இலங்கை பற்றிய அடிப்படை பொது அறிவு தொகுப்பு!
-
- இந்து சமுத்திரத்தின் முத்து
- இந்து சமுத்திரத்தின் நித்திலம்
- இந்து சமுத்திரத்தின் ரிவெய்ரா
- தர்மவீபம்
- இரத்தின துவீபம்
- சீஹல துவீபம்
- மிகவும் பழைய காலத்தில் அழைக்கப்பட்ட பெயர்: தம்பபன்னி, தப்ரபேன்
- தற்போதைய உத்தியோகபூர்வ பெயர்: இலங்கை சனநாயக சோசலிச குடியரசு
- தற்போதைய தலைநகரம்: ஶ்ரீ ஜெயவர்த்தனபுர கோட்டை
- வரலாற்றில் முக்கியத்துவம்பெறும் வருடங்கள்: 1505, 1796, 1815, 1848, 1931,1948, 1956, 1972
- மிகப் புராதன வரலாற்று நூல்: தீபவம்சம்
இலங்கைவரலாற்றை கற்பதற்கு உதவும் சில மூலாதாரங்கள்
- இலக்கிய மூலாதாரமாகிய தீபவம்சம் கி.பி 4ம் நூற்றாண்டில் எழுதப்பட்டது.எனினும் இதனை ஆக்கியோர் தொடர்பில் கண்டறியப்படவில்லை.
- இலக்கிய மூலாதாரமாகிய மகாவம்சம் கி.பி 5ம் நூற்றாண்டில் மகாவிகாரையை சேர்ந்த மகாநாமதேரர் என்பவரினால்எழுதப்பட்டது.
- தொல்பொருள் மூலாதாரமாகிய பொலன்னறுவை கல்விகாரை கி.பி12ம்நூற்றாண்டில் 1ம் பராக்கிரமபாகு மன்னனால் கட்டப்பட்டது.
இலங்கையின் அமைவிடம்
ஆசியா கண்டத்திற்கு தெற்காகவும், இந்து சமுத்திரத்திற்கு வடக்கிலும், தென்கிழக்கு ஆசியாவின் மேற்கிலும், ஆபிரிக்க கண்டத்தின் கிழக்கிலும் உள்ளது.
பூகோள ரீதியாக இலங்கை முக்கியத்துவம் பெறுவதற்கான காரணங்கள்
- இந்து சமுத்திரத்திற்கு நடுவில் இருத்தல்
- இந்தியாவிற்கு அருகாக இருத்தல்
- கடல் பட்டுப்பாதையில் இருத்தல்
இலங்கையின் முதலாவது வரைபடத்தை வரைந்தவர்
- கிரேக்க நாட்டை சேர்ந்த தொலமி
இலங்கையின் ஆதிக்குடிகள்
- இயக்கர்
- நாகர் எனும் திராவிட பரம்பரையினர்
- ராஜரட்ட
- மாயரட்ட
- றுகுணுரட்ட
இலங்கைக்கு பிற இனத்தவர்கள் வழங்கிய பெயர்கள்
- ஆரியர் – தம்பபன்னி
- கிரேக்கர் – தப்பிரோபேன்
- இந்தியர் – சீலயி
- அராபியர் – செரண்டிப்
- சீனர் – சீலன்
- போர்த்துக்கீசர் – செயிலான். செயிலாவோ
- ஒல்லாந்தர் – சிலான்
- ஆங்கிலேயர் – சிலோன்
ஒருநாட்டின் பெருமையினையும் கௌரவத்தினையும் பிரதிபலிப்பவையாக தேசிய கொடி தேசிய சின்னம், தேசிய கீதம்
தேசிய கொடி – வாளேந்திய சிங்கம்
இலங்கையின் முதலாவது பிரதமர் டி. எஸ். சேனாநாயக்காவினால் உருவாக்கப்பட்ட குழுவின் ஆலோசனைகளுக்கு அமைய உருவாக்கப்பட்ட இலங்கையின் தேசிய கொடி 1948-02-04 இல் முதன் முதலாக தடவையாக வடிவமைக்கப்பட்ட தேசிய கொடி ஏற்றப்பட்டது.
இதன் பின்னர் 1972 இல் தேசிய குடியரசு அரசியலமைப்பு சட்டத்தின்படி கொடியின் நான்கு மூலைகளிலும் நான்கு வெள்ளரசு இலைகள் இடப்பட்டு 1972.05.22 இல் தற்போதைய தேசிய கொடி ஏற்றப்பட்டது.
