பொது அறிவு வினா விடை தொகுப்பு – 2
போட்டிப் பரீட்சைகளுக்கான சமீபத்திய உலக இலங்கை நடப்புகளின் பொது அறிவு வினா விடை தொகுப்பு.
1. இலங்கையின் முதலாவது செயற்கை கோளின் பெயர் என்ன?
ராவணா – 1 (Ravana – 1)
2. நேபாளத்தின் முதலாவது செயற்கைக்கோளின் பெயர் என்ன?
“நேபாளிசேட் – 1” (Nepalisat -1)
3. அண்மையில் நாசாவைச் சேர்ந்த Tess (Transiting Exoplanent Survey Satellite) பூமியின் அளவை கொண்ட எந்த கிரகத்தை கண்டறிந்துள்ளது?
“HD217496”
4. பிரான்சில் நடைபெற்ற 43-வது பாரிஸ் மாரத்தான் போட்டியில் வெற்றி பெற்ற வீரர் மற்றும் வீராங்கனை யாவர்?
ஆப்ரா மிஃலா, கெலட் புர்ஃகா
5. சனிக்கிரகத்தின் மிகப்பெரிய துணைக் கோளான ‘டைட்டனில்’ அமெரிக்காவின் நாசா விஞ்ஞானிகள் கண்டுபிடித்த கண்டுபிடிப்பு எது?
மீத்தேன் ஏரி
6. எண்ணெய் படிவுகளை உண்ணும் புதிய பாக்டீரியா இனம் கட்டுபிடிக்கப்பட்டது எந்த பகுதியில்?
மரியானா அகழி (11,000 மீட்டர் ஆழத்தில்)
7. சமீபத்தில் ஆசியாவிலேயே முதன்முறையாக முற்றிலுமாக மாணவிகளே உருவாக்கிய செயற்கைக்கோள் எது?
“எஸ்.கே.ஐ.என்.எஸ்.எல்.வி.9 (‘SKINSLV 9′) மணியம்மையார் சாட்”
8. சமீபத்தில் உலகின் முதல் வாஸ்குலர்ஜிடேல் பொறிக்கப்பட்ட 3D இதயத்தை தயாரித்த பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் யார்?
“டெல் அலிவ் ஆராய்ச்சியாளர்கள்” (இஸ்ரேல்)
9. சமீபத்தில் ICICI – யானது ATM எந்திரம் மூலமாக எவ்வளவு ரூபாய் வரை கடன் வழங்கும் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது?
15 லட்சம் வரை
10.சமீபத்தில் செவ்வாய் கிரக பாறையில் துளையிட்டு ஆய்வு செய்து அமெரிக்க ஆய்வு கலம் எது?
கியூரியாசிட்டி
11.சமீபத்தில் சீனாவில் நடைபெற்ற பார்முலா 1 கார் பந்தயத்தில் கோப்பையை வென்ற வீரர் யார்?
லீவிஸ் ஹாமில்டன்
12.சமீபத்தில் நடைபெற்ற சிங்கப்பூர் ஓமன் பேட்மின்டனில் சாம்பியன் பட்டம் வென்றவர் யார்?
கென்டோ மோமோட்டா (ஜப்பான்)
13.”அரசாங்க தகவல் திணைக்களம்” எந்த அமைச்சின் கீழ் இயங்குகிறது? அத்துடன் இந்த திணைக்களம் எத்தனையாம் ஆண்டு இலங்கையில் நிறுவப்பட்டது?
பாராளுமன்ற மறுசீரமைப்பு மற்றும் வெகுசன ஊடக அமைச்சு. 1948
14.இலங்கை அரசாங்கப் பகுப்பாய்வாளர் திணைக்களமானது தனது 100வது வருட நிறைவை எந்த ஆண்டில் கொண்டாடியது?
2004
15.ரூபாய் நாணய முறை எந்தெந்த நாடுகளில் பின்பற்றப் படுகிறது? இலங்கை , இந்தியா (Srilanka, India)
16.அண்மையில் LMD சஞ்சிகையினால் “The 100 club” தரப்படுத்தலில் பாரிய சில்லறை விற்பனை நிறுவனமாக வர்த்தக துறையில் முன்னணி வகிப்பது தொடர்பில் கௌரவப்படுத்தப்பட்ட நிறுவனம் எது?
Singer Sri Lanka PLC
17.இலங்கையில் 1995ம் ஆண்டு 28.8% ஆக காணப்பட்ட வறுமை வீதமானது 2016ம் ஆண்டாகும்போது 4.1 வீதமாக குறைவடைந்துள்ளது. அதிகூடிய வறுமை வீதம் கூடிய மாகாணம் எது? ஆகக்குறைந்தளவு வறுமை வீதம் கொண்ட மாகாணம் எது?
