ஒலிம்பிக் பற்றிய பொது அறிவு தொகுப்பு

ஒலிம்பிக் செய்திகள்
கிறீஸ் நாட்டில் ஒலிம்பியா என்ற இடத்தில் ஜீயஸ் என்ற கடவுள் விழாவின்போது 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெற்றது.
1896 இல் நவீன ஒலிம்பிக் தொடங்கப்பட்டது. தொடக்கியவர் பிரெஞ்சுக்காரர். பெயர் டி.காபார்ட்டிகி.
உலகப்போர்நடைபெற்ற சமயத்தில் மட்டும் ஒலிம்பிக் நடைபெறவில்லை. ஒலிம்பிக் சின்னம் இணைக்கப்பட்ட 5 வளையங்கள் ஐரோப்பா நீங்கலாக மற்ற ஆசிய, ஆபிரிக்க, வட அமெரிக்க, தென் அமெரிக்க, அவுஸ்ரேலியாவைக் குறிக்கின்றது.
ஐரோப்பாவே ஒலிம்பிக்கின் தாய்க்கண்டம்.
ஒலிம்பிக் வாசகம் Faster, Highter, Stronger.
ஒலிம்பிக் அடையாளமாக ஐந்து வளையமும் கறுப்பு, நீலம், பச்சை, மஞ்சள், சிவப்பு வர்ணங்கள் காணப்படுகின்றன.
தொடக்க விழாவில் முதலில் வரும் நாடு கிறீஸ், இறுதியில் வருவது ஒலிம்பிக் நடக்கும் நாடு. அகல வரிசைப்படி நாடுகளின் அணிவகுப்பு நடைபெறும். ஒலிம்பிக்கிற்கு தனிக்கொடி உண்டு. தொடக்கத்தில் கொடி ஏற்றப்பட்டதும் நூற்றுக்கணக்கான புறாக்கள் பறக்கவிடப்படும்.
ஒலிம்பிக் தீபம் ஏற்றப்படும். போட்டி முடியும்வரை இது எரிந்து கொண்டிருக்கும். ஒலிம்பிக் தீபம் ஒலிம்பியாவிலிருந்து எடுத்து வரப்படும். அக்காலத்தில் ஒலிவ் இலை கிரீடம்தான் பரிசு.