உடலில் உள்ள நச்சுக்களை அகற்ற செய்ய வேண்டியவை!
நாம் தினமும் உண்ணும் உணவுகள் மூலம் உடலில் நச்சு பதார்த்தங்கள் சேர்ந்துகொண்டே இருக்கும் என்பது உங்களுக்கு தெரியுமா?
எமது உடலில் சேரும் நச்சுக்களை அவ்வப்போது வெளியேற்ற வேண்டியது மிகவும் அவசியமானஒன்று.
நச்சுக்களை வெளியேற்றாமல் உடலில் தேங்க வைத்தால் மலசிக்கல் தொடக்கம் சமீபாட்டு கோளாறு வரை பலவிதமான நோய்கள் ஏற்படும் வாய்ப்புள்ளது.
நச்சுகளை வெளியேற்ற சாப்பிட வேண்டிய உணவுகள் தொடர்பாக பார்ப்போம்.
க்ரீன் டீ
உடலை சுத்தப்படுத்துவதற்கு உதவும் உணவுபொருட்களில் க்ரீன்டீ முதன்மையானது. க்ரீன் டீயில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் அதிகமுள்ளது.
காய்கறிகள் மற்றும் பழங்கள் நார்ச்சத்து அதிகமுள்ள உணவு வகைகளான பீட்ரூட், முள்ளங்கி, முட்டைக்கோஸ், ப்ராக்கோலி, ஸ்பைருலினா, குளோரெல்லா ஆகியவையும் அற்புதமான நச்சு நீக்கும் உணவுகளாகும்.
இஞ்சி
இஞ்சியின் மருத்துவ குணம் தொடர்பாக அனைவருக்கும் தெரிந்திருக்கும். அத்தகைய மருத்துவ குணமிக்க இஞ்சியைக் குடிக்கும் டீயில் சிறிது தட்டிப் போட்டு குடித்து வந்தால், அதில் உள்ள பொருள், உடலை சுத்தமாக்கும்.
பூண்டு
உடலை சுத்தம் செய்ய பயன்படும் உணவுப் பொருட்களில் பூண்டும் ஒன்று. ஆகவே ஒரு பச்சை பூண்டை தினமும் சாப்பிட்டு வந்தால் உடலில் உள்ள கொழுப்புக்கள் கரையும்.
நார்ச்சத்துள்ள உணவுகள்
நட்ஸ் மற்றும் பருப்பு வகைகள் போன்ற உணவுபொருட்களை தினமும் சாப்பிட்டு வந்தால் உடலில் கழிவுகள் சேராமல் சுத்தமாகவும், ஆரோக்கியமாகவும் செயல்படும்