வறுமை கூடிய மாகாணம் – வடக்கு, வறுமை குறைந்தது – மேற்கு
18.முதன்முதலில் குடியுரிமை பெற்ற ரோபோவின் பெயர் என்ன ?
சோபியா, சவுதி அரேபியா
19.தனது தலைநகரை மாற்றவுள்ள நாடு எது?
இந்தோனேசியா, போர்னியோ
20.”கிரிக்கெட்டில்” உலக அளவில் ஊழல்கள் நிதி மோசடிகள் நிகழும் நாடுகளில் முதன்மை இடத்தைக் கொண்ட நாடு எது?
மேற்கிந்தியா
21.இலங்கையில் தற்போதைய நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் பெண் நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை யாது?
13
22.பிரான்ஸிய புரட்சியின் போது உடைக்கப்பட்ட சிறைச்சாலை எது?
பஸ்டில் சிறைச்சாலை
23.ஜிம்பாப்வே நாட்டின் பழைய பெயர் என்ன?
தெற்கு ரொடீஷியா
24. ஒலிம்பிக் கமிட்டியின் தாயகம் எங்கு அமைந்துள்ளது?
லாசானோ (சுவிட்சர்லாந்து)
25.உலகிலேயே அதிக பெண் எம்.பி.கள் உள்ள நாடு எது?
ருவாண்டா
26.உலகின் முதல் தீயணைப்பு நிலையம் அமைக்கப்பட்டது எங்கு? லண்டன்
27.உலகின் கடற்கரை இல்லாத நாடுகள் மொத்தம் எத்தனை?
26
28.உலகின் மிகப்பெரிய மிதவைப் பாலம் எங்கு அமைந்துள்ளது?
வாஷிங்க்டன் (அமெரிக்கா)
29.உலக சுற்று சூழல் தினம் எப்போது கொண்டாடப்படுகிறது?
ஜூன் 5
30.ஹாலிவுட் படத்திற்கு முதல் முதலில் இசை அமைத்த இந்தியர் யார்?
வித்யா சாகர்.
31.சுப்ரமணிய பாரதியின் பிறந்த ஊர் எது?
எட்டயபுரம்.
32.சேர மன்னர்கள் மட்டுமே பாடிய எட்டுத்தொகை நூல் எது?
பதிற்றுப்பத்து.
33.உலகின் மிகப்பெரிய எரி எது?
பைகால் எரி.
34.உலக மக்கள் தொகை தினம் என்று கொண்டாடப்படுகிறது?
ஜூலை 11.
35.வறுமை ஒழிப்பிற்கான ஐ.நா விருது பெற்ற இந்தியர் யார்?
பாத்திமா பீவி.
36.ஜீரோ வாட் பல்பு என்பது உண்மையில் எத்தனை வாட்கள் கொண்டது?
15 வாட்.
37.உலக அமைதிக்கான நோப்லே பரிசை சிபாரிசு செய்வது எந்த நாடு?
நார்வே.
38.காளானில் இருந்து தயாரிக்கப்படும் மருந்து எது?
பென்சிலின்.
39.லட்சத்தீவில் அதிகம் பேசப்பட்டு மொழி எது?
மலையாளம்.
40.’மனிதன் ஒரு அரசியல் மிருகம்’ எனக் கூறியவர் யார்?
அரிஸ்டாட்டில்.
41.சிவப்பு எறும்பின் கொடுக்கில் அமைத்துள்ள அமிலம் எது?
பார்மிக் அமிலம்.
42.ஹாரி பாட்டர் நாவலின் ஆசிரியர் யார்?
ஜே. கே. ரௌலிங்.
43.உலக சிக்கன நாள் என்றுக் கொண்டாடப் படுகிறது?
அக்டோபர் 30.
44.நெல் விளைச்சல் தரும் நிலத்தில் இருந்து அதிகப் படியாக வெளிவரும் வாயு?
ஈத்தேன்.
45.ஆஸ்திரேலியாவின் முதல் பெண் பிரதமர் யார்?
ஜூலியா கில்போர்ட்.
46.மனிதனுக்கு ஒரு நாளைக்கு எத்தனை கலோரி உணவு தேவை?
2500 கலோரி
47.தமிழ் கலண்டரின் முதல் மாதம் எது?
சித்திரை
48.முஸ்லிம் கலண்டரின் முதல் மாதம் எது?
முஹரம்
49.ஆங்கில கலண்டரின் முதல் மாதம் எது?
ஜனவரி
50.உலகத்தில் மிகப் பெரிய அரண்மனை உள்ள நாடு?
“சீன இம்பிரியல் பலஸ்” 178 ஏக்கர் நிலப்பரப்பு
51.சாதாரண பென்சிலால் சுமார் எத்தனை நீளத்துக்கு கோடு வரையலாம்?
