இலங்கைபொது அறிவு

இலங்கையின் பண்டிகைகளும், அவற்றின் முக்கியத்துவமும்!

பௌத்தர்
  • ஜனவரி – துருது
    போயா – கௌதம புத்தரின் முதலாவது இலங்கை விஜயம்
  • பெப்ரவரி – நவம்
    போயா
  • மார்ச் – மெதின்
    போயா
  • ஏப்ரல் – பக்
    போயா – கௌதம புத்தரின் இரண்டாவது இலங்கை விஜயம்
  • மே – வெசக்
    போயா – புத்த பெருமானின் பிறப்பு
    , ஞான உதயம், பரிநிர்வாணம் ஆகிய மூன்றையும் மையமாகக் கொண்டு
    கொண்டாடப்படுகிறது.
  • ஜூன் – பொசன்
    போயா – இலங்கைக்கு மகிந்த தேரர் புத்த சமயத்தைக் கொண்டு வந்ததை நினைவு கூறும்
    முகமாக கொண்டாடப்படுகிறது.
  • ஜுலை – எசல
    போயா – புத்தரின் புனித தந்தத்திற்கு பூசை நடத்துமுகமாக கண்டி ஸ்ரீ தலதா பெரகராவை
    நினைவு கூர்ந்து கொண்டாடப்படுகிறது
    .
  • ஓகஸ்ட் – நிக்கினி
    போயா
  • செப்டெம்பர் – பினர போயா – மழைகாலத்தின் மூன்றாவது மாதம்
  • ஒக்டோபர் – வப்
    போயா – மழைகாலத்தின் இறுதி மாதம்
  • நவம்பர் – இல்
    போயா
  • டிசம்பர் – உந்துவப்
    போயா – சங்கமித்தை இலங்கைக்கு வருகை தந்தமை.
  • சிங்கள தமிழ் புதுவருடம் – புதுவருட ஆரம்பத்தை நினைவுகூரல்.
 இந்துக்கள்
  • தைப்பொங்கல் – சூரியனுக்கு நன்றி தெரிவிப்பதற்காக கொண்டாடப்படுகிறது.
  • மகா சிவராத்திரி – சிவபெருமானிடமிருந்து அருளைப் பெற்றுக்கொள்ளும் முகமாக
    விரதம் அனுஷ்டித்து இரவு முழுவதும் விழித்திருந்து கொண்டாடப் படுவதாகும்.
  • தீபாவளி – நரகாசுரன்
    என்ற கொடும் அசுரனை கிருஷ்ண பகவான் அழித்த தினத்தை நினைவுகூர்ந்து
    கொண்டாடப்படுவதாகும்.
  • கல்விக்கு அதிபதியான கடவுள் – விநாயகர்
  • இந்தியாவில் இந்து மக்கள் 12
    ஆண்டுகளுக்கு ஒரு தடவை கங்கை நதிக் கரையில் கொண்டாடும் திருவிழா – கும்பமேளா
  • கும்பமேளா – இந்து
    சமயத்தினரால் ஒவ்வொரு பன்னிரெண்டு ஆண்டு களுக்கு ஒருமுறை நான்கு இடங்களில்
    கொண்டாடப்படும் விழாவாகும்.
முஸ்லிம்கள்
  • மீலாதுன்நபி – முகம்மது நபியின் பிறந்த தினம்
  • றமழான் – இஸ்லாமிய
    ஹிஜ்ரி ஆண்டுக் கணக்கின்படி எட்டாவது மாதமான றமழான் மாதத்தில் இஸ்லாத்தின்
    நான்காவது கடமையாகிய புனித நோன்பை நிறைவேற்றிய பின்பு கொண்டாடப்படுகிறது. இது
    ஏழைகளின் பசியை உணர்தலை வெளிப்படுத்துகிறது.
  • ஹஜ் – இஸ்லாமிய
    ஹிஜ்ரி ஆண்டுக் கணக்கின்படி பன்னிரண்டாவது மாதமான துல் ஹஜ் மாதத்தில் இஸ்லாத்தின்
    ஐம்பெரும் கடமைகளுள் இறுதிக் கடமையாகிய புனித ஹஜ்ஜினை மையமாக வைத்து கொண்டாடப்
    படுகிறது. இது தியாகத்தை உணர்தலை வெளிப்படுத்துகிறது.
  • மஹ்ரம் – திருமணம்
    செய்ய முடியாதவர்கள்
  • இத்தா இருத்தல் – கணவன் இறந்தமைக்காக, கணவரிடம் இருந்து விவாரத்து பெற்றமைக்காக மனைவி 4
    மாதம் 10 நாட்கள் கொண்ட காலப் பகுதிக்கு மறைந்திருத்தல்.
கிறிஸ்தவர்கள்
  • பெரிய வெள்ளி – இயேசு இறந்த நாளை நினைவு கூரல். இதுவே தவக் காலத்தின் இறுதி
    வாரமான புனித வாரத்தின் வெள்ளிக் கிழமையில் கொண்டாடப்படுகின்றது.
  • இயேசு உயிர்ப்பு விழா (ஈஸ்டர் ) – சிலுவையில் அறையப்பட்டு அடக்கம் செய்யப்பட்ட இயேசு கிறிஸ்து
    மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்ததை நினைவு கூர்ந்து கொண்டாடப்படுகின்றது.
  • கிறிஸ்மஸ் – இயேசு
    பிறப்பு விழாவை நினைவு கூர்ந்து கொண்டாடப்படுகிறது
  • யேசு பிறந்த இடம் – ஜெருசலேம்
    (பெத்லகேம்)
  • தவக்காலம் – கிறிஸ்தவ
    மக்களால் ஒவ்வோர் ஆண்டும் பெப்ருவரி மாதம் இடம் பெறும் விபூதிப் புதனோடு
    ஆரம்பமாகும் 40 நாட்கள் வழிபாடாகும்.
 நிகழ்ச்சி நாட்காட்டி நிகழ்ச்சி
  • ஜனவரி – தைப்பொங்கள்
  • ஏப்ரல் – சிங்கள தமிழ் புதுவருட
    கொண்டாட்டம்
  • மே/ ஜுன் – வெசாக் / பொசன் கொண்டாட்டம்
  • ஜுலை – கதிர்காமக் கொண்டாட்டம்
  • ஆகஸ்ட் – கண்டி பெரகரா
  • ஆகஸ்ட்  -நல்லூர் கொண்டாட்டம்
  • டிசம்பர் – ஏப்ரல் – மலைக்காலம்
  • ஆகஸ்ட் – மடு கொண்டாட்டம்
  • ஆகஸ்ட் – வேல் கொண்டாட்டம்
  • செப்டம்பர் – இலக்கிய விழா
  • ஒக்டோபர் – தேசிய வாசிப்பு மாதம்

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

வணக்கம்! Ad Blocker யூஸ் பண்றீங்களா?

தொடர்ந்து கல்வி உலகு இணையத்தளத்தை படிக்க Ad Blocker-ல் Kalviulagu வலைதளத்தை exclude செய்யுங்கள்.