Spoken English
இலகுவழி ஆங்கிலம் – பாகம் 20
வேண்டியிருக்கிறது, வேண்டியிருந்தது, வேண்டியிருக்கும் – கேள்வி, எதிர்
- அவர்கள் போகவேண்டியிருக்கிறது
- They have to go
- அவர்கள் போகவேண்டியில்லை
- They do not have to go
- அவர்கள் போகவேண்டியிருக்கிறதா?
- Do they have to go?
- அவர்கள் எங்கே போகவேண்டியிருக்கிறது
- Where do they have to go?
- அவன் எழுதவேண்டியிருக்கிறது
- He has to write
- அவன் எழுதவேண்டியில்லை
- He does not have to write
- அவன் எழுதவேண்டியிருக்கிறதா?
- Does he have to write?
- அவன் என்ன எழுதவேண்டியிருக்கிறது?
- What does he have to write?
- நீங்கள் விளக்கவேண்டியிருக்கிறது
- You have to explain
- நீங்கள் விளக்க வேண்டியில்லை
- You don’t have to explain
- நீங்கள் விளக்க வேண்டியிருக்கிறதா?
- Do you have to explain?
- நீங்கள் எப்படி விளக்கவேண்டியிருக்கிறது?
- How do you have to explain?
- அவள் கொடுக்க வேண்டியிருக்கிறது
- She has to give
- அவள் கொடுக்க வேண்டியில்லை
- She does not have to give
- அவள் கொடுக்க வேண்டியிருக்கிறதா?
- Does she have to give?
- அவள் எப்போது கொடுக்க வேண்டியிருக்கிறது?
- When does she have to give?
- நாங்கள் ஒப்படைக்க வேண்டியிருக்கிறது
- We have to submit
- நாங்கள் ஒப்படைக்க வேண்டியில்லை
- We don’t have to submit
- நாங்கள் ஒப்படைக்க வேண்டியிருக்கிறதா?
- Do we have to submit?
- நாங்கள் எங்கே ஒப்படைக்க வேண்டியிருக்கிறது?
- Where do we have to submit?
பயிற்சி 1 : தமிழில் சொல்லவும்
- What do you have to eat?
- Does he have to write anything?
- We don’t have to talk to them
- How do you have to play this?
- Do I have to return this?
- We do not have to go anywhere today
- Does she have to teach them?
- What do they have to bring?
பயிற்சி 2: ஆங்கிலத்தில் சொல்லவும்
- நீங்கள் அங்கே என்ன செய்ய வேண்டியிருக்கிறது?
- அவர்கள் இங்கே ஏதாவது வேலை செய்ய வேண்டியிருக்கிறதா?
- நாங்கள் அவர்களுக்கு எதையும் சொல்ல வேண்டியில்லை.
- அவன் அவர்களுக்கு என்ன எழுத வேண்டியிருக்கிறது?
- நீங்கள் இப்போது எங்காவது போக வேண்டியிருக்கிறதா?
- அவள் எனக்கு எதையும் சொல்ல வேண்டியில்லை
- அவர்கள் எப்படி இந்த பிரச்சினையை கையாள வேண்டியிருக்கிறது?
- நீ அவர்களுக்கு உதவ வேண்டியிருக்கிறதா?
- அவர்கள் எங்கே வேலைசெய்ய வேண்டியிருக்கிறது?
- நான் அவர்களை சந்திக்க வேண்டியில்லை
இறந்த காலம் – கேள்வி, எதிர்
- நாங்கள் எழுத வேண்டியிருந்தது
- We had to write
- நாங்கள் எழுத வேண்டியிருக்கவில்லை
- We did not have to write
- நாங்கள் எழுத வேண்டியிருந்ததா?
- Did we have to write?
- நாங்கள் என்ன எழுத வேண்டியிருந்தது?
- What did we have to write?
- அவர்கள் சாப்பிட வேண்டியிருந்தது
- They had to eat.
- அவர்கள் சாப்பிட வேண்டியிருக்கவில்லை
- They did not have to eat.
