சட்டம் என்றால் என்ன?
சட்டம் – ஒரு நாட்டினுள் மனிதர்களின் வெளிநடத்தையினைக் கட்டுப் படுத்துவதற்காக ஆட்சி அதிகாரத்தை அடிப்படையாகக் கொண்டு அந் நாட்டின் அரசினால் நடைமுறைப்படுத்தப்படும் கட்டளையே சட்டமாகும் அல்லது அடிப்படை மட்டத்தில் சமூகத்தை ஆளுகின்ற ஒரு தொகுதி விதிகள்.
சட்ட விடயங்களும் பொறுப்பாக செயற்படும் நிறுவகங்களும்
-
-
- சட்டமியற்றல் – சட்டமன்றம்
- சட்டபொருள் விளக்கம் – நீதித்துறை
- சட்ட அமுலாக்கம் – ஆட்சித்துறை
-
சட்டத்தின் இரு பிரதான மூலங்கள்
-
-
- சட்டவாக்கம்
- உயர் நீதிமன்ற உயர்வுகள்
-
அடிப்படைச் சட்டம் – மக்கள் இறைமையினைச் செயற்படுத்தும் ஆவணமாகும்.
சட்டத்தின் வகைகள்
-
-
- குற்றவியல் சட்டம்
- குடியியல் சட்டம்.
-
இலங்கை சட்டங்கள் – Srilanka Law Rules
தேசவழமைச் சட்டம்
இலங்கையின் வடமாகாணத்தை வதிவிடமாக கொண்ட தமிழ் மக்களுக்கும், அவர்களுடைய ஆதனங்களுக்கும் ஏற்புடைத் தான சட்டம், இச்சட்டம் 1706 இல்
டச்சு ஆட்சியாளர் காலத்தின்போது Class Isse அதிகாரியினால் அறிமுகப்படுத்தப்பட்டதாகும்.
நாட்டின் மிக உயர்ந்த சட்ட உத்தியோகத்தர் – சட்டமா அதிபர்
நீதி வழங்குதல் செயற்பாடுகள் தோற்றம் பெற்றது – 1978 ஆண்டின் 2ம் இலக்க நீதி மன்ற ஒழுங்குகள் கட்டளைச்சட்டம்
தமிழ் மொழி ஆட்சி மொழியாக்கப்பட்டதிருத்தச்சட்ட மூலம் – 16வது
தனிச் சிங்களச் சட்டம் – 1956 யூன் 05 இல் எஸ். டபிள்யூ. ஆர். டி. பண்டாரநாயக்காவினால் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.
நுகர்வோரைப் பாதுகாக்கும் சட்டம் – 1979 ஆண்டின் நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம்
குறிப்பிடப்பட்ட விலையிலும் பார்க்க கூடுதலான விலைக்கு விற்பனை செய்யும் வர்த்தகர்களை கட்டுப்படுத்தும் சட்டம் – 1956ம் ஆண்டின் விலை கட்டுப்பாட்டு சட்டம்.
சிறுவர் உரிமைகள் தொடர்பான இலங்கைச் சட்டங்கள்
- தண்டனைச் சட்டக்கோவை (1995 ஆம் ஆண்டு 22 ம் இலக்க சட்டம் 1998 ஆம் ஆண்டு 29 ஆம் இலக்க சட்டம்)
- சிறுவர் துஷ்பிரயோகங்களை தடுக்க சிறுவர் பாதுகாப்புக்கு என அமைக்கப்பட்டது – 1998ன் சிறுவர் பாதுகாப்புக்கான தேசிய அதிகார சபை சட்ட மூலமாகும்.
முஸ்லிம்களின் விவாகம் தொடர்பாக சட்டம் உருவாக்கப்பட்ட ஆண்டு – 1929 இல்
உள்நாட்டு இறைவரிச்சட்டம் அறிமுகமானது – 1979, (திருத்தங்கள் 2000, 2002)
2006ம் ஆண்டின் 27ம் இலக்க தேசிய அதிகார சபையின் புகையிலை மதுபான சட்டத்தின் கீழ் குற்றங்களாவன.
- மூடிய பொது இடங்களில் புகைத்தல்,
- 21 வயதிற்கு குறைந்தவர்களுக்கு சிகரட் விற்பனை செய்தல்,
- 21 வயதிற்கு குறைந்தவர்களால் சிகரட் விற்பனை செய்தல்,
- புகையிலை மதுபான பொருட்கள் ஆகியவற்றின் விளம்பரம்
2007ம் ஆண்டின் 11ம் இலக்க நுளம்பு பெருக்க தடுப்புச் சட்டம்
நுளம்பு பெருக்கத்தை தடுப்பதற்காகவும் நுளம்புபெருகும் இடங்களை அழிப்பதற்காகவும் அவற்றுடன் தொடர்புடைய அல்லது அவற்றின் இடைநேர் விளைவான கருமங்களுக்கு ஏற்பாடு செய்வதற்குமானதொரு சட்டம்.
