சுப்பர் ப்ளான்ட்ஸ்
இன்று தாவரங்களில் தமது புதிய கண்டுபிடிப்புகளைப் பயன்படுத்தி நல்ல பல பயன்களைப் பெறுகின்றனர். உதாரணமாக, சாதாரண பூசணிக்காய் ஓர் உதைபந்தின் அளவுதான் இருக்கும். ஆனால், சுப்பர் ப்ளான்ட் செடிகளில் காய்க்கும் காய்கள் மிகப் பெரிதாக இருக்கும்.
இங்கிலாந்தில் உள்ள ஜே ஈஸ்ட் என்பவர் உலகின் மிகப்பெரிய உருளைக் கிழங்கைப் பயிரிட்டுள்ளார். இந்த உருளைக்கிழங்கின் நிறை எவ்வளவு தெரியுமா? மூன்றரைக் கிலோ கிராமுக்கும் அதிகமாகும் இந்த சுப்பர் ப்ளான்ட்கள் பெரிதாக மட்டுமல்ல.
ஆரோக்கியமாகவும் வளரும். அத்துடன், ஏனைய தாவரங்களைத் தாக்கும் பூச்சிகள், நோய்கள் சுப்பர் ப்ளான்ட்களை எளிதில் தாக்குவதில்லை,
இப்பொழுது அமெரிக்க விஞ்ஞானிகள் சதுரத் தக்காளிகளைக் கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கின்றனர்.
சில விஞ்ஞானிகள் உப்புத்தண்ணீரில் வளரக்கூடிய நெல், கோதுமை வகைகளைக் கண்டுபிடிக்க முயற்சி செய்கிறார்கள் இது வெற்றியடைந்தால் கடல், பாலைவனப் பகுதிகளில்கூட இத்தாவரங்களை விளைவிக்க முடியும்