சிலப்பதிகாரம் – ஊர்காண் காதை

சிலப்பதிகாரம் – ஊர்காண் காதை
க.பொ.த உயர்தர மாணவர்களுக்கான, சிலப்பதிகாரம் – ஊர்காண் காதை (15 – 61)
சங்கமருவிய காலத்தில் எழுந்ததாகக் கருதப்படும் சிலப்பதிகாரம் இளங்கோவடிகளால் எழுதப்பட்டது. தொடர்நிலைச் செய்யுளாக அமைந்த சிலப்பதிகாரம் ஐம்பெருங்காப்பியங்களுள் ஒன்றாகும். இயல், இசை, நாடகம் என மூன்றும் அமையுமாறு கோவலன், கண்ணகி, மாதவி ஆகியோரைப் பிரதான பாத்திரங்களாகக் கொண்டு எழுதப்பட்டதே சிலப்பதிகாரம் எனும் காப்பியமாகும். இக்காப்பியத்தில் புகார்க் காண்டம், மதுரைக் காண்டம், வஞ்சிக் காண்டம் என்ற பெரும் பிரிவுகளுக்குள் முப்பது காதைகள் உள்ளடக்கப்பட்டுள்ளன. அவ்வகையில் மதுரைக் காண்டத்தில் உள்ள ஒரு பகுதியே ஊர்காண் காதையாகும்.
கதைத்தொடர் கண்ணகியுடன் மதுரை சென்றடைந்த கோவலன், புறஞ்சிறைதூரிலே (மதுரையின் புற நகரில்) கவுந்தியடிகளையும் கண்ணகியையும் இருக்க வைத்துவிட்டு, தனது துன்பத்தையும் மதுரை நகருக்குள் செல்லும் எண்ணத்தையும் கவுந்தியடிகளிடம் வெளிப்படுத்தியபோது, கண்ணகியை அவருடன் விட்டுச் செல்வதில் துன்பமேது முண்டோ? என வினவுகின்றான். கவுந்தியடிகளும் “அனைவரினதும் துன்பத்திற்குக் காரணம் அவரவர் தீவினைப் பயனே” என ஆறுதல் கூறி, மதுரை நகர்ன்றுவருமாறு விடையளிக்கின்றார்.
கோவலன் சென்று, கொள்கையின் இருந்த
15
கவுந்தி ஐயையைக் கைதொழுது ஏத்தி,
„நெறியின் நீங்கியோர் நீர்மையேன் ஆகி,
நறுமலர் மேனி நடுங்குதுயர் எய்த,
அறியாத் தேயத்து ஆரிடை யுழந்து,
சிறுமை யுற்றேன், செய்தவத் தீர்யான்:
20
தொன்னகர் மருங்கின் மன்னர் பின்னோர்க்கு
என்னிலை உணர்த்தி, யான்வருங் காறும்,
பாதக் காப்பினள் பைந்தொடி: ஆகலின்,
ஏதம் உண்டோ, அடிகள்! ஈங்கு?‟ என்றலும்
கவுந்தி கூறும்: “காதலி – தன்னொடு
25
தவந்தீர் மருங்கின் தனித்துயர் உழந்தோய்!
