இலங்கைபொது அறிவு

இலங்கை சுகாதாரத்துறையின் வரலாற்று மைல்கற்கள் (1859 – 1997)

இலங்கையின் சுகாதாரக் கட்டமைப்பு உருவான விதம் மற்றும் அதன் முக்கிய முன்னேற்றங்களை மாணவர்கள் தெளிவாகப் புரிந்துகொள்ளும் வகையில் மூன்று காலப்பகுதிகளாகப் பிரித்து வழங்கப்பட்டுள்ளது.

1. ஆரம்பக்கால அடிப்படைகள் மற்றும் மருத்துவமனை நிறுவுகை (1859 – 1931)

இந்தக் காலப்பகுதியில் சிவில் நிர்வாகத்தின் கீழ் சுகாதாரக் கட்டமைப்பு வேரூன்றத் தொடங்கியது.

  • 1859: சிவில் மருத்துவத் திணைக்களம் நிறுவப்பட்டமை.

  • 1864: கொழும்பு பொது வைத்தியசாலை (தற்போதைய தேசிய வைத்தியசாலை) நிறுவப்பட்டமை.

  • 1879: டி சொய்சா மகப்பேற்று வைத்தியசாலை நிறுவப்பட்டமை.

  • 1910: லேடி ரிஜ்வே நினைவு (சிறுவர்) வைத்தியசாலை நிறுவப்பட்டமை.

  • 1913: சுகாதாரத் திணைக்களம் அமைக்கப்பட்டமை.

  • 1926: மருத்துவம் மற்றும் சுகாதாரப் பணிகள் பணியாளரின் கீழ் சிகிச்சை மற்றும் தடுப்புப் பணிகளை இணைத்தமை.

  • 1931: மருத்துவப் பணிகள் மற்றும் பொதுநலம் ஆகியவற்றுக்குப் பொறுப்பாக முதன்முதலில் ஒரு நல அமைச்சர் நியமிக்கப்பட்டமை.

2. விஸ்தரிப்பு மற்றும் விசேட சுகாதாரப் பிரிவுகள் (1950 – 1972)

சுதந்திரத்திற்குப் பின்னரான காலப்பகுதியில் குடும்ப நலம் மற்றும் சட்ட ரீதியான மாற்றங்கள் முன்னுரிமை பெற்றன.

  • 1950: காசில் வீதி மகப்பேற்று வைத்தியசாலை திறக்கப்பட்டமை.

  • 1952: தேசிய மருத்துவப் பணிகள் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டமை.

  • 1953: குடும்பத் திட்டமிடல் அமைப்பை நிறுவியமை.

  • 1955: நலப்பணிச் சபையினை மதியுரைக் குழு ஒன்றாக நிறுவியமை.

  • 1961: ஆயுர்வேத மருத்துவ சபை நிறுவியமை.

  • 1964: அரச வைத்தியர்களின் தனிப்பட்ட சிகிச்சை முறைக்குத் தடை விதிக்கப்பட்டமை.

  • 1966: நலத் திணைக்களம் நல அமைச்சுடன் இணைக்கப்பட்டமை.

  • 1970: குடும்ப நலப் பணியகம் நிறுவப்பட்டமை.

  • 1971: அரச மருந்தாக்கக் கூட்டுத்தாபனம் (SPC) நிறுவப்பட்டமை.

  • 1972: நலக் கல்விப் பணியகம் நிறுவப்பட்டமை.

3. கொள்கை மாற்றங்கள் மற்றும் நவீனமயமாக்கல் (1978 – 1997)

உலகளாவிய சுகாதார கொள்கைகளை ஏற்றுக்கொண்டதுடன், அதிகாரப் பகிர்வு மற்றும் புதிய சட்டங்கள் உருவாக்கப்பட்டன.

  • 1978: சர்வதேச அல்மா-ஏரிஏ (Alma-Ata) மாநாட்டின் ‘ஆரம்ப சுகாதார பராமரிப்பு’ அணுகுமுறையை ஏற்றமை மற்றும் மருந்து இறக்குமதி தாராளமாக்கப்பட்டமை.

  • 1979: ஸ்ரீ ஜயவர்த்தனபுர போதனா வைத்தியசாலை நிறுவப்பட்டமை மற்றும் அரச வைத்தியர்கள் மீண்டும் தனிப்பட்ட சிகிச்சை செய்ய அனுமதிக்கப்பட்டமை.

  • 1980: நல அபிவிருத்திக்கான சாசனம் கையெழுத்தாகியமை மற்றும் தேசிய சுகாதாரக் கழகம் உருவானமை.

  • 1981: ஆரம்ப சுகாதாரக் கவனிப்புக்காக மாவட்ட அபிவிருத்திச் சபைகள் நிறுவப்பட்டமை.

  • 1989: நல அமைச்சும் போதனா வைத்தியசாலைகளும் இணைக்கப்பட்டமை.

  • 1990: மாகாணசபைச் சட்டத்தின் கீழ் சுகாதார நிர்வாகம் பன்முகப்படுத்தப்பட்டமை.

  • 1992: தேசிய நலக் கொள்கையை உருவாக்க ஜனாதிபதி செயலணிக் குழு நியமிக்கப்பட்டமை.

  • 1996: தேசிய நலக் கொள்கை வரைவு தயாரிக்கப்பட்டமை.

  • 1997: நல உபாயங்கள் மற்றும் செயற்பாட்டுத் திட்டங்களை ஒழுங்கமைக்க ஜனாதிபதி செயலணிக் குழு நியமிக்கப்பட்டமை.

Related Articles

Back to top button

வணக்கம்! Ad Blocker யூஸ் பண்றீங்களா?

தொடர்ந்து கல்வி உலகு இணையத்தளத்தை படிக்க Ad Blocker-ல் Kalviulagu வலைதளத்தை exclude செய்யுங்கள்.