Uncategorized

பூமியைப் போலவே இன்னொரு ‘சூப்பர் பூமி!

பூமியைப் போன்று அதைவிட 2.7 மடங்கு பெரிய நீர் நிறைந்த ‘சூப்பர் பூமி’ ஒன்றை அமெரிக்க விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

ஹார்வேர்ட் பல்கலைக்கழக வானியல் பேராசிரியர்கள் நடத்திய ஆராய்ச்சியை அடுத்தே, பூமிக்கு அருகில் அதைவிட 2.7 மடங்கு பெரிதான மற்றொரு கிரகம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்தப் புதிய கிரகத்தில் நீர், வெப்பம் என்பன இருப்பதாக விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். புதிய கிரகத்துக்கு ‘ஜிஜே 1214பி’ என்று பெயரிட்டுள்ளனர்.

எனினும், பூமியை விட 2.7 மடங்கு பெரியதாக அது இருப்பதால், அதனை ‘சூப்பர் பூமி’ என்றும் அழைக்கின்றனர். இது குறித்து பேராசிரியர் சர்போனியூ கூறுகையில், “நமது கற்பனைக்கு எட்டாத அளவுக்கு புதிய கிரகங்களை இயற்கை உருவாக்கியுள்ளது.

நமது பூமிக்கு அருகில் புதிய கிரகம் இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. செயற்கைக்கோளுடன் இணைந்த அதிநவீன தொலைநோக்கியை கொண்டே கிரகங்களை நாம் தேடுகின்றோம்.

எனினும், இந்தக் கிரகத்தை சாதாரண 16 அங்குல தொலைநோக்கியை வைத்தே கண்டறிந்தோம்” என்றார். இதுபோன்ற புதிய கிரகங்கள் இருப்பதை கடந்த சில ஆண்டுகளில்தான் விஞ்ஞா னிகள் கண்டுபிடிக்கத் தொடங்கினர்.

இதற்கு முன்னர் கண்டுபிடிக்கப் பட்ட சில கிரகங்கள் வியாழன் போன்ற அமைப்பில் இருந்தன. எனினும், ‘சூப்பர் ஏர்த் கிரகம்தான் பூமியைப் போல் உள்ளது என்றும் சர்போனியூ தெரிவித்துள்ளார்.

எனினும், புதிய கிரகத்தில் நீர் இருப்பதாக விஞ்ஞானிகள் கூறி யிருந்தாலும், அங்கு உயிரினங்கள் வசிக்கின்றனவா? என்பது பற்றி அவர்கள் குறிப்பிடவில்லை

Related Articles

Leave a Reply

Back to top button

வணக்கம்! Ad Blocker யூஸ் பண்றீங்களா?

தொடர்ந்து கல்வி உலகு இணையத்தளத்தை படிக்க Ad Blocker-ல் Kalviulagu வலைதளத்தை exclude செய்யுங்கள்.