பொது அறிவு

சூரியக் குடும்பம் பற்றிய பொது அறிவு கேள்வி பதில்கள்

☀️ சூரியன் பற்றிய கேள்விகள்

1. சூரியக் குடும்பம் என்றால் என்ன?

சூரியனும் அதைச் சுற்றி வரும் கோள்கள், துணைக் கோள்கள், சிறுகோள்கள், வால்நட்சத்திரங்கள் ஆகியவை சேர்ந்த அமைப்பே சூரியக் குடும்பம்.

2. சூரியக் குடும்பத்திலுள்ள கோள்களின் இடமும் அதன் விதியும் மாறாததற்கான காரணம்?

சூரியனின் ஈர்ப்புத்தன்மை.

3. சூரியனுடைய விட்டம் என்ன?

13,92,520 கி.மீ.

4. பூமியிலிருந்து சூரியனுக்குள்ள சராசரி தூரம்?

அருகில் 147,097,000 கி.மீ., தொலைவில் 152,099,000 கி.மீ.

5. சூரியனுடைய எடை?

பூமியின் எடையை விட சுமார் 3.3 லட்சம் மடங்கு.

6. சூரியனுடைய ஈர்ப்புத்தன்மை?

பூமியின் ஈர்ப்பை விட சுமார் 28 மடங்கு.

7. மிகப்பெரிய விண்மீன்?

UY Scuti (சூரியனை விட சுமார் 1700 மடங்கு பெரிது).

8. சூரியன் தனது அச்சில் ஒருமுறை சுழல எடுக்கும் நேரம்?

சுமார் 25 நாட்கள் (அட்சரேகை பகுதிகளில் 25, துருவங்களில் 35 நாட்கள்).

9. பால் வழி மண்டலத்தின் விட்டம்?

சுமார் 1,00,000 ஒளியாண்டுகள்.

10. சூரியன் மண்டல மையத்தைச் சுற்றும் காலம்?

சுமார் 22.5 கோடி ஆண்டுகள்.

11. சூரியனின் வெளிப்புற அடுக்கு?

கொரோனா (Corona).

12. காஸ்மிக் வருடம் என்றால் என்ன?

சூரியக் குடும்பம் பால் வழி மண்டல மையத்தைச் சுற்ற எடுக்கும் 22.5 கோடி ஆண்டுகள்.

13. போட்டோஸ்பியர் என்றால் என்ன?

சூரியனின் வெளிப்புற ஒளிமண்டலம்.

14. போட்டோஸ்பியரின் முக்கிய கூறு?

ஹைட்ரஜன் மற்றும் ஹீலியம்.

15. நிறமண்டலம் (Chromosphere) என்றால் என்ன?

ஒளிமண்டலத்தைச் சுற்றியுள்ள வெளிப்புற அடுக்கு.

16. சூரிய புள்ளிகள் என்றால் என்ன?

சூரியனில் தோன்றும் கரும்புள்ளிகள்.

17. சூரிய மைய வெப்பநிலை?

சுமார் 1.5 கோடி °C.

18. சூரிய பிரகாச சக்தி?

3.828 × 10²⁶ வாட்.

19. சூரிய கிரகணம் என்றால் என்ன?

சூரியன்–சந்திரன்–பூமி ஒரே கோட்டில் வரும்போது, சந்திரன் சூரியனை மறைக்கும் நிகழ்வு.

20. சூரிய கிரகணத்தின் அதிகபட்ச காலம்?

7 நிமிடம் 31 விநாடிகள்.

21. மிகப்பெரிய சூரிய புள்ளி கண்டுபிடிக்கப்பட்டது எப்போது?

1947 ஏப்ரல் – பரப்பளவு சுமார் 18,00,000 சதுர கி.மீ.

22. துருவ ஒளி என்றால் என்ன?

துருவப் பகுதிகளில் காணப்படும் அற்புத ஒளிக் காட்சி (Aurora Borealis/Australis).

23. துருவ ஒளி எத்தனை உயரத்தில் தோன்றுகிறது?

சுமார் 90 கி.மீ. முதல் 1000 கி.மீ. உயரத்தில்.

Related Articles

Back to top button

வணக்கம்! Ad Blocker யூஸ் பண்றீங்களா?

தொடர்ந்து கல்வி உலகு இணையத்தளத்தை படிக்க Ad Blocker-ல் Kalviulagu வலைதளத்தை exclude செய்யுங்கள்.