இலங்கைபொது அறிவு
இலங்கையில் பிரபலம் பெற்றவர்கள்!
ஆதர் C கிளார்க்
- இலங்கையில் வாழ்ந்து 2008 ல் காலமான புகழ் பெற்ற விஞ்ஞான புனை கதை எழுத்தாளரும், உலக தொடர்பாடலில் புரட்சியொன்று ஏற்பட இந்நாட்டில் வசித்த எதிர்வு கூறலியலாளர் ஆவார்.
றிஸானா நபீக்
- 2007ம் ஆண்டு தனது பராமரிப்பில் இருந்த பச்சிளம் குழந்தையை கொலை செய்தார் என்று குற்றம் சுமத்தப்பட்டு சவூதி அரேபியா நீதி மன்றத்தின் கீழ் ஷரீஆ சட்டத்தின் கீழ் மரண தண்டனை தீர்ப்பு இவருக்கு வழங்கப்பட்டுள்ளது.
எஸ்.பி.சாள்ஸ்
- ஓவியத்துறையில் ஈடுபாடுடைய இவர் பாராளுமன்றத்திலுள்ள செங்கோலை நிர்மாணித்ததுடன் 2006 இல் காலமானார்.
கலாநிதி சரத்.டி. குணபால
- அமெரிக்காவின் நாஸா விண்வெளி நிலையத்தில் கடமையாற்றும் இலங்கை விஞ்ஞானி ஆவார்.
டைட்டஸ் தொட்டவத்த
- 2011 ஒக்ரோபரில் காலமான இலங்கையின் சிறந்த திரைப்பட இயக்குனரும் திரைக்கதை ஆசிரியரும் ஆவார். இவரது சிறந்த படைப்புக்கள் மால்குடி தபஸ, அதுருமிதுரு.
மஹிபால ஹேரத்
- மகாத்மா காந்தி சமாதான விருதினை 2011 டிசம்பரில் பெற்ற முதலாவது இலங்கையர்.
வேவல்தெனிய மேதா லங்கா தேரர்
- 1998ம் ஆண்டு ராமன்ய மகாபீடத்தின் 12வது மகாநாயக்க தேரராக நியமிக்கப்பட்ட பின்னர் பௌத்தத்திற்காக 90 வருடங்கள் தனது வாழ்க்கையை அர்ப்பணித்து 2012 செப்ரம்பரில் காலமானார்.
C.R.D. சில்வா
- கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லினக்க ஆணைக்குழுத்தலைவர் சித்ரா ரஞ்சன் டி சில்வா 2013 நவம்பரில் காலமனார்.
- இவர் முன்னாள் சட்டமா அதிபராகவும் சொலிசிஸ்டர் ஜெனரலாகவும் பதவி வகித்தார்.
ஸ்ரீமத் அநாகரிக தர்மபால
- இந்திய அரசினால் தபால் முத்திரை ஒன்று வெளியிடப்பட்டு நினைவு கூறப்பட்ட தலைவர்.
சேர்பொன் இராமநாதன்
- இலங்கையின் சுதந்திரத்தை பெறுவதற்கு உன்னத சேவையாற்றிய இலங்கை தமிழ் தலைவர்.
மெக்ஸ்வல் பரணகம
- ஜனாதிபதி ஆணைக்குழுவின் தலைவர் ஆவார்.
கலாநிதி R.S. ஸ்பிட்டல்
- எமது நாட்டு ஆதிவாசிகளாகிய வேடர்கள் பற்றிய ஆய்வினை மேற்கொண்டு வெளியிடப்பட்ட முதலாவது தொகுதி நூலை வெளியட்டவர்.
V.K சமரநாயக்க
- இலங்கையின் தகவல் தொழிநுட்ப துறையின் தந்தையென சிறப்பிக்கப்படுவர்.
லெஸ்டர் ஜேம்ஸ் பீரிஸ்
- இலங்கை திரைப்படத்துறையின் முன்னோடியாவார்.
பேராசிரியர்எதிரிவீரசரத்சந்திர
2014 ஜுன் மாதம் இடம்பெற்ற இவரது 100 ஆவது ஜனன தின விழாவில் யுனெஸ்கோ நிறுவனத்தின் விஸ்வ கௌரவ விருது வழங்கி கௌரவிக்கப் பட்டதுடன், இதனைப் பெற்ற ஒரேயொரு இலங்கையர் ஆவார்.
இவரால் உருவாக்கப்பட்ட அதிசிறந்த நூல்களான மனமே சிங்கபாகு கலாச்சார மேடைநாடக பாரம்பரியத்தின் வருகையை உரித்துரைக்கப்பட்ட யாதார்த்தமான முதலாவது சிங்கள நாடகமாகும்.
இவர் ஆசியாவின் நூதன சேக்ஸ்பியர் எனும் புகற் பெயரால் அழைக்கப்படுகின்றார்.
