இலங்கைபொது அறிவு
இலங்கை நோய்தடுப்பு அறிமுகம்!
இலங்கையில் பரவிய நோய்களை தடுக்கும் முகமாக இலங்க அரசினால் செயற்படுத்தப்பட்ட திட்டங்கள் குறித்த பொது அறிவு தொகுப்பு!
- 1966 பெரியம்மை நோய் தடுப்பு மருந்தின் அறிமுகம்.
- 1945 காசநோய் எதிர்ப்பு இயக்கம் நிறுவப்பட்டமை.
- 1946 மலேரியாவுக்கெதிராக டி.டி.ரி மருந்து தெளித்தல் அறிமுகம்.
- 1947 ஆனைக்கால் நோய், நோய் எதிர்ப்பு இயக்கம் நிறுவப்பட்டமை.
- 1949 மலேரியா எதிர்ப்பியக்கம் நிறுவப்பட்டமை.
- 1949 காசநோய் தடுப்பு மருந்தான பி.சி.ஜி அறிமுகம்.
- 1954 தொழுநோய் எதிர்ப்பியக்கம் அறிமுகப்படுத்தப்பட்டது.
- 1961 தொண்டை அழற்ச்சிநோய், கக்குவான் இருமல், ஏற்பு நோய் என்பவற்றுக்கான தடுப்பு மருந்தின் அறிமுகம்.
- 1962 வாய் மூலமான இளம்பிள்ளைவாத நோய் தடுப்பு மருந்தின் அறிமுகம்.
- 1965 பெரியம்மை ஒழிப்பு.
- 1966 முதல் முறையாக டெங்குக் காய்ச்சல் ஏற்பட்டமை.
- 1969 கற்பிணித் தாய்மாருக்கான ஏற்புத்தடை மருந்து அறிமுகம் செய்யப்பட்டமை.
- 1977 மலேரியாவுக்கெதிரான இயக்கத்தில் மலத்தியோன் பாவனை ஆரம்பிக்கப்பட்டமை.
- 1978 தொற்று நோய்த்தடை நிகழ்ச்சித் திட்டம் ஆரம்பிக்கப்பட்டமை.
- 1979 குடும்பத் திட்டமிடலுக்கான பண ஊக்கு விப்புகள் வழங்கப்பட்டமை.
- 1983 சின்னமுத்து நோய் நோய்தடுப்பு மருந்து அறிமுகப்படுத்தப்பட்டமை.
- 1985 தொற்று நோய்த்தடை நிகழ்ச்சித் திட்டம் விரைவு படுத்தப்பட்டமை.
- 1987 இலங்கையின் முதன் முதலாக எயிட்ஸ் நோய் ஏற்பட்டமை.
- 1989 சின்னமுத்துத் தடை மருந்தேற்றல் நிகழ்ச்சித் திட்டத்தினை தொர்புசாதனங்களின் உதவியுடன் விரைவு படுத்தப்பட்டமை.
- 1989 உலகளாவிய குழந்தை தொற்று நோய்த்தடை நிகழ்ச்சித் திட்ட நோக்கினை அடைதல்.
- 1990 தொழு நோய் ஒழிப்பு இயக்கத்தில் சமூக நடமாடல் அணுகு முறையினை அறிமுகப் படுத்தியமை.
- 1994 எச்.ஐ.வி/எயிட்ஸ் கட்டுப்பாடு நிகழ்ச்சித் திட்டங்களை நடைமுறைப்படுத்தல்,
- 1995 இளம்பிள்ளைவாத நோய்க்கான தேசிய தடுப்பு தின நிகழ்ச்சித் திட்டத்திற்கான நிறுவனம் அமைக்கப்பட்டது.
/* இலங்கை அரசினால் நடாத்தப்படும் அனைத்து போட்டி பரீட்சைகளுக்குமான பொது அறிவு தொகுப்பு */