- அவர்கள் சாப்பிட வேண்டியிருந்ததா?
- Did they have to eat?
- அவர்கள் எங்கே சாப்பிட வேண்டியிருந்தது?
- Where did they have to eat?
- அவன் பார்க்க வேண்டியிருந்தது
- He had to see
- அவன் பார்க்க வேண்டியிருக்கவில்லை
- He did not have to see
- அவன் பார்க்க வேண்டியிருந்ததா?
- Did he have to see?
- அவன் என்ன பார்க்க வேண்டியிருந்தது?
- What did he have to see?
- நீங்கள் சந்திக்க வேண்டியிருந்தது
- You had to meet.
- நீங்கள் சந்திக்க வேண்டியிருக்கவில்லை
- You did not have to meet.
- நீங்கள் சந்திக்க வேண்டியிருந்ததா?
- Did you have to meet?
- நீங்கள் எங்கே சந்திக்க வேண்டியிருந்தது?
- Where did you have to meet?
- அவள் சமைக்க வேண்டியிருந்தது
- She had to cook
- அவள் சமைக்க வேண்டியிருக்கவில்லை
- She did not have to cook
- அவள் சமைக்க வேண்டியிருந்ததா?
- Did she have to cook?
- அவள் எப்படி சமைக்க வேண்டியிருந்தது?
- How did she have to cook?
பயிற்சி 3 : தமிழில் சொல்லவும்
- Did they have to write the exam last year?
- When did you have to go there?
- We did not have to give anything
- Where did she have to buy that?
- Did you have to go there alone?
- When did he have to call you?
- They did not have to come here
- How did they have to do that?
பயிற்சி 4: ஆங்கிலத்தில் சொல்லவும்
- அவர்கள் நேற்று எங்கே போக வேண்டியிருந்தது?
- நாங்கள் அவர்களுக்கு எதையும் சொல்ல வேண்டியிருக்கவில்லை
- நீ அவனைச் சந்திக்க வேண்டியிருந்ததா?
- அவர்கள் அந்தப் பிரச்சினையை எப்படித் தீர்க்க வேண்டியிருந்தது?
- அவன் நேற்று என்ன விளக்க வேண்டியிருந்தது?
- நான் அவர்களுக்கு பணம் செலுத்த வேண்டியிருக்கவில்லை
- அவள் நேற்று அதை முடிக்கவேண்டியிருந்ததா?
- நீங்கள் யாருக்கு அதை எழுத வேண்டியிருந்தது?
- அவன் ஏன் அதை அனுப்ப வேண்டியிருந்தது?
- அவள் இங்கு வர வேண்டியிருக்கவில்லை
எதிர்காலம் – கேள்வி, எதிர்
- அவன் வர வேண்டியிருக்கும்
- He will have to come
- அவன் வர வேண்டியிருக்காது
- He will not have to come
- அவன் வர வேண்டியிருக்குமா?
- Will he have to come?
- அவன் எங்கே வர வேண்டியிருக்கும்?
- Where will he have to come?
- நாங்கள் ஒப்படைக்கவேண்டியிருக்கும்
- We will have to submit
- நாங்கள் ஒப்படைக்க வேண்டியிருக்காது
- We will not have to submit?
- நாங்கள் ஒப்படைக்க வேண்டியிருக்குமா?
- Will we have to submit?
- நாங்கள் எப்போது ஒப்படைக்கவேண்டியிருக்கும்
- When will we have to submit?
- அவள் அறிவிக்க வேண்டியிருக்கும்
- She will have to inform
- அவள் அறிவிக்கவேண்டியிருக்காது
- She will not have to inform
- அவள் அறிவிக்கவேண்டியிருக்குமா?
- Will she have to inform?
- அவள் என்ன அறிவிக்கவேண்டியிருக்கும்?
- What will she have to inform?
- நீ சொல்லவேண்டியிருக்கும்
- You will have to tell
- நீ சொல்லவேண்டியிருக்காது
- You will not have to tell
- நீ சொல்லவேண்டியிருக்குமா?
- Will you have to tell?