35 மைல்
52.ஆகாய விமானங்களின் வேகத்தை அளக்கும் கருவி எது?
டேக்கோ மீட்டர்
53.மனித உடலில் எத்தனை சதவிகிதம் நீர் உள்ளது?
70%
54.காபித்தூளில் கலக்கப்படும் சிக்கரித்தூள், சிக்கரி என்னும் தாவரத்தின் எதிலிருந்து தயாரிக்கப்படுகிறது?
வேர்கள்
55.பட்டுப் புழு உணவாக உண்பது?
மல்பெரி இலை
56.ஓர் அடிக்கு எதனை செண்டிமீட்டர்?
30
57.மியுரியாடிக் அமிலம் என்பது எந்த அமிலத்தின் வேறுபெயர்?
ஹைட்ரோகுளோரிக் அமிலம்
58.உலகில் அதிக மொழிகள் பேசப்படும் நாடு?
இந்தியா
59.உலகில் அதிக மொழிகள் பேசப்படும் நகரம்?
லண்டன், ஹொங்கொங்
60.படகு போக்குவரத்து மாத்திரம் நடைபெறும் நாடு?
லாவோஸ்
61.உலகில் தேசிய கொடி இல்லாத நாடு?
மஸிடோனியா
62.உலக செல்வந்தரில் முதலிடம் வகிப்பவர்?
ஜெப்பெ சோஸ்
63.உலகின் முதல் பெண் சபா நாயகர்?
திருமதி. S. தங்கேஸ்வரி (மலேசியா)
64.தேசிய கொடியை முதன் முதல் உருவாக்கிய நாடு?
டென்மார்க் (1219)
65.உலகின் 2 வது பெரிய தனிப் பொருளாதார வலயம் எங்கு உள்ளது?
பிரான்ஸ்
66. சூழலுக்காக அமைச்சு ஒன்றை உருவாக்கிய முதல் நாடுகளில் ஒன்று?
பிரான்ஸ்
67.2024 ஒலிம்பிக் நடைபெற உள்ள இடம்?
பிரான்ஸ் – பாரிஸ்
68.அதிக ஆஸ்கார் விருதுகளை வெற்றி பெற்றவர்?
Walt Disney
69.உலகில் மிகப்பெரிய இராணுவம் உள்ள நாடு?
சீனா
70.உலகில் பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் அதிகம் உள்ள நாடு?
சுவீடன் (Sweden)
71.2011 ஆம் ஆண்டு சமாதானத்திற்கான நோபல் பரிசு வென்றவர்?
கொபி அனான்(7 வது ஐ.நா செயலாளர் நாயகம்)
72.தற்போதுள்ள ஐ. நா செயலாளர் நாயகம்?
Antanio Guteirres (போர்த்துக்கல் நாட்டவர்)
73.’கருடா’ என்ற பெயர் கொண்ட விமான சேவை எந்த நாட்டில் இருந்து இயங்குகிறது?
இந்தோனேசியா
74.மெக்சிக்கோவின் நாணய அலகு எது?
பிசோ
75.பன்றிக் கழிவுகளில் இருந்து மின்சாரம் தயார் செய்யப் போகும் நாடு எது?
தாய்லாந்து
76.உலகத்தின் மிகப்பெரிய வைரம் எது?
குல்லீனியன்
77.பொருளாதாரத்தின் தந்தை யார்?
அடம் ஸ்மித்
78.சந்திராயன் 2 எந்த நாளில் நிலவுக்கு ஏவப்பட்டது?
2019 july 22
79.சந்திராயன் 1 எந்த நாளில் நிலவுக்கு ஏவப்பட்டது?
2008 அக்டோபர் 22
80.விண்வெளிக்குச் சென்ற முதல் மனிதர் யார்?
நீல் ஆம்ஸ்ட்ராங்
81.தென்றலின் வேகம்?
5 முதல் 38 கி.மீ.
82.அதிக அளவில் சர்வதேச நேரம் கொண்ட நாடு எது?
ரஷ்யா
83.உலக வரலாற்றில் பழமையான மரமாக கருதப்படுவது?
பேரீச்சை மரம்
84.கோடைக்காலத்தில் கிறிஸ்துமஸ் கொண்டாடும் நாடு எது?
ஆஸ்திரேலியா
85.உலகின் மிகப்பெரிய வைரச் சுரங்கம் எங்குள்ளது?
தென் ஆப்பிரிக்கா
86.உலகிலேயே அதிக அளவு அணுசக்தியைப் பயன்படுத்தும் நாடு?
பிரான்ஸ்
87.ஒலிம்பிக் கொடி எந்த ஆண்டில் அறிமுகமானது?
1920
88.உலகின் மிகச் சிறிய சந்து எது?