பேராசிரியர் ஏ.ஜெ.வில்சன்
- இலங்கையின் 1978 ம் ஆண்டின் அரசின் 1978 ம் ஆண்டின் அரசியலமைப்பின் குறிப்பிடப்படும் ஜனாதிபதி முறை டிகோல் மயமான ஏதேச்சகாரமானதென்று விவரித்த அரசியல் விஞ்ஞானியாவார்.
திரு. எமர்சன் ரெனென்ற்
- பண்டைய இலங்கையின் தொழில்நுட்பவியல் திறன்களை எடுதுரைக்கும் வரலாற்று நூலை 1959 ம் ஆண்டில் வெளியிட்ட பிரித்தானிய சிவில் அலுவலர்.
பாலா தம்பு
- தொழில் உலகத்தின் கைத்தொழில் சமாதானம் மற்றும் இணக்கத்தினை பலப்படுத்துவதற்கு பெருந் தொலைநோக்குடன் பங்களிப்பு செய்தவரும் மற்றும் வேலையாளர் வர்க்கத்தின் உரிமைகளை மேம்படுத்தவும் பாதுகாப்பதற்கும் தனது வாழ்நாள் முழுவதையும் தியாகம் செய்த தலைவர்.
சேர்லி அமரசிங்க
- ஐக்கிய நாடுகள் அமைப்பின் சமுத்திர சட்டம் தொடர்பான நியதிச்சட்டம் தயாரிப்பதற்கு முன்னோடியாயிருந்த இலங்கையர்.
பேராசிரியர் சேனக்க பிபிலே
- பேராசிரியர் சேனக்க பிபிலேயின் 36 வது நினைவு தினம் 2014 ஒக்ரோபரில் அனுஷ்டிக்கப்பட்டது.
- இவர் இலங்கைக்கு தேசிய மருந்து கொள்கையை அறிமுகம் செய்ததுடன் குறைந்த வருமானம் பெறும் நோயாளர்களுக்கு நிவாரண விலையில் மருந்துகளை வழங்குதல், வைத்தியர்களால் ஆகக் குறைந்தளவு மருந்துகளை சிபாரிசு செய்யும் வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்தல் ஆகியவை இவரின் நோக்கமாக அமைந்திருந்தது.
சாம் விஜேஸிங்க
- மாத்தளை மாவட்டத்தை சேர்ந்த சாம் விஜேசிங்க 2014 செப்டம்பரில் காலமானார்.
- இவர் முன்னாள் பாராளுமன்ற செயலாளர் நாயகமும் குறைகேள் அதிகாரியும் (ஒம்புட்ஸ்மன்) பத்திரிகை முறைப்பாட்டு ஆணைக்குழுவின் முரண்பாட்டு தீர்வுக்குழு தலைவராகவும் கடமையாற்றியவராவார்.
அநாகரிக தர்மபாலா
- இலங்கையில் காலனித்துவ ஆட்சிக்கு எதிராக சிங்கள பௌத்த தேசியவாதத்தை நிறுவிய முன்னோடிகளில் ஒருவராக வர்ணிக்கப்படும் அநாகரிக தர்மபாலாவின் நினைவாக தபால் முத்திரையை வெளியிட்ட இந்திய ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி தெரிவித்தார். இதன் பெறுமதி இந்திய ரூபாய் 500 ஆகும்.
ஜே. சுகத் சில்வா
- கடந்த 30 வருடங்களுக்கு மேலாக நிறைவேற்று அதிகாரம் கொண்ட மூன்று ஜனாதிபதிகளின் உத்தியோகபூர்வ புகைப்பட கலைஞராக சேவையாற்றி வருபவர் ஜனாதிபதி புகைப்பட பணிப்பாளர். ஜே.சுகத் சில்வா ஆவார்.
- இவரது புகைப்பட கண்காட்சி 2014 நவம்பரில் கொமம் சதுக்கத்தில் இடம்பெற்றது.
பேராசிரியர் மொஹான் முனசிங்ஹ
- நாடுகள் சபையின் காலநிலை அமைப்பில் கடமையாற்றுகின்றார்.
- 2007ம் ஆண்டில் இவ் அமைப்பிற்கு சமாதான நோபல் பரிசு வழங்கப்பட்டதுடன் ஒரு பகுதி இவருக்கும் வழங்கப்பட்டது.
- மேலும் உலகில் 20% மான செல்வந்த மக்கள் தொகை உலக வளங்களில் 80% ஐ நுகர்கின்றமையால் அவர்களும் நிலைத்து நிற்கும் அபிவிருத்தி பரடைம்‘ ற்கு வழிப்படுத்தப் படுவதற்கான புத்தாயிரமாம் ஆண்டு நுகர்ச்சி இலக்குகள் எனும் ஓர் புதிய எண்ணக்கருவையும் முன் வைத்தார்.
கமலினி செல்வராஜா
- இவர் இலங்கையின் நாடகத்துறை, வானொலித்துறை, திரைப்படத்துறை என்று சகலவித்தகராக திகழ்ந்தவராவார்.