வங்கி சட்டங்கள்
- பிரமிட் கட்டமைப்புக்களை கொண்ட தடை செய்யப்பட்ட திட்டங்களில் பங்குபற்றுதலை தடை செய்யும் திட்டம் – 1988ம் ஆண்டின் 30ம் இலக்க வங்கித் தொழிற்சட்ட 83ஊ பிரிவு
- 1949ம் ஆண்டின் 58ம் இலக்க நாணய விதிச்சட்டத்தின் 58ம் பிரிவு
பின்வருவனவற்றை தண்டனைக்குரிய குற்றமாக பிரகடனப்படுத்தியுள்ளது.- எந்த ஓர் நாணயத்தாளையும் வெட்டுதல், துளையிடுதல், அச்சிடுதல், முத்திரை பொறித்தல், நாணயத்தாளின் மீது ஏதேனுமொன்றை வரைதல், அல்லது இலச்சினை பொறித்தல் என்பன.
- நாணயத்தாளின் மீது விளம்பர வடிவிலான பொருட்களை ஒட்டுதல்.
- நாணயத்தாள்களை மீளத் தயாரித்தல் அல்லது உருமாதிரி செய்தல்.
- போலி நாணயத்தாள்களை தயாரித்தல், பரிமாற்றல், பயன்படுத்தல் ஆகியவற்றுக்கு குற்றவியல் கோவையின் பிரிவு இலக்கம் 478 அ, 478 ஆ. 478 இ மற்றும் 478 7 என்பவற்றின்படி தண்டனை வழங்கப்படும்.
1982ம் ஆண்டு 6ம் இலக்க தேசிய தொலைக்காட்சி சேவைகள் ஏற்பாடு களுக்கான
பாராளுமன்ற சட்டத்தின் கீழ் இலங்கை ரூபவாஹினி கூட்டுத் தாபனம் உருவாக்கப்பட்டது.
1988ம் ஆண்டின் வங்கிச் சட்டத்தின் 30 ம் சரத்திற்கிணங்க அதிகாரம் பெற்ற வணிக வங்கிகளில் பொதுமக்களால்வைப்பிலிடப்பட்ட பணம் அல்லது தங்க ஆபரணம் போன்ற பெறுமதி மிக்கவற்றை கைவிடப்பட்ட ஒரு சொத்தாக கருதப்படுவது வைப்பிலிடப்பட்டவர்களால் ஆகும் அது பத்து ஆண்டுகள் கழிந்தபின்பும் கோராதிருக்கும் சந்தர்ப்பத்தில்.
1998ம் ஆண்டின் 21ம் இலக்க உரித்துப் பதிவுச்சட்டம் பதிவு செய்வது – காணியின்
சொத்துரிமையை
சுதந்திரம் – அனைவரும் சமூகத்தில்
கௌரவமாக வாழ்வதற்கான உரிமையைப் பெற்றிருத்தல் சுதந்திரமாகும்.
சமத்துவம் – பிரசைகள் அனைத்து அடிப்படை
உரிமைகளையும் அனுபவிப்பதற்கு சமூகத்தில் சமத்துவம் நிலவ வேண்டும்.
கட்சி முறை – பொது மக்கள் கட்சிகளின்
கொள்கைகளுக்கேற்ப தனது பெறுமதிமிக்க வாக்குகளை தேர்தலின்போது தமக்கு விருப்பமான
கட்சிகளுக்கு வழங்குவர். தேர்தலின் போது அளிக்கப்பட்ட செல்லுபடியான வாக்குகளின்படி
அரசாங்கக் கட்சியும், எதிர்க்கட்சியும் தெரிவு செய்யப்படும்.
இருகட்சி முறை
ஒரு நாட்டில் இரண்டு கட்சிகள் மட்டும் காணப்படு மாயின் அது இருகட்சி முறை எனப்படும்.
ஜனநாயகம் மக்களால் மக்களுக்கான மக்களின் ஆட்சிமுறையாகும்.
நேரடி ஜனநாயகம் ஒன்று கூடிய பிரசைகளின் ஆட்சி நிர்வாகமாகும்.
