகுவழி ஆங்கிலம் – பாகம் 9

ஏவல் வசனங்கள், தீர்மானவசனங்கள்
ஏவல் வசனங்கள்
ஒரு நபரிடம் செய்யும்படி கட்டளையிட்டு சொல்லும் வசனங்களே ஏவல் வசனங்களாகும். உதாரணமாக அங்கே போ, போய் ஓய்வெடு, விளையாடாதே என்பன இதற்கு உதாரணங்களாகும். நீ அல்லது நீங்கள் என்ற அமைப்புடன் மட்டுமே இது பயன்படுத்தப்படுகிறது. இவ்வகை வசனங்களில் நீ அல்லது நீங்களினை குறிக்கும் You என்ற சொல் பொதுவாக மறைந்து வரும்.
ஏவல் நேர் வசனங்கள்
- அங்கே போ – Go there
- இதை எழுது – Write this
- இங்கே ஒப்பமிடு – Sign here
- இங்கே இரு – Sit here (or) be here
- பார்த்து வாசி – See and read
- அதை எழுதி அனுப்பு – Write that and send
- இங்கு வந்து பார் – Come and see here
- போய் விளையாடிவிட்டு வா – Go, play and come
- வேகமாக போய் அதை எடுத்துவா – Go fast and bring that
- போய் அந்த புத்தகத்தை கொண்டுவா – Go and bring that book
பயிற்சி 1: தமிழில் சொல்லவும்
- Go and study
- Go and take rest
- Go and help them
- Write and bring
- Wait and see
- Come and tell me
- Cook well and eat
- Go and play there
- Come and sit here
பயிற்சி 1 விடைகள்
- போய் படி
- போய் ஓய்வெடு
- போய் அவர்களுக்கு உதவி செய்.
- எழுதி கொண்டுவா
- காத்திருந்து பார்
- வந்து எனக்கு சொல்லு
- நன்றாக சமைத்து சாப்பிடு.
- போய் அங்கே விளையாடு
- வந்து இங்கே உட்காரு
பயிற்சி 2 : ஆங்கிலத்தில் சொல்லவும்
- இங்கு வந்து விளையாடு
- போய் அவரைப் பார்
- வந்து இதை துப்பரவு செய்
- இன்று தங்கிவிட்டு நாளை போ
- வாசித்து எனக்குச் சொல்லு
- வந்து ஓய்வெடுத்திட்டுப் போ
- போய் அதை வாசி
- சாப்பிட்டுவிட்டு சொல்லு
- போய் அதை செய்
பயிற்சி 2இற்கான விடைகள்
- Come and play here.
- Go and see him.
- Come and clean this.
- Stay today and go tomorrow
- Read and tell me
- Come, take rest and go.
- Go and read that.
- Eat and tell 10. Eat fast.
- Go and do that.
ஏவல் எதிர்மறை வசனங்கள்
- அங்க போகவேண்டாம்
- Don’t go there
- இதை சாப்பிட வேண்டாம்
- Don’t eat this
- இப்ப தூங்க வேண்டாம்
- Don’t sleep now
- என்னைத் தொடாதே
- Don’t touch me
- எங்கயும் போகாதே
- Don’t go anywhere
- வந்து என்னைத் தொந்தரவு செய்யாதே
- Don’t come and disturb me
- போய் அவனுக்குச் சொல்லாதே
- Don’t go and tell him
- அவனை வெறுக்காதே
- Don’t hate him
- போய் அவனைப் பார்க்காதே
- Don’t go and see him
- இங்க வந்து விளையாடாதே
- Don’t come and play here
பயிற்சி 3 : தமிழில் சொல்லவும்
- Don’t tell me anything
- Don’t come and ask me
- Don’t believe them
- Don’t bring anything here
- Don’t go and disturb them
- Don’t forget me
- Don’t go and play with them
- Don’t ask them
- Don’t see that
பயிற்சி 3இற்கான விடைகள்
- எனக்கு எதுவும் சொல்ல வேண்டாம்.
- வந்து என்னைக் கேட்க வேண்டாம்.
- அவர்களை நம்ப வேண்டாம்.
- இங்கு எதையும் கொண்டுவர வேண்டாம்.
- போய் அவர்களை தொந்தரவு செய்ய வேண்டாம்.
- என்னை மறக்க வேண்டாம்.
- போய் அவர்களுடன் விளையாட வேண்டாம்.
- அவர்களைக் கேட்க வேண்டாம்.
- அதைப் பார்க்க வேண்டாம்.
பயிற்சி 4 : ஆங்கிலத்தில் சொல்லவும்
- என்னுடன் கதைக்காதே
- அங்கு போய் படிக்காதே
- அதை எடுக்காதே
- எங்கேயும் போகாதே
- அங்கே விளையாடாதே
- அந்த குழந்தையை தொடாதே
- போய் அவளுடன் கதைக்காதே
- இங்கு வந்து என்னை சந்திக்காதே
- எதையும் திருடாதே
- அதை போய் பார்க்காதே
விடைகள்
- Don’t talk to me.
- Don’t go and study there.
- Don’t take that.
- Don’t go anywhere.
- Don’t play there
- Don’t touch that child.
- Don’t an talk to her.
- Don’t come and meet me.
- Steal anything
- Do go and see that.
இலகுவழி ஆங்கிலம் பாகம் 10