தீமதி பெரியப்பெரும்
- சர்வதேச பெண் பொலிஸ் அமைப்பினால் வழங்கப்படும் தலைசிறந்த பெண் பொலிஸ் உத்தியோகத்தருக்கான அங்கீகாரம் மற்றும் புலமைப் பரிசுக்கான விருது (Intronatinal recognitium & amp scholorship) இல் முறை இலங்கைக்கு கிடைத்துள்ளது.
- சர்வதேச நாடுகளில் அனைத்தையும் தோற்கடித்து இம்முறை குறித்த விருதினை இலங்கை பொலிஸ் தலைமையத்தின் பெண் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் தீமதி பெரியப் பெரும் பெற்றுள்ளார்.
- முதன் முதலாக உதவிப் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் இவ் விருதைப்
பெற்றுள்ளமை விசேட அம்சமாகும்.
வண மாதுலுவாவே சோபித தேரர்
- 1942.05.29 இல் ஹோமாகம பாதுகாக்க மாதுலுவாயே பிரதேசத்தில் ரத்னசேகர எனும் இயற்பெயருடன் பிறந்தார்.
- நீரிழிவு மற்றும் இரத்த அழுத்த நோய்களினால் நீண்டகாலம் அவஸ்தைப்பட்டு 2015 நவம்பரில் தனது 73வது வயதில் காலமானார்.
- இவர் சமூக நீதிக்கான தேசிய இயக்கத்தின் தலைவராவார்.
- இவரால் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் 1964 இல் ஸ்ரீ ஜெயவாத்தனபுர பல்கலைக்கழக பட்டதாரியானார்.
- 1965 இல் அன்றைய கல்வி அமைச்சர் ஈரிய கொல்ல கட்சி சார்ந்த சார்ந்து ஆசிரியர் நியமனம் வழங்கியதை எதிர்த்து சத்தியக்கிரக போராட்டம் நடாத்தினர்.
- 1967 இல் கோட்டே நாக விகாரையின் விஹாராதிபதியானார்.
- 1978 இல் நிறைவேற்று ஜனாதிபதி முறையை எதிர்த்தார். 1980 இல் வேலை நிறுத்த போராட்டத்தில் தாதிமார் கோரிக்கைக்கு ஆதரவு வழங்கினார்.
- 1987 இல் இந்தியா – இலங்கை ஒப்பந்தத்தை எதிர்த்தார்.
- 1990 இல் நில விவசாய சீர்திருத்த இயக்கங்களுடன் இணைந்து விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவு அளித்தார்.
- 1994 இல் 17 வருட ஐக்கிய தேசிய கட்சியின் ஆட்சியை முடிவுக்கு கொண்டு வர
செயற்பட்டார்.
- இவர் ஒரு சிறந்த சிவில் சமூக செயற்பாட்டாளர், விவசாய பிரச்சினைகள், அரசியலமைப்பு, மது ஒழிப்பு, சமூகநிதி, ஊழல் மோசடி சர்வதாதிகார எதிர்ப்பு,
நல்லாட்சி போன்றவற்றுக்காக செயற்பட்டவராவார்.
உடுகம ஸ்ரீதம்மதஸ்ஸி ரத்னபால புத்தரக்கித்த தேரர்
- 1930.03.17இல் குருணாகல் மாவட்டத்தின் உடுகம பிரதேசத்தில் பிறந்த அஸ்கிரிய பௌத்த பீடத்தின் மகாநாயக்கர் 2015 ஏப்ரலில் காலமானார்.
- 1998ம் ஆண்டு ஒக்டோபரில் அஸ்கிரிய பௌத்த பீடத்தின் சங்க செயற்குழுவினால் பீடத்தின் அனுநாயக்க தேரராக நியமிக்கப்பட்டார்.
- 1999ம் ஆண்டு டிசம்பரில் அஸ்கிரிய பௌத்த பீடத்தின் மகாநாயக்கரானார்.
- இவர் பௌத்த தர்மத்தின் வளர்ச்சிக்காக அளப்பரிய சேவைகளை ஆற்றியுள்ளதுடன், பல்வேறு சந்தர்ப்பங்களிலும், ஸ்ரீதலதா மாளிகையின் தலைமை தேரராகவும், மகாநாயக்கராகவும் மிகுந்த பக்தியுடன் தலதா மாளிகையை வழிபட வருகின்ற பக்தர்களை பௌத்த தர்மத்தின் பால் அதிக ஈர்ப்பு கொள்வதற்கு
சந்தர்ப்பத்தை ஏற்படுத்தி கொடுத்து அனைவரது கௌரவத்திற்கும், பாராட்டுக்கும் பாத்திரமான ஒருவராக திகழ்ந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
டபிள்யூ. அமரதேவ
- இலங்கையின் சிறந்த இசையமைப்பாளரும், சாஸ்திர சங்கீதத் துறையில் புகழ்பெற்ற இவர் மாலைத்தீவு தேசிய கீதத்திற்கு இசையமைத்ததுடன் “ரமன் மக்சேச” உட்பட பல விருதுகளைப் பெற்றவ ராவார்.
வைத்தியர் மேரி இரத்தினம்
- இலங்கையிலே பெண்களின் மேம்பாட்டிற்காக செயற்பட்ட முதல் பெண்மணி.