உருவாக்கியவர் – கேர்ணல் ஹென்றி ஸ்ரீல் ஒல்கொட்
இனங்களும் நிறங்களும்
- தமிழர் செம்மஞ்சள் அல்லது இளஞ்சிவப்பு
- முஸ்லீம்கள் பச்சை
- சிங்களவர் காவி நிறம் அல்லது சிவப்பு நிற பின்னணியில் மஞ்சள் நிறத்தில்
- வாளேந்திய சிங்கம்
- ஏனைய சமயங்கள் கடுஞ்சிவப்பு
- ஏனைய சிறுபான்மை இனங்கள் மஞ்சள் கரை
- அறிவாற்றல் அல்லது கொடியைச் சுற்றியுள்ள தேசிய ஒற்றுமை மஞ்சள் நிறம்
உருவங்களும் விளக்கங்களும்
- சிங்கத்தின் தலை நாட்டின் தலைவர்
- சிங்கத்தின் தலையில் காணப்படும் சுருள் முடி சமயம். தியானம். அறிவு
- சிங்கத்தின் தாடி தூய்மையான வார்த்தை
- சிங்கத்தின் மூக்கு புத்திக்காரன்
- சிங்கத்தின் முன் இரண்டு கால்கள் தூய்மையான முறையில் செல்வத்தை கையாளல்
- சிங்கத்தின் உடல் வீரம்
- சிங்கத்தின் வால் நீதி, நேர்மையான ஆட்சி
- சிங்கத்தின் வாள் வீரம் அறநெறிக்கெதிரான போரட்டம், பௌத்த மதம் வாழ்க்கைக்கு கூறும் எட்டு வழிகள்
- சிங்கத்தின் வாளின் பிடி நீர், செருப்பு, ஆகாயம், பூமி ஆகிய மூலக் கூறுகள்
வெள்ளரசு இலைகளும் தர்ம உபதேசமும்
நான்கு அரச இலைகள் – பௌத்த மதமும் நாட்டில் அதன் செல்வாக்கும்.
- மெத்தா அன்பு
- கருணா காருண்யம்
- முதித்தா மற்றவர் மகிழ்ச்சியில் தானும் மகிழல்
- உபேக்ஷா நன்மை தீமை இரண்டினையும் சமமாக கருதுதல்
- தேசியக் கொடி ஏற்றப்படுவது – சுதந்திர தினம் போன்ற தேசிய நிகழ்வுகளின் போது.
- அரைக்கம்பத்தில் பறக்க விடப்படுவது – தேசிய துக்க தினத்தில்
தேசிய சின்னம் பயன்படுத்தப்படுவது – 1972 இல் குடியரசான பின்னர். - உருவாக்கியவர் – தொல்பொருள் ஆய்வு சக்கரவர்த்தி எஸ்.எம்.செனவிரத்ன
அடையாளங்களும் வெளிப்படுத்தும் விடயங்களும் அடையாளம்
- சிங்கம் வீரம்
- கலசம் பூரண கும்பம் சௌபாக்கியம்
- சூரியன், சந்திரன் உலக நிலைப்பாடு அல்லது நிலைத்திருப்பது
- நெற்கதிர் தன்னிறைவு
- தர்ம சக்கரம் தர்மமும் நீதியும், சமத்துவம்
- தாமரை மலர் தூய்மை
தேசிய கீதம்
- ஸ்ரீலங்கா தாயே நம் ஸ்ரீலங்கா நமோ நமோ நமோ தாயே
- இயற்றியவர் – கலாசூரி ஆனந்த சமரகோன் 1940
- ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தவர் – C.W.W. கன்னங்கரா
- தமிழில் மொழிபெயர்த்தவர் – புலவர்மணி நல்ல தம்பிப்பிள்ளை
- எழுதப்பட்டது. – 1940ம் ஆண்டு
- முதன் முதலில் பாடப்பட்டது – 1948-02-04
- அங்கிகரிக்கப்பட்டது – 1951-11-22
தேசிய மரம் - சிங்களத்தில் வழங்கும் பெயர் – நா
- தமிழில் வழங்கும் பெயர் – நாகமரம்
- ஆங்கிலத்தில் வழங்கும் பெயர் – Tror Wood Tree
- தாவரவியற் பெயர் – மொசு ஆர்பொரெயா
- முன்னாள் ஜனாதிபதி ஆர். பிரேமதாசா அவர்களினால் நியமிக்கப்பட்ட ஆறு பேர் கொண்ட குழுவின் தீர்வின் பிரகாரம் 1985-02-26 இல் தேசிய மரமாகத் பிரகடனம் செய்யப்பட்டது.
தேசிய விளையாட்டு – கரப்பந்தாட்டம் – இது 1991ம் ஆண்டு முதல் தெரிவு செய்யப்பட்டது.
- 1895 இல் வில்லியம் ஜி. மோகன் என்பவரால் உலகத்திற்கு அறிமுகம் செய்யப்பட்ட இவ் விளையாட்டு 1916 இல் றொபேர்ட் வோல்டர் கொமெக் என்பவரால் இலங்கைக்கு அறிமுகம் செய்யப்பட்டது.
