பரிணாம வளர்ச்சியும் சிவப்பு ராட்சதனும்!
மனிதர்களுக்கும் ஏனைய உயிரினங்களுக்கும் எவ்வாறு பிறப்பு, வாழ்க்கை மற்றும் இறப்பு என்று பரிணாமம் உள்ளதோ, அதேபோன்று விண்மீன்களுக் கும்கூட பரிணாம வளர்ச்சி உள்ளது. இதை ‘விண்மீனின் பரிணாம வளர்ச்சி’ (Srellar Evolution) என்கின்றனர்.
இந்த பரிணாம வளர்ச்சியின் இறுதிக் கட்டங்களில்தான் ஒரு விண்மீன் சிவப்பு ராட்சதனாக மாறுகின்றது.
சிவப்பு ராட்சதன்கள் என்பவை உண்மையில் ஒரு விண்மீனின் இறுதிக் கட்ட நிலை ஆகும். இத்தகைய விண்மீன்களின் மேற்பரப்பு வெப்பநிலை 2500C- 3500C கொண்டதாக இருக்கும்.
இதன் விட்டம் சூரியனின் விட்டத்தைப்போல 10-100 மடங்காகும் இதன் திறை சூரிய மனின் நிறையைப் போல 0.5-10 மடங்காக இருக்கும்.
மிகப்பெரிய விண்மீன்களிலிருந்தே, இத்தகைய சிவப்பு ராட்சதன் (சிவப்பு அரக்கன் red gunt star) உருவாகும். அரக்கநிலை விண்மீன்கள் பின்னர் சிவப்புப் பெருமீன் (red supergiant)
என்ற நிலையை அடையும். சிவப்புப் பெருமீன் நிலையில் ஒரு விண்மீனின் உள்ளகத்தில் ஹீலியமும் அதன் வெளி யோட்டில் ஐதரசனும் காணப்படும்.