பிரதிநிதித்துவ ஜனநாயகம் வாக்குரிமை உள்ள பிரஜைகள் ஆட்சி நடவடிக்கைகளுக்காகத் தமது பிரதிநிதிகளைத் தேர்தல் மூலம்
பாராளு மன்றத்திற்குத் தெரிவு செய்தல் பிரதிநிதித்துவ ஜனநாயகமாகும்.
1995ம் ஆண்டின் 11 ஆம் இலக்க நடுத்தீர்ப்புச் சட்டத்தின் நோக்கம்
வர்த்தகம் தொடர்பான பிணக்குகளுக்குத் திறத்தவர்கள் தங்களுக்கு தீர்வு காணுதலை ஊக்குவித்தல்,
வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு ஒரு ஊக்குவிப்பாக அமைதல்.
நீதிமன்றங்கள் மூலம் திறத்தவர்கள் உதவி பெறுவதற்கு ஏதுவாக இருத்தல்.
இஸ்லாமிய சட்டம் தோற்றம் பெற்ற காலம் கி.பி. 6 ஆம் நூற்றாண்டு
முஹமத் சட்டதொகுப்பு உருவாக்கப்பட்ட ஆண்டு 1806 இல்
மனிதனுக்குத் தேவையான சட்டதிட்டங்கள் பற்றிக் கூறும் இஸ்லாமிய வேத நூல் – திருக்குர் ஆன்
இலங்கையின் முதலாவது சட்டமா அதிபர் – ஸ்ரீமத் வில்லியம் ஓகல் கா
சட்டமா அதிபரை நியமிப்பவர் – ஜனாதிபதி
அரச கரும மொழிகள் சட்டம் அமுலாக்கப்பட்டது –1956
சிறுவர் துஷ்பிரயோகங்களை தடுக்க சிறுவர் பாதுகாப்புக்கு என அமைக்கப்பட்டது – 1998 ன் சிறுவர் பாதுகாப்புக்கான தேசிய அதிகார சபை சட்ட மூலமாகும்.
இலங்கை சட்டங்கள் மற்றும் விதிமுறைகள்
இலங்கை சட்ட ஆணைக்குழு ஒரு நியதிச்சட்ட அமைப்பாகும்.
சட்டம் எமது சமூகத்தில் சிறப்பான ஓர் இடத்தைப் பெறுவதற்கான காரணம்
மக்களின் பிரதிநிதித்துவ சபையாக விளங்கும் பாராளுமன்றத்தில் அது நிறைவேற்றப்படுகின்றது.
வர்த்தக சட்டத்தின் நோக்கம் வணிகப் பயன்தரு மாற்றலையும் விளைவில் கூறக்கூடிய தன்மையையும் விருத்தி செய்தல்
இலங்கையில் குடியியல் தீங்குகள் தொடர்பான சட்டங்களைக் கொண்டிருப்பது – வழக்கு சட்டமும் சட்ட வல்லுனர்மூல நூல்களும்
ஒரு சட்ட மூலத்தை சட்டமாக நிறைவேற்றுவதில் இணங்கியொழுகப் பட வேண்டிய நடைமுறையானது விதித்துரைக்கப்பட்டுள்ளது
அரசியல் அமைப்பில்,
இலங்கையில் சாதாரணமாக சட்ட உதவி பெறுவதற்குச் செலவு செய்ய முடியாதவர்களுக்குச் சட்ட உதவியை வழங்கி வரும் நிறுவனம் – இலங்கைசட்ட உதவி துனைக்குழு
குடியியற் சட்டம் அடிப்படையாக கொண்ட சட்டமுறைமை – உரோமச் சட்டம்
சர்வதேச சட்டத்தின் கீழ் அரசொன்றின் ஆள்புலமானது உள்ளடக்குவது – பெருநிலப்பரப்பு, தேசிய நீர்நிலை. வான் பரப்பு
சட்டம் எதற்கு அத்தியாவசியமானது – நாட்டை ஆளுவதற்கு
வர்த்தகச் சட்டம் – மனித செயற்பாட்டின் வெவ்வேறு துறைகளில் ஏற்படும்
பிணக்குகளை ஒழுங்குபடுத்தித் தீர்ப்பதற்கு
இலங்கை சட்ட கல்லூரி பரீட்சை / Sri Lanka Law College Exam
சட்டங்கள் பற்றிய தொகுப்பின் அடுத்த பகுதியை வாசிக்க இலங்கை சட்டங்கள் பாகம் 2 எனும் பகுதிக்கு செல்லுங்கள்