„மறத்துறை நீங்குமின்; வல்வினை ஊட்டும்‟ என்று,
அறத்துறை மாக்கள் திறத்தின் சாற்றி,
நாக்கடிப்பு ஆக வாய்ப்பறை அறையினும்,
யாப்பறை மாக்கள் இயல்பிற் கொள்ளார்;
30
தீதுடை வெவ்வினை யுருத்த காலை,
பேதைமை கந்தாப் பெரும்பேது உறுவர்;
ஒய்யா வினைப்பயன் உண்ணுங் காலை,
கையாறு கொள்ளார் கற்றுஅறி மாக்கள்;
பிரிதல் துன்பமும், புணர்தல் துன்பமும்,
35
உருவி லாளன் ஒறுக்கும் துன்பமும்,
புரிகுழன் மாதர்ப் புணர்ந்தோர்க்கு அல்லது,
ஒருதனி வாழ்க்கை உறவோர்க்கு இல்லை
பெண்டிரும் உண்டியும் இன்பம்என்று உலகில்
கொண்டோர் உறூஉம் கொள்ளாத் துன்பம்
40
கண்டனர் ஆகிக் கடவுளர் வரைந்த
காமஞ் சார்பாக் காதலின் உழந்து, ஆங்கு:
ஏமஞ் சாரா இடும்பை எய்தினர்
இன்றே அல்லால், இறந்தோர்பலரால்:
தொன்றுபட வரூஉம் தொன்மைத்து, ஆதலின்:
45
தாதை ஏவலின் மாதுடன் போகி,
காதலி நீங்கக் கடுந்துயர் உழந்தோன்
வேதமுதல்வற் பயந்தோன் என்பது
நீஅறிந் திலையோ? நெடுமொழி அன்றோ?
வல்லாடு ஆயத்து, மண், அரசு, இழந்து:
50
மெல்லியல் – தன்னுடன் வெங்கான் அடைந்தோன்
காதலிற் பிரிந்தோன் அல்லன்;: காதலி
தீதொடு படூஉம் சிறுமையள் அல்லள்;:
அடவிக் கானகத்து ஆய் இழை – தன்னை
இடை இருள் யாமத்து இட்டு நீங்கியது
55
வல்வினை அன்றோ? மடந்தை – தன் பிழையெனச்
சொல்லலும் உண்டேல், சொல்லா யோ? நீ
அனையையும் அல்லை: ஆய் – இழை – தன்னொடு
பிரியா வாழ்க்கை பெற்றனை அன்றே?
வருந்தாது ஏகி, மன்னவன் கூடல்:
60
பொருந்து உழி அறிந்து போது ஈங்கு” என்றலும்.
பொருள்:
தியானத்திலிருந்த கவுந்தியடிகளிடம் கோவலன் சென்று, கைதொழுது வணங்கி, “வாழ்வுப் பாதையைவிட்டுத் தவறியவர்களின் தன்மையுடையவனாய், மிகுந்த சனை பொருந்திய மலர் போன்ற மேனியை உடையவளான கண்ணகி நடுங்கும் அளவு பெருந்துன்பம் அடைய, முன்னர் ஒருபோதும் அறிந்திராத நாட்டிலே துன்பமான பாதையிலே திரிந்து, யான் சிறுமை அடைந்தேன். தவம் செய்கின்றவரே, பழமை பொருந்திய இம்மதுரை நகரத்திலுள்ள வணிகர்களுக்கு என் நிலையினைக் கூறி, நான் மீண்டும் இங்கு வரும்வரையிலும் மென்மையான வளையல்களை அணிந்தவளான கண்ணகி உங்கள் பாதமாகிய காவலில் இருக்கட்டும். இதனால் தங்களுக்கு ஏதாவது இடைஞ்சல்; உண்டோ?”என்று (கோவலன்) கேட்டதும், (அதனைக்கேட்ட) கவுந்தியடிகள் கூறுகிறார்:
முன்னர் செய்த தவம் நீங்கிய நிலையில் காதலியோடு (கண்ணகி) பெருந்துன்பம் அடைந்தவனே! “அதர்ம வழியிலிருந்து விலகுங்கள்; வலிமையுடையதான ஊழ்வினை அதன் பயனைத் தவறாது நமக்கு வழங்கும்” என்று அறவழியில் வாழும் துறவியர் உறுதியாகச் வொல்லி, நாவையே குறுந்தடியாகக் கொண்டு வாயாகிய பறையை அறைந்தாலும் மன உறுதியற்றோர்
அதனை ஏற்றுக்கொள்ளமாட்டார்கள்.
முழுமையாக PDF வடிவில் பதிவிறக்கம் செய்ய