- நீ எப்படி சொல்லவேண்டியிருக்கும்?
- How will you have to tell?
- அவர்கள் முடிக்கவேண்டியிருக்கும்
- They will have to finish
- அவர்கள் முடிக்கவேண்டியிருக்காது
- They will not have to finish
- அவர்கள் முடிக்கவேண்டியிருக்குமா?
- Will they have to finish?
- அவர்கள் எப்போது முடிக்கவேண்டியிருக்கும்?
- When will they have to finish?
பயிற்சி 5: தமிழில் சொல்லவும்
- Where will they have to go tomorrow?
- Will you have to buy that?
- When will they have to come here?
- I will not have to send them anything
- Will he have to stay in a hotel?
- When will we have to come again?
- How will you have to do that?
- They will not have to pay anything
பயிற்சி 6 : ஆங்கிலத்தில் சொல்லவும்
- நீங்கள் நாளை அவர்களுக்கு என்ன கொடுக்க வேண்டியிருக்கும்?
- நாங்கள் அவர்களை நாளை சந்திக்க வேண்டியிருக்காது
- அவன் அங்கே எதையும் கொண்டுபோக வேண்டியிருக்காது
- அவர்கள் அங்கே சாப்பிட வேண்டியிருக்குமா?
- நீங்கள் அவர்களுக்கு ஏதாவது சொல்ல வேண்டியிருக்குமா?
- அவள் அடுத்த வருடம் பரீட்சை எழுத வேண்டியிருக்குமா?
- அவன் எல்லாவற்றையும் அவளுக்கு விளக்க வேண்டியிருக்கும்
- நான் இன்றிரவு வேலை செய்ய வேண்டியிருக்குமா?
- அவன் என்ன கொடுக்க வேண்டியிருக்கும்?
- அவர்கள் இங்கு வர வேண்டியிருக்காது
பயிற்சி 7: ஆங்கிலத்தில் சொல்லவும்
- நீங்கள் எங்கே பரீட்சை எழுத வேண்டியிருந்தது?
- அவர்கள் நாளை இங்கே வர வேண்டியிருக்குமா?
- நான் உங்களுடன் என்ன கதைக்க வேண்டியிருக்கிறது?
- நீங்கள் அங்கே எதுவும் செய்ய வேண்டியிருக்காது
- நாங்கள் அங்கே என்ன குடிக்க வேண்டியிருக்கும்?
- நீங்கள் ஏன் அங்கே போக வேண்டியிருந்தது?
- நாங்கள் அவர்களுக்கு ஏதாவது கொடுக்க வேண்டியிருக்குமா?
- நீங்கள் அடுத்தவருடம் என்ன படிக்க வேண்டியிருக்கும்?
- அவன் ஏன் அந்த பிரச்சினையைத் தீர்க்க வேண்டியிருந்தது?
- அவள் எப்போது அங்கே போக வேண்டியிருக்கும்?
- நான் எப்படி அங்கு வேலைசெய்ய வேண்டியிருக்கும்?
- அவன் ஏன் அதை விற்க வேண்டியிருந்தது?
- நீங்கள் எங்கே அவனைச் சந்திக்க வேண்டியிருக்கிறது?
- அவன் என்ன சாப்பிட வேண்டியிருக்கிறது?
- அவள் அங்கே தங்க வேண்டியிருக்காது
- நீங்கள் அதை சொல்ல வேண்டியிருந்ததா?
- நான் இன்று அதை சொல்ல வேண்டியிருக்காது
- நீங்கள் ஆரம்பிக்க வேண்டியிருக்கிறதா?
- அவன் ஏன் அதை சுத்தமாக்க வேண்டியிருக்கிறது?
- அவன் இங்கு வர வேண்டியிருக்காது
- அவர்கள் ஏன் வாங்க வேண்டியிருக்கும்?
- நீங்கள் அதை அறிவிக்க வேண்டியிருந்ததா?
- நான் அதை விபரிக்க வேண்டியில்லை
- அவர்கள் வாசிக்க வேண்டியிருக்கவில்லை