குரங்குகளின் மொழி
“வார்த்தையை அளந்து பேசு” என்று யாராவது நம்மிடம் கூறினால் கோபம் நமக்கு வந்துவிடும். மனிதர்களிடையே புழக்கத்தில் உள்ள பழமொழி தான் அது. ஆனால், நாம் அளந்து பேசுகிறோமா என்பது சந்தேகம்தான்.
நாம் எப்படியோ, ஆனால் குரங்குகள் அளவாகத்தான் ஒலி எழுப்புகின்றன என்கிறார்கள் ஆய்வாளர்கள். அவை ஏன் அளந்து ஒலி எழுப்புகின்றன என்பதிலும் வாழ்க்கைத் தத்துவம் அடங்கி இருக்கிறதாம்.
தைவான் நாட்டில் பர்மோசான் மக்காகு என்ற பகுதியில் உள்ள குரங்குகளை ராம்ப்டன் பல்கலைக்கழக குழுவினர் ஆய்வு செய்தனர்.
இதில் குரங்குகள் 35 விதமான ஒலி சைகைகளை வாழ்க்கையில் அடிக்கடி பயன்படுத்துகின்றன என்று தெரியவந்துள்ளது.
மேலும், ஒரு விசித்திரமான உண்மை என்னவென்றால், குரங்குகளின் ஒலியும் பரிணாம வளர்ச்சி அடைந்துள்ளதாம்.
இதற்கு முன்பாக செய்யப்பட்ட ஆய்வுகளின்படி வரையறை செய்யப்பட்ட வழக்கத்தில் இருந்து அவற்றின் ‘பாஷை’ மிகவும் மாறிவிட்டது என்கிறார்கள் ஆய்வாளர்கள்.