தமிழ் எழுத்துப் பயிற்சி! (PDF)

ஒவ்வொரு மொழிக்கும் ஒவ்வொரு எழுத்துக்கள் இருக்கின்றன. அதே போல தமிழ் மொழிக்கென மொத்தமாக 247 எழுத்துக்கள் காணப்படுகின்றன.
அவற்றில் 12 எழுத்துக்கள் உயிரெழுத்துக்களாகவும் 18 எழுத்துக்கள் மெய்யெழுத்துக்களாகவும் 216 எழுத்துக்கள் உயிர்மெய் எழுத்துக்களாகவும் 1 எழுத்து ஆயுத எழுத்தாகவும் உள்ளது.
இந்த புத்தகமானது தமிழ்மொழி நன்றாக தெரிந்தவர்களிற்கு மேலும் தமிழ்மொழி பற்றிய விளக்கத்தினை கற்பதற்கு எந்த விதத்திலும் உதவிபுரியாது.
தமிழ் மொழி தெரியாதவர்களுக்கு தமிழ் மொழியில் உள்ள எழுத்துக்களை கற்பதற்கும் எழுதுவதற்கு பழகுவதற்கும் பெரும் துணையாக இருக்கும் என்பது எமது நம்பிக்கை.
குறிப்பு:- இந்த புத்தகத்திலே ஆங்கிலத்திலும் தமிழ் மொழியிலும் மட்டுமே விளக்கங்கள் காணப்படுவதால் இந்த புத்தகத்தை கற்பதற்கு ஆங்கிலம் சிறிதளவேனும் தெரிந்திருந்தால் தமிழ் எழுத்து பயிற்சி புத்தகத்தை இலகுவாக கற்கமுடியும்.



