Uncategorized
சந்திரனில் காந்தசக்தி!

இந்த புதிய கண்டுபிடிப்பு மூலம், நிலவில் காந்தசக்தி இருக்கிறதா? என்ற நீண்ட நாள் ஊகம் உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனை அடுத்து, சூரியனில் இருந்து வெளிவரும் புறஊதாக் கதிர்கள் பூமியை நேரடியாகத் தாக்காத வண்ணம் ‘ஓசோன் படலம்’ காப்பது போன்று, இந்தக் காந்தப்புலம் நிலவை காக்கின்றதா? என்பது குறித்து ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டன.
ஆனால், காந்தசக்தியின் எல்லை குறைவாக இருப்பதால் அது முழு அளவில் சாத்தியம் இல்லை என்று விஞ்ஞானிகள் கருதுகின்றார்கள்.
மாறாக, சூரியனின் கதிர்வீச்சுத் தாக்கத்தை ஓரளவு தடுக்கும் அல்லது திசைதிருப்பும் வகையிலேயே இந்தக் காந்தப்புலம் உள்ளது என்றும் விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
அத்துடன், நிலவில் காந்தசக்தி இருக்கும் பகுதியை பூமியில் இருந்து பார்க்க முடியாது என்பதும் குறிப்பிடத்தக்கது.