புனித ஜான் சந்து. ரோமில் உள்ளது. 48 செ.மீ. அகலம்.
89.யாழ்ப்பாணத்தின் வற்றாத ஊற்று எது?
நிலாவரை
90.ஜக்கிய நாடுகள் சபையில் இலங்கை இணைந்து கொண்ட ஆண்டு எது?
1955
91.பியானோவைக் கண்டுபிடித்தவர் யார்?
கிறிஸ்ரபோல் ( இத்தாலி, 1709ம் ஆண்டு )
92.தகர உற்பத்தியில் முதன்மையான நாடு எது?
மலேசியா
93.பிலிப்பைன்ஸ் தீவுக்கூட்டத்தில் எத்தனை தீவுகள் உள்ளன?
7
94.பிளாஸ்ரிக் உற்பத்தியில் முதன்மையான நாடு எது?
அமெரிக்கா
95.பிரான்சில் உள்ள ஈகிள் கோபுரத்தின் உயரம் என்ன?
984 அடிகள்
96.தொங்கு தோட்டத்தை அமைத்த பாபிலோன மன்னன் யார்?
நெடுகத் நெசார்
97.இலங்கையில் சமாதான நீதவானை நியமிக்கும் அதிகாரத்தை கொண்டிருக்கும் அமைப்பு எது?
நீதிச்சேவை ஆணைக்குழு
98.இலங்கையில் மலை நாட்டில் தேயிலை செய்கையை ஆரம்பித்த ஆங்கிலேயர் யார்?
ஜேம்ஸ் டெய்லர்
99.ஐக்கிய நாடுகள் தாபனம் மனித உரிமைகளை பிரகடனப்படுத்திய ஆண்டு எது?
1948
100.சார்க் வலையத்தில் மிக வறிய நாடு எது?
பங்களாதேஸ்
101.பர்மாவிற்கு தற்போது வழங்கப்படும் பெயர் எது?
மியன்மார்
102.சர்வதேச செஞ்சிலுவை சங்கத்தினை ஆரம்பித்தவர் யார்?
ஹென்றி டுனாற்
103. போலியோ சொட்டு மருந்தை கண்டுப்பிடித்தவர் யார்?
அல்பேட் சேபின்
104.சுதந்திரத்திற்கான நீண்ட பயணம் என்னும் நூலை எழுதியவர் யார்?
நெல்சன் மண்டேலா
105.சமாதானத்திற்கு வெண்புறாவை பயன்ப்படுத்திய ஓவியர் யார்?
பிக்காசோ
106. உலக சாதனை புத்தகம் கின்னஸ் எத்தனையாம் ஆண்டு முதல் வெளி வந்தது?
1955
107.1994 இல் வியாழன் என்ற கோளுடன் மோதிய மிகப் பெரிய வால் வெள்ளி?
சூமேக்கர் லெவி
108. அமெரிக்க இராணுவத் தலைமையகம் எவ்வாறு அழைக்கப்படும்?
பெண்டகன்
109.உலகில் ஆண்களுக்கும், பெண்களுக்கும் இடையே பாலியல் சமத்துமிக்க நாடுகளில் முதலாவதாக உள்ள நாடு எது?
ஐஸ்லாந்து
110. இலங்கைக்கு முதன் முதலில் அனைத்துலகப் போட்டியில் களப்போட்டியொன்றில் தங்கம் பெற்றுக்கொடுத்தவர் யார்?
எதிர் வீரசிங்க
111. சூறாவளிகள் அதிகமாக உருவாகும் பெருங்கடல்?
அட்லாண்டிக்
112. உலகின் நீண்ட கடற்கரை எது?
மியாமி
113.கணிப்பொறி மொழியைக் கண்டுபிடித்தவர்?
கிரேஸ் கோப்பர்
114.தொலைக்காட்சி எந்த ஆண்டு கண்டுப்பிடிக்கப்பட்டது?
1930
115. அணுகுண்டுவைக் கண்டுபிடித்தவர்?
ஜே. ராபர்ட் ஓபன் ஹெய்மர்
116. உலக தண்ணீர் தினமாகக் கொண்டாடப்படும் நாள்?
மார்ச் 22
117.ஐ.நா. சபைக்கு அப்பெயரை வைத்தவர் யார்?
பிராங்ளின் ரூஸ்வெல்ட்
118.ஐ.நா சபை உருவாவதற்கு முன்பு சர்வதேச அளவில் அமைதிக்காகச் செயல்பட்ட அமைப்பு எது?
லீக் ஆப் நேஷன்ஸ்
119.லீக் ஆப் நேஷன்ஸ் உருவான ஆண்டு எது?
1920
ஆதாரம்:- Robin Thanu
போட்டிப் பரீட்சைகளுக்கான பொது அறிவு வினா விடை தொகுப்பு