செண்ட்விச் கண்டுபிடிக்கப்பட்ட கதை!
மேலைத்தேய நாடுகளில் இருந்து நமது நாடு உட்பட பல நாடுகளுக்கு அறிமுகமானதுதான் இந்த செண்ட்விச்.
காலை உணவிற்கும் வழிப்பயணங்களிலும் இலகுவாக உண்ணக்கூடிய ஓர் உணவு முறை என்பதால் இது மிகவும் பிரசித்தம் பெற்றது.
அனைவரும் விரும்பி உண்ணும் செண்ட்விச்சைக் கண்டுபிடித்தவர் ஜோன் மொன்டேகு ஆவார். இவர் மிக மோசமான ஒரு சோம்பேறி.
1762 இல் இவரது சோம்பேறித்தனத்தால் கிடைத்த வெகுமதிதான் இந்த செண்ட்விச்.
இடைவெளி இல்லாமல் எந்நேரமும் சீட்டு விளையாடும் இவர் பாண், கறி என்பனவற்றை எப்போதும் தன் அருகிலேயே வைத்துக்கொள்வார்.
விளையாடும்போது, தனது சோம்பேறித் தனத்தால் இடையிடையே இரண்டு பாண் துண்டுகளை (ஸ்லைஸ்) எடுத்து அதன் நடுவில் சிறிது கறியை வைத்து உண்ண ஆரம்பித்தார்.
அதுவே பின்னர் ஓர் உணவு வகையாகவும் மாறியது. நாளடைவில் விதவிதமான செண்ட்விச் வகைகளை தயாரித்து உண்ணும் பழக்கம் மக்களிடையே
உருவாகியது. ஜோன் மொன்டேகு ஓர் அரச உத்தியோகத்தவராவார். அவர் பதவியின் பெயர் ஃபோர்த் எர்ல் ஒஃப் செண்ட் விச்’ என்பதாகும். அதிலிருந்துதான் இந்த உணவுக்கு ‘செண்ட்விச்’ என்று பெயர் வந்ததாகவும் கூறப்படுகிறது.