தேசிய மலர்
- சிங்களத்தில் வழங்கும் பெயர் – மானெல் நிலு புல்
- தமிழில் வழங்கும் பெயர் – நீல அல்லி அல்லது நீலோற்பவம்
- ஆங்கிலத்தில் வழங்கும் பெயர் – Watter Lilly
- தாவரவியற் பெயர் – Nymphae stellata
- மலரின் குறியீடு – தூய்மை , உண்மை , ஒழுக்கம்
- முன்னாள் ஜனாதிபதி ஆர். பிரேமதாசா அவர்களினால் நியமிக்கப் பட்ட ஆறு பேர் கொண்ட குழுவின் தீர்வின் பிரகாரம் 1986-02-25 இல் தேசிய மலராக பிரகடனம் செய்யப்பட்டது.
- பல ஆண்டு கால ஆராய்ச்சிகளின் பின்பு 1986ம் ஆண்டு பெப்ருவரி மாதம் இலங்கையின் தேசிய மலராக இது தெரிவு செய்யப்பட்டது.
- இவை நீல நிறமும், ஊதா நிறமும் கலந்து உருவாகும் இதழ்களும் பொன் நிறத்திற்கு சமமான மஞ்சள் நிற நடுப் பகுதியும் கொண்ட மலர்களாகும்.
- நீலத் தாமரை மலர்கள் பரிசுத்தத்திற்கும். சத்தியத்திற்குமான கௌரவத்தின் உதாரணமாக விளங்குகின்றன.
- தேசிய மிருகம் அல்லது விலங்கு – மர அணில்
- தேசிய பறவை – காட்டுக் கோழி
- தேசிய இரத்தினக்கல் நீல மாணிக்கம்
- தேசிய நினைவுச்சின்னம் – சுதந்திர சதுக்கம்
- தேசிய உடை 1939 ம் ஆண்டளவில் அங்கீகரிக்கப்பட்டது.
- சிங்கள மக்களின் தேசிய உடையாக ஆண்கள் – நீளக்கை சட்டையும், வேட்டி அல்லது சாரமும்
- பெண்கள் – ஒசரி(சாரி) சேலையும், ரவுக்கையும்.
- சிறுமிகள் ‘லமாசாரி’ எனும் சேலையும் மடிப்புடைய ரவுக்கையும்.
பௌத்த கொடி
- பௌத்த தர்மத்தின் முன்னேற்றத்தையும், பாதுகாப்பையும் முன்னிட்டு பௌத்த பாதுகாப்பு இயக்கம் உருவாக்கப்பட்டு அக்குழுவின் கருத்துரைப்படி பௌத்தகொடி நிர்மாணிக்கப்பட்டது.
- இக்கொடியின் முதல் பாதி உருவமைப்பு கரோலில் பூஜித குணவர்த்தன அவர்களால் உருவாக்கப்பட்டது.
- கொடியில் புத்தரைச் சுற்றி பிரகாசித்த ஒளிக்கதிர்களின் வர்ணங்களான நீலம், மஞ்சள், சிவப்பு, வெள்ளை, செம்மஞ்சள் என்பவற்றுடன் இவ்வர்ணங்களின் கலவையும் கொண்டு விளங்குகின்றது.
- இக் கொடி 1885-04-17 இல் முதல் பாவனைக்கு வந்ததுடன் 1885 05-28 வெசாக் பௌர்ணமி தினமன்று ‘மிகெட்டுவத்தே குணானந்த பிக்கு அவர்களால் கொட்டாஞ்சேனை ‘தீபதுத் தாராம’ விகாரையில் வைத்து முதன்முதலாக ஏற்றிவைக்கப்பட்டது.
இது 2010-11-17 இல் பிரகடனம் செய்யப்பட்டது.
- இலங்கையின் அரச கரும மொழிகள் அல்லது தேசிய மொழிகள் – தமிழ், சிங்களம்
- குடியரசாக்கப்பட்டது – 1972.05.22
- தேச பிதா – D.S. சேனாநாயக்கா
தங்குபவர்களின் உத்தியோக பூர்வ வதிவிடங்களின் விசேட பெயர்கள்
- ஜனாதிபதி – ஜனாதிபதி மாளிகை
- பிரதமர் – அலரி மாளிகை
- சபாநாயகர் – மும்தாஜ்மகால்
- பாராளுமன்ற உறுப்பினர் – சிராவஸ்தி
சேவை இடங்களின் விசேட பெயர்கள்
- கல்வி அமைச்சு இசுருபாய
- சுகாதார அமைச்சு சௌசிரிபாய
- திட்ட அமுலாக்கல், போக்குவரத்து அமைச்சு செத்சிரிபாய
- காணி அமைச்சு சம்பத் பாய
- மத விவகார அமைச்சு தஹம்பாய