வியத்தகு தகவல்கள்!
விசுவ கோபுரம் (The Devil’s Tower)
ஐக்கிய அமெரிக்க குடியரசின் முதலாவது தேசிய ஞாபகச் சின்னமாகிய இது 380m உயரமானது.
ஏறத்தாழ 50 மில்லியன் வருடங்களுக்கு முன்னர் வெடித்த ஒரு எரிமலை பற்றிய விபரங்களை இது கூறுகின்றது.
புவியினுள் உருகிய ‘கோகோல்ற்’ ஆனது எரிமலைக் குழம்பாக நிலத்திலிருந்து மேல் நோக்கிச் செலுத்தப் பட்ட இடத்தின்மேல் அந்தமாக இது கருதப்படுகின்றது.
சான் அன்றியாஸ் (San Andreas)
வட அமெரிக்கா வின் கலிஃபோர் னியா மாநிலத்தின் அரீனா முனை தொடக்கம் இம்பீரியல் பள்ளத்தாக்கு வரையில் ஏறத்தாழ 1000km நீளமுடைய ஒரு வெடிப்பு புவி மீது காணப்படுகின்றது.
இது புவியின் நிலத்தள எல்லையொன்றாகும். இதன் இரு புறத்திலும் வட அமெரிக்க நிலத்தளமும் பசுபிக் நிலத் தளமும் அமைந்துள்ளன.
இந்த 2 நிலத் தளங்களும் ஒரு வருடத்துக்கு இரண்டரை சென்ரிமீற்றர் வழுக்கி உராய்ந்து செல்கின்றன.
இதன் எல்லையில் பாரிய பூமி நடுக்கமும் எரிமலை வெடிப்புகளும் அடிக்கடி நிகழ்கின்றன.
விண்வீழ் கற்குழி (Meteor Crater)
விண்கல் வீழ்ந்த மையால் தோன்றிய ஒரு குழி அமெரிக் காவில் அரிசோனா மாநிலத்தின் லினிஸ்கோ பிரதேசத்தில் காணப்படுகின்றது.
இற்றைக்கு 50,000 வருடங்களுக்கு முன்னர் இங்கு விண்கல் வீழ்ந்திருக்கக்கூடும் எனக் கருதப்படுகின்றது.
இந்த விண்கல் ஏறத்தாழ 50m விட்டமுடையது என நம்பப